"உனக்கு என்ன வேணும்ன்னு நீ தான் தீர்மானிக்கணும்" ! அனேகமாக என்னுடன் பேசுபவர்களின் தொனி இந்த அளவில் தான் இருக்கிறது .முத்தாய்ப்பாக நேற்று என்னை லிஸ்ட் போடச்சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பு .
என்ன வேண்டும் என யோசித்தே காலம் கழிந்து விடுமோ என்ற பயமும் வரத்துவங்கியாயிற்று.கண்ணாடியில் உற்று நோக்கும் நேரம், அகமும் புறமும் எத்தனை வேறுபட்டு நிற்கின்றன என்ற எண்ணம் வராமல் போவதில்லை
மனதில் இருக்கும் நான் என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள் .(அப்படி நினைத்துக் கொள்கிறேனோ?)
இதற்கு உடனே யாராவது சொல்லலாம் bring out your self .இதெல்லாம் புரியவே இல்லை என்ன வேண்டும் என யோசித்தே காலம் கழிந்து விடுமோ என்ற பயமும் வரத்துவங்கியாயிற்று.கண்ணாடியில் உற்று நோக்கும் நேரம், அகமும் புறமும் எத்தனை வேறுபட்டு நிற்கின்றன என்ற எண்ணம் வராமல் போவதில்லை
மனதில் இருக்கும் நான் என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள் .(அப்படி நினைத்துக் கொள்கிறேனோ?)
இந்த நிஜ என்னை யார் கண்டு பிடிப்பார்கள் ? எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? வேண்டும் தானே அப்போது தானே இந்த misfit will fit !
நிஜமாகவே நான் யார்?
இந்த கேள்வியை கேட்கும் போது வரும் பதிலானது மிகவும் பயம் தரக்கூடியதாகவும் ,சில சமயம் பிறரால் அருவருக்கக் கூடியதாகவும் இருக்கிறது .
மனது பீத்த பெருமையை பற்றிக்கொள்கிறது .அருவருப்பும் அதற்கு உகந்ததாகவே இருக்கிறது.
எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்
ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்
இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை ஆனால் இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை இவை நின்று போனால் அன்று தான் நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ?
