ஒரு காலத்தில் அதற்கு
ஒரு விலாசமென்று ஒன்று இருந்தது
சிவப்பு வர்ணமடித்த கதவும்
அதில் கட்டத்தினுள் எழுதி வைத்த இலக்கமும்...
சாதிப் பெயரை நீக்கிய போது
அதன் அடையாள வரி ஒன்று குறைந்தது
ஆட்சியின் புது இலக்கமிடல் விதியில்
அதன் எண்கள் இரண்டாகி
இரண்டுங் கெட்டது
வீதி அகலமானதில்
வெளிச்சுவரும் நசுங்கி
இன்றதன் அடையாளமும்
என்றோ வரும் கடிதத்திலும்
அதன் பெயர்
'படுதா மறைத்த வீடு' என்றாகிப் போனது..
அன்று தனக்கும் ஓர் இலக்கமிருந்ததை
யாருமே வாங்கிக் கொள்ளாத
நசுங்கிய கதவு அவ்வப்போது நினைவூட்ட
கதவிலக்கம் தொலைத்த வீடு
படுதா காற்றிலாட
மெல்ல புன்னகைக்கிறது..
46 comments:
அருமை பத்மா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜானம் பிறந்ததால் வந்த
கவிதை வரிகள் அழகுடன் கருத்தையும் சொல்லுகின்றன
முகவரி தொலைத்(ந்)த வீட்டுக்கு உங்கள் பரிவு முகவரி கொடுத்து புன்னகைக்க வைக்கிறது அற்புதமான இந்தக் கவிதை.
ஒரு இடைவெளிக்குப் பின் நீங்கள் எழுதிய சபாஷ் கவிதை பத்மா.
நிறைய வீடுகள் இப்படிக் கதவிலக்கம் தொலைத்து நிற்கின்றன!
ஒரு சிறுகதையை உரைய வைத்துக்கொடுத்த பனிக்கட்டி மாதிரி இந்தக் கவிதை!
சூப்பரா இருக்குப்பா.. அடையாளம் தொலைந்த வலி...
தொலத்தது வீடா நாமா..:(((
நைஸ் ஒன் பத்மா...
:)
வெகு இலகுவான வார்த்தைகளை வைத்துக்கொண்டு துயர்மிகு வரிககளை கொடுத்திருக்கின்றீர்கள். நல்லா இருக்கு பத்மா மேடம்.
செம கலக்கல் மேடம்.. பல இடங்களில் இடிந்துபோன நிலையில் வெறும் சுவர்களும், நிலைகளையும் மட்டும் தாங்கிய வீடுகளைப்பார்க்கும்போதும் அதற்கென்றிருந்த வரலாறு கண்முன் வரும். இப்போதிந்த கவிதையும்..
அடையாளங்கள் தொலைத்தவையின் நிலைமை. அருமை.
ஒரு சிறு க(வி)தை..
பிரமித்தேன் சகோ
புது வருடம் சிறக்க வாழ்த்துக்கள்
விஜய்
Nice Poem :-)
கவிதை வரிகள் அழகு.
எங்களூர் வீடுகள் ஞாபகத்துக்கு வருகிறது பத்மா !
அருமை பத்மா :) புத்தாண்டு வாழ்த்துகள் :)
100 சதவீதம் கவிதை..
இப்படி அடையாளம் தொலைந்தவைகளை இப்படி நினைவு கூர்ந்தால் அன்றி நினைவுக்கு வருவதில்லை அல்லது தப்பித்தவறி பார்வையில் விழும் போது மட்டும்..
கவிதை அருமை! வயதானவர்களை கேட்டுப் பாருங்கள். வீட்டின் அருமை அவர்களூக்குத் தெரியும்!
நாங்களும் ஒரு வீட்டை ஆசையாய் கட்டி விற்று விட்டோம்! அந்த வழியாய் சென்றாலே என் இதயத்தின் மீது யாரோ நடந்து செல்வது போல இருக்கும்!!
எனக்கு இது பெண்களின் அடையாளம் தொலைவதை நினைவூட்டுகிறது..
சட்டென மனதைத் தொடும் வரிகள்..
வாழ்த்துக்கள்..
அன்பு பத்மா,
படுதா மறைத்த வீடு என்றானதுடன்... முடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது... என் அறிவுக்கு...
அன்புடன்
ராகவன்
நினைவுகள் சுமந்து படுதா காற்றிலாடுகிறது.. அருமை
மாறுபட்ட சிந்தனையைக் கிளர்த்திய கவிதை. வாழ்ந்துகெட்டாலும் மேன்மையாக இருப்பவர்களை நினைவுபடுத்துகிறது இக்கவிதை.
அருமை.
நல்ல இருக்கு கவிதை,,,
சாய் said...
அருமை
என் பெரியப்பா என்பதுகளில் ஜாதி பெயர் எடுக்கவேண்டும் என்று வந்தபோது மாம்பலத்தில் ஒரு தெரு "நாயக்கமார்" என்றிலிருந்து வெறும் "மார்" தெரு ஆனதை பற்றி சொல்லுவார்
நல்லாயிருக்கு பத்மா
nalla kavithai.piramaatham.
thodarka.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/
கவிதை மிக அருமை..
கவிதை நல்லா இருக்குங்க பத்மா
நாம் மறந்த நிறைய விஷயங்களில் 'கதவும்' ஒன்று. மறந்ததை நினைக்கச் செய்த தங்களது கவிதை அருமை. வாழ்த்துகள்.
இலக்கம் தொலைத்த கதவு
இலக்கியம் திறந்தது.
அழகான படிமத்துடன், தொலைந்து போன அனைத்தையும் நினைவு படுத்திய கவிதை..வாழ்த்துகள்
தொலைந்த இலக்கத்துடன் சிதைந்த வீடு சிந்திக்க வைக்கிறது அது தொலைத்த குடும்பத்தைப் பற்றி. அருமை பத்மா.
அருமை ... மிகவும் ரசித்தேன்
இக்கவிதை அடையாளம் தொலைத்தவர்களின் அடையாளம்!
ஆழ்ந்த சிந்தனை .
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
வாழ்த்துகள்!!!
புதிய இடுகை இடுங்கள் அல்லது நம்ம வலைப்ப்பக்கமாவது வாருங்கள் பத்மா மேடம்
என் (மறைந்த) பாட்டியின் (இப்பொழுது இடிக்கப்பட்டு கிடக்கும்) வீட்டை நினைவுபடுத்துகிறஹ்டு. !! :(
விலாசம் தொலைத்தது வீடு மட்டுமல்ல
மனிதமும் கூடத்தான்.
தமிழினத்தைப் போல?
அடையாளத்தை தொலைப்பது என்பது...ஆண்டுகள் ஓடும் போது அவ்வப்போது நடந்தேறத்தான் செய்கிறது...
Post a Comment