Monday, November 1, 2010

வளரும் முத்தம்


தராமல் போன முத்தமொன்று 
நம்மிடையே வளர்ந்து கொண்டே 
போகிறது 

எந்த ஒரு கட்டுக்கும் 
அடங்காமல் 
உடன் என்னிடம் சேர 
துடிக்கிறது 

அதில் நேற்று முளைத்த 
சிறகுகள் 
என் வயிற்றினுள் 
படபடத்துக் கொள்கின்றன 

என் ஒரு சிறுமுத்தம் 
போதும்
அதை மரணிக்க 
இல்லை ஒரு சொல் 
மாத்திரம் !

இருந்தும் 
பேருரு எடுக்கும் அதனை 
புன்னகையோடே வளரவிடுகிறேன் .
வியாபித்து 
என்னையது 
கொல்லும் நாளுக்காக ! 

42 comments:

Praveenkumar said...

நல்லாயிருக்கு..!

Prasanna said...

கவிதையும் ஓவியமும் அருமை..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இடாத முத்தம் விடாது கொல்லுது.
அடாத மொழியுடன் கவிதையும் சொல்லுது பத்மா.

Siva said...

Excellent poem and a Beautiful Art!!

Ashok D said...

சரியா சொல்லுங்க...அது முத்தமா? இல்ல தும்மலா?

தும்மல்ன்னு போட்டு எழுதி பாருங்க... இன்னும் நல்லாவே இருக்கும் ;)

இதயத்திருடன் said...

முத்தம் கொடுத்து விட்டால் மரணித்து விடுமா ?.. அது கொடுக்க கொடுக்க வளர்ந்து கொண்டே அல்லவா போகும்

வெட்டிப்பேச்சு said...

அற்புதம். சொல்லாமல் சொல்லும் வார்த்தைகளின் பிரம்மாண்டம் எதிர்பார்ப்புகளை வளர்க்கிறது.

வாழ்த்துக்கள்.

God Bless You..

மணிஜி said...

நன்றாக இருக்கிறது மேடம்

பத்மா said...

@பிரவின்
தேங்க்ஸ்
@பிரசன்னா நன்றிங்க

பத்மா said...

@சுந்தர்ஜி
இடாத முத்தம் விடாது கொல்லுது.
அடாத மொழியுடன் கவிதையும் சொல்லுது பத்மா.


இதல்லவோ கவிதை
நன்றி நண்பர்

பத்மா said...

thanks siva

பத்மா said...

@அசோக் அண்ணேன்
உங்க கிண்டலுக்கு அளவே இல்லையா
:))))))

பத்மா said...

@இதயத்திருடன்

இதயத்திருடனுக்கு தெரியாததா? :)

பத்மா said...

@மணிஜி
அற்புதங்கள் என்றாவது நிகழ்ந்து விடுகின்றன ..உங்கள் வருகையை போல :)
நன்றி

பத்மா said...

வெட்டி பேச்சு .மிக்க நன்றி

Ahamed irshad said...

என்னே அழ‌கான‌ க‌விதை..ந‌ல்லாயிருக்கு..

தினேஷ்குமார் said...

நித்தம் ஒரு
முத்தம்
நான் சுமக்க
நேரிட்டும்
சத்தம் போடாமல்
சாரல் வீசிற்று
என்னுடன்
நீயிருந்த
மழைத்துளி........

'பரிவை' சே.குமார் said...

கவிதையும் படமும் அருமை...

க ரா said...

ஒவியம் நீங்க வரைஞ்சதா பத்மா.. ஒவியம் , கவிதை ரெண்டுமே அழகு :)

காமராஜ் said...

அதானே... நண்பர் அசோக் சொன்னபடி தும்மலைப் போட்டுப் பார்த்தாலும் சரியாவே
பொருந்திப்போகுது மேடம்.

கவிதை ...நல்லா இருக்குங்க.

r.v.saravanan said...

நல்லாயிருக்கு

மோகன்ஜி said...

அதர ஏர்கள்
உழுத கன்னம் ...
மதுர வயலாய்
காதல் விளைய
இதர வேர்கள்
விட்டுப் போகும்...

ஹ ர ணி said...

பத்மா..

இன்றைக்கு என்ன இத்தனை பரவசம்? இப்போதுதான் சைக்கிள் வலைப்பூவிற்குச் சென்று அற்புதங்களைத் தரிசித்துவிட்டு வந்ததும்.இன்னொரு இழையும் கவிதை வளரும் முத்தம். சொற்முத்தம் மொழி ஈனும். மொழிமுத்தம் நமையாளும் நல்கவிதை மனமாளும் பாங்குடனே..வாழ்த்துக்கள்.

சிவராம்குமார் said...

அருமையான வார்த்தை பிரயோகம்!

தமிழ்க்காதலன் said...

முத்தம் வளர்க்கும் பத்மா....
வணக்கம். நலமா?
எழுத்தில் சொல்ல முடியா
அத்தனை உணர்வுகளும்
அற்புதமாய் வெளிப்படும்
அடையாளம் முத்தம்.
அடைக்க... அடைக்காக்கும்
குஞ்சு குவியல் வேண்டி...
ஒன்று பத்தாய்...நூறாய்...
ஒத்த இடம் தேடும்
ஒத்தடம் கொடுக்க...
இனிதாய் இந்த முத்தம்...
நல்ல நினைவுகளை...
நிலை நிறுத்தும்.
முத்த கொலை...
நிகழட்டும்...!
சத்தமில்லாமல்..!!

அன்பரசன் said...

//என் ஒரு சிறுமுத்தம்
போதும்
அதை மரணிக்க
இல்லை ஒரு சொல்
மாத்திரம் !//

ரசித்தேன்.

தினேஷ்குமார் said...

அக்கா ஒருமுறை வாங்கக்கா பெருமைப்படும் என் பதிவுகள்

http://marumlogam.blogspot.com

முகுந்த்; Amma said...

//இருந்தும் பேருரு எடுக்கும் அதனை புன்னகையோடே வளரவிடுகிறேன் .வியாபித்து என்னையது கொல்லும் நாளுக்காக//

அருமை பத்மா.

Chitra said...

அருமையான கவிதை, பத்மா!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எல் கே said...

ஓவியம், கவிதை இரண்டும் அருமை மேடம்

uma said...

Ahaha arumayana vallarum mutham!!!!!!!!!very nice vallarutum unn kavithi thirann very beautiful

Bala said...

Its nice.

க. சீ. சிவக்குமார் said...

முத்தங்கள் உருக்குமேயன்றிக் கொல்வதில்லை ஒருபோதும்.ஆனா கொன்னா நல்லா இருக்குமில்ல?

ராகவன் said...

அன்பு பத்மா,
திரும்பவும் ராகவன். கவிதை நல்லாயிருந்தது... முத்தம் கொல்லும் நாள்! அட போட வைக்கும் வரிகள்!. தராமல் போன முத்தம் நம்மிடையே வளர்கிறது... நல்லாயிருக்கு... என் ஒரு சிறு முத்தம் போதும் அதை மரணிக்க... இந்த இரண்டு வரிகளுக்கிடையேயான தொடர்பில் ஏதோ சிக்கல் மாதிரி இருக்கிறது... வயிற்றினில் படபடக்கும் சிறகுகள் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள் பத்மா... கடைசி வரியில் உள்ள கவிதை போல... கொஞ்சம் முரனான வரிகளுடன் இருப்பது தவிர... அழகாய் இருக்கிறது மொத்தத்தில்...

அன்புடன்
ராகவன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதையும், படமும் ஜோர்!

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

ரிஷபன் said...

அதில் நேற்று முளைத்த சிறகுகள் என் வயிற்றினுள் படபடத்துக் கொள்கின்றன
வாவ்!

Aathira mullai said...

கொடாத முத்தத்திற்கு விடாத ஆவல்... நல்ல கவிதை..
வாழ்வின் ஆதார சுருதியாய் அன்பு அரசாள, மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க....இறைவனை வேண்டி.. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் பத்மா..

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள் பத்மா

உயிரோடை said...

//தராமல் போன முத்தமொன்று
நம்மிடையே வளர்ந்து கொண்டே
போகிறது //

நல்ல வரிகள் பத்மா

அப்பாதுரை said...

முதல் மூன்று வரிகளிலே கவிதை..

கே. பி. ஜனா... said...

கவிதை அற்புதம்!

அ.வெற்றிவேல் said...

கடைசி வரி ஒரு அற்புதம்.. நல்ல கவிதை