என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்
என
வெளிசுற்றும் நான் .
காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது
பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது.
பரிகாசத்துடன்
அதன் நைந்த ஆடைகளை
இன்றைய காற்று
இழுத்துக் கொண்டோடுகிறது ..
வெளிப்படும் புண்கள்
புரையோடியது கண்டு
சூரிய விரல் வருடத் தொடங்க
காற்றில் தொலைத்த ஆடை மறந்து
அதை நோக்கி நகர்கிறது அது!
யாரோ
பாவம் பிச்சி !என்பது மட்டும்
ஏனோ காதில் வந்து விழுகிறது .
மீண்டும் தொட வரும்
என
வெளிசுற்றும் நான் .
காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது
பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது.
பரிகாசத்துடன்
அதன் நைந்த ஆடைகளை
இன்றைய காற்று
இழுத்துக் கொண்டோடுகிறது ..
வெளிப்படும் புண்கள்
புரையோடியது கண்டு
சூரிய விரல் வருடத் தொடங்க
காற்றில் தொலைத்த ஆடை மறந்து
அதை நோக்கி நகர்கிறது அது!
யாரோ
பாவம் பிச்சி !என்பது மட்டும்
ஏனோ காதில் வந்து விழுகிறது .
27 comments:
//காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது///
ரசித்தேன் ரசித்தேன்.....
நைஸ் ஒன் பத்மா..
உள்ளார்ந்த அர்த்தம் சரியாகப் புரியவில்லை . வார்த்தைகளின் தேர்வு அருமை
க்ளாஸ் கவிதை பத்மா.
எப்போதாவது கவிதை எழுதி
எழுதாமல் விட்ட காலங்களை சரிக்கட்டுகிறீர்கள்.
ம்ம்..
ரொம்ப யோசிக்க வெச்சுட்டீங்க.. பார்ப்போம் நாளைக்குள்ள புரியுதான்னு.. ஆனா வரிகள் பல இடங்களில் நல்லாருக்கு.
கவிதை தெளிவாயில்லை பத்மா.
ரொம்ப இடைவெளி விட்டா உங்க ஃபார்ம் காணாமப் போயிடுதோன்னோ எனக்குத் தோணுது.
//என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்
என
வெளிசுற்றும் நான் .//
இந்த வரிகளிகளிலேயே க்ளீன் போல்ட் ஆயிட்டேன் பத்மா...
//பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது//
இதை வாசிக்கிற அப்போதே ஐயுற்றேன், இவள் ஏன் சிறிதளவேனும் கிட்டுகிற அன்பை (பாவப்பட்டு மேல்விழும் ஓரிரு மழைத் துளிகளை) உதறி விலக்குகிறாள் என்று.
//அதை நோக்கி நகர்கிறது அது// என்ற கூற்று என்னை உலுக்கிவிட்டது. அவளும் நம்மைப்போல் உயர்திணைப் பிறந்தவள்தானே?
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி...
நல்லா இருக்கு பத்மா...
நாளை படித்தால் வேற அர்த்தம் கிடைக்குமோ ?
உண்மையை சொன்ன எனக்கு புரியலை
என்றோ தொட்ட காற்றைத் தேடி...
காத்திருத்தலும்,, காத்து சுக்காதலும்..
ம்ம்ம்.. நன்று.
அற்புதமான கவிதை..காமராஜ் சொல்வது போல் அப்பப்ப விட்டுவிட்டு கவிதை எழுதி, எழுதாக காலங்களை சரிக்கட்டி விடுகிறீர்கள்..புது கவிதை வரும் வரை இதைத் திரும்ப திரும்ப படிக்க வைத்துவிடுகிறீர்கள்.. அதாவது ஒவ்வொரு முறையும் வாசிக்கும் தோறும் புதுப் புது அர்த்தங்கள் கொடுக்கும் வகையில் அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்.. தொடர்ந்து எழுதவும்..
அருமையான வரிகளில் அழகான கவிதை, ரசித்து படித்தேன்.
உண்மையைச் சொல்லணும்னா
எனக்கு கொஞ்சம் குழப்பமாத்தானிருக்கு.
மன்னிச்சுடுங்க.
ரொம்ப நாளா ஆளே காணோம். பிப்-14 வேற மாதிரி வரும்னு பாத்தா வேற மாதிரி வருது!
anbu padma,
enakku sariyaa puriyalai... muthal paaravum... moondravadhu paaravum enakku muranaai therikiradhu...
parikaasaththudan adhan naindha aadaikalai indraiya kaatru... nijamagave puriyalai...padma!
anbudan
ragavan
ரசித்தேன்.
//என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்
என
வெளிசுற்றும் நான் .//
பத்மா மேடம்...
இங்கு வரும் தன்னை என்பது என்னை என்று வர வேண்டுமோ? இல்லையென்றால் எனக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்..
ரொம்ப நல்லாயிருக்கு பத்மா ஜி :)
நல்லாயிருக்கு பத்மா !
ஓரிடத்தில் கிடைக்காத அன்பு, இன்னொரு இடத்திலிருந்து கரம் நீட்டி பற்றிக்கொள்கிறதா!!..
@நாஞ்சில் மனோ
மணிஜி
எல் கே
காமராஜ் சார்
அஹமத் இர்ஷாத்
செந்தில் குமார்
தமிழரசி
சுந்தர்ஜி
ஈரோடு கதிர்
ராஜசுந்தரராஜன் சார்
குட்டிப்பையா
வினோ
உயிரோடை
வெட்டி பேச்சு
வெற்றிவேல்
பிரியா
மதுமிதா
ஜெனோ
ராகவன்
சே குமார்
கோபி
அசோக்
ஹேமா
அமைதிசாரல்
நண்பர்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
கச்சிதம் கொஞ்சம் தவறினாலும் கவிதை
பாவம் பிச்சி... இந்த வார்த்தைகள் திரும்ப திரும்ப அசை போட வைத்தன; வெகு நேரம்.
கவிதையின் லாவகம்
அறிந்து
புரிந்து
தெளிந்து
தொலைந்து போனேன்.
மனதை
கொள்ளை கொள்ளும்
அற்புத கவிதை
Post a Comment