Tuesday, May 4, 2010

நான் பிறந்த நேரம்

எனக்குள் நான்
என்னை தேடிக்களைத்தபின்
பாலை கள்ளியாய்
முட்கள் வளர்த்துக்கொண்டேன்
என்னையே  கிழிக்குமுள் ரணத்தில்
ரத்தம் பெருக சோர்ந்து சிரித்தேன்
வானின்று கீழ் இறங்கிய தேவதை ஒன்று
ஒற்றை எழுத்தாய்
எழுதிச்சென்றது
உன் பெயரை
என் வாழ்வில்
உடன்
என்னில் நான் பிறந்தேன்  

39 comments:

அகல்விளக்கு said...

Very Nice....

எல் கே said...

arumai athuvum antha iruthi varigal miga arumai

ரிஷபன் said...

ஒற்றை எழுத்தா.. ம்..
கவிதையில் பல புதிய பரிமாணங்களைத் தேடி போகிறீர்கள்..

இராஜ ப்ரியன் said...

கவிதை நன்று...,என்ன மாதிரி ஆளுங்களும் புரிஞ்சிக்கற மாதிரி கொஞ்சம் எழுதுங்களேன். :)

Ashok D said...

ரைட்டுங்க...

பஹ்ரைன் பாபா said...

ஒரு சில எண்ணங்களை இப்டியும் யோசிக்க முடியுமா!
எல்லா உணர்வுகளையும் இவ்வளவு அழுத்தமா சொல்ல முடியுமா!
உங்க எழுத்து எனது கேள்விகளுக்கு பதிலாய்.. முடியும் என்று மாத்தி யோசிக்க வைக்கிறது..

ஆத்மார்த்தமா இருக்குங்க..
மனமார வாழ்த்துகிறேன்..

vasu balaji said...

/ஒற்றை எழுத்தாய்
எழுதிச்சென்றது
உன் பெயரை
என் வாழ்வில்
உடன்
என்னில் நான் பிறந்தேன் /

mm. nice.

Chitra said...

very nice. :-)

சுந்தர்ஜி said...

ஐயோ அழகு பத்மா.ரிஷபன் சொல்ற மாதிரி ஒங்க எழுத்து வேற தளத்துல இயங்குது.க்ளாஸ்.

பாச மலர் / Paasa Malar said...

நச் வரிகளில் அழகான கவிதை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பத்மா

ஸ்ரீராம். said...

நல்லா இருக்குங்க கவிதை.

பத்மா said...

அகல்விளக்கு ,
நன்றி

L K
thanks a lot

பத்மா said...

ரிஷபன் அப்படியா ?
எனக்கு தெரில

பத்மா said...

ராஜப்ரியன்
நீங்க கொஞ்சம் கிண்டல் பண்ற மாதிரி இருக்கு :))
உங்களுக்கெல்லாம் புரியாததா

பத்மா said...

ஓகே ஜூட் அசோக்

Madumitha said...

பிறந்த நேர வாழ்த்துக்கள்.

பத்மா said...

பஹ்ரைன் பாபா ,
ஆத்மார்த்தமாய் உணர்வது எதனை மகிழ்ச்சி தெரியுமா?
am really elated .thanks

பத்மா said...

:)) kannan

பத்மா said...

thanks vanambadikal sir

பத்மா said...

thanks chitra

பத்மா said...

சுந்தர்ஜி நீங்கள் படித்ததே பெருமை .
கருத்து என்னை பறக்க வைக்கிறது .
நன்றி ஜி

பத்மா said...

நன்றி பாசமலர்

காமராஜ் said...

ஆஹா, இன்றைக்கு பாலாஜி ஒரு ஸ்டைலில் நீங்க இன்னொரு நடையில் அசத்றீங்க பத்மா.

ஈரோடு கதிர் said...

நல்ல நேரம்தான்

'பரிவை' சே.குமார் said...

நச் வரிகளில் அழகான கவிதை...

ஜில்தண்ணி said...

\\எனக்குள் நான்
என்னை தேடிக்களைத்தபின்
பாலை கள்ளியாய்
முட்கள் வளர்த்துக்கொண்டேன் \\

டச்சி பன்னிப்புட்டீங்க போங்க
ரொம்ப ரசித்தேன்

விஜய் said...

ரொம்ப பிடித்தது சகோதரி

வாழ்த்துக்கள்

விஜய்

க.பாலாசி said...

நல்ல கோர்வு... விடயம் இழுத்துச்செல்லும் தூரம் அதிகம்தான்... மீண்டு(ம்) பிறந்தாலும் ஆனந்தமே....

ஹேமா said...

பத்மா வந்தேன்.இத்தனை நாட்களாகத் தவறவிட்டிருக்கிறேன் இந்த ஓடத்தை.இனி நானும் கூட !

நல்ல நல்ல கவிதைகள் தோழி.
இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை.முன்னுக்குள்ள சிலவற்றைப் புரட்டினேன்.காதலும் நெகிழ்வுமாய் அருமை.இன்னும் இன்னும் வருவேன் தோழி.

Thenammai Lakshmanan said...

பாலை கிழித்தது எனக்கும் சோர்வாய் வலித்தது பத்மா....

பத்மா said...

ரொம்ப நன்றி காமராஜ் சார் .
அசத்தல்லாம் இல்ல எதோ !

கதிர்
பிறக்கட்டும்.நன்றி

சே குமார்
நன்றி

ஜில்லு
வாங்க .நன்றிங்கோ

பத்மா said...

நன்றி விஜய்

அழகான பின்னூட்டம் பாலா
நன்றி

வாங்க வாங்க ஹேமா ,
கருத்திற்கு மிக்க நன்றி
மிகவும் மகிழ்ச்சி தோழி

வலி பகிர்வுக்கு நன்றி தேனம்மை

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ப‌த்மா

Appu said...

உங்க கவிதைகளுக்கு எல்லாம் Inspiration எப்படி வருது? எல்லாம் செம Super!

Anonymous said...

கள்ளியிலும் காதல் கள்ளியிடமும் காதல்..

ursula said...

puthiya kathalukku yen vazhthukkal thozi.

anbudan
ursularagav

அம்பிகா said...

\\வானின்று கீழ் இறங்கிய தேவதை ஒன்று
ஒற்றை எழுத்தாய்
எழுதிச்சென்றது
உன் பெயரை
என் வாழ்வில்\\
அருமை

முகுந்த்; Amma said...

எப்படி பத்மா இப்படி எல்லாம் அருமையா யோசிகிறீங்க.

கலக்கல் போங்க.

கொஞ்ச நாளா வராததால, நெறைய கவிதை மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறன். படிச்சு பார்கிறேன்.