போன வாரம் என் தோழி தன் மூன்று வயது மகன் யத்தினுடன் எங்கள் வீட்டில் தங்க வந்திருந்தார் .தோழி சௌராஷ்டிரா மொழி பேசுபவர் .மகனுடன் தமிழிலும் பேசுவார் .அதனால் யத்தின் சௌராஷ்ட்ரமும் தமிழும் கலந்து அவன் அம்மாக்கு மட்டும் புரியக்கூடிய மழலையில் பேசுவான் .
மூன்று வயதுக்குரிய குறும்பும் மழலையும் வீட்டைக் கலகலப்பாக்கியது.இடம் மாறுதலும் உணவு மாற்றமும் சேர்ந்ததால் அவன் ஒழுங்காய் சாப்பிடவும் இல்லை .ஆனால் சீக்கிரம் தூங்கியும் போனான் .
இரவு பதினொரு மணிக்கு பசித்திருக்க வேண்டும் .தூக்கத்தில் சிணுங்கி எழுந்து கொண்டான் .பசி என்று நாங்களும் அவனுக்கு சாப்பிட எதாவது தர முயற்சித்தோம் .இட்லி, பின்பு சப்பாத்தி ,ரொட்டியும் பாலும் ,பிஸ்கட் , தயிர்சாதம் என ஒன்றொன்றாய் முயற்சித்தோம் .எதையும் சாப்பிட மறுத்து அழுது கொண்டே இருந்தான் .
அவன் மழலையில் எதோ கேட்பது புரிந்தது. ஆனால் தோழி என்னவென்று சொல்ல மறுத்தார் .மிகவும் கம்பெல் செய்ததில்
"அவன் குடிக்க குளிர்பானம் கேட்கிறான் ,இப்போது எங்கே போய் வாங்குவது"என்று அவனை சமாதானப்படுத்தினார் .
அவன் கேட்பானில்லை. வீட்டில் நல்ல வேளையாக எலுமிச்சம் பழம் இருந்தது .
உடனே அதனை சாறு பிழிந்து கொடுத்தேன் .அவன் அதை குடிக்க மறுத்து அழுதான் .தோழி அவனுக்கு பாட்டிலில் வேணுமாம் என்று கூற ,அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன் .
திரும்பவும் அழுகை நிற்கவில்லை. என்னவென்று கேட்டதில் அவனுக்கு மிரண்டா தான் வேண்டுமாம் எனக் கூற ,செய்வதறியாமல் நின்றிருந்தோம் .அழுகையின் சுருதி கூடிக்கொண்டே போனது .
நான் அந்த பழச்சாறில் சிறிது கேசரி கலர் கலந்து ஆரஞ்சு வண்ணமாக்கினேன் .திரும்ப அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன். இப்பவும் அழுகை நின்ற பாடில்லை .எம் எம் என்று சொல்வது மட்டும் புரிந்தது .
தோழிக்கோ கோபம் வந்துகொண்டே இருந்தது .இப்பொழுது என்னவென்று கேட்டதில்
இத்தனை சிறிய குழந்தையின் மனதில் விளம்பரம் இப்படி புக முடியுமானால் ,நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக் கொண்டு வரலாம்?
38 comments:
அந்த பெரியமனுஷன் ரொம்ப சமத்து போல
ஊர காப்பாத்த கிளம்பிட்டிங்க போல
:-))
M for "மிரட்டல்" - சூப்பர் சமாளிப்பு! பாராட்டுக்கள்!
இந்த அளவுக்கு அந்த பிஞ்சின் மனதில் பதிந்து
விட்டதா!!!
Kiva Microfinance
"Loans that Change Lives." Make a Difference and Lend Today!
//நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக் கொண்டு வரலாம்? ///
வந்தாலும் விடமாட்டார்கள்...
விளம்பரங்களின் கவர்ச்சிதான் இதற்குக் காரணம் பத்மா.ஏன் பெரியவர்கள் கூடத்தான்.என் அண்ணி அடிக்கடி சோப் ,ஷம்போ மாற்றி மாற்றி வாங்குவார்.காரணம் இதே விளம்பரக் கவர்ச்சிதான் !
//நான் அந்த பழச்சாறில் சிறிது கேசரி கலர் கலந்து ஆரஞ்சு வண்ணமாக்கினேன் .//
ஒரு பச்சக் கொழந்தைய என்னமா ஏமாத்தியிருக்கீங்க.... பட் அதுவும் நல்லதுக்குத்தான்...
ஆனா குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்கள்தான் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்... எங்கக்கா வாண்டுங்கள்லாம் இப்டித்தான் இருக்குதுக....
போட்டோவும் எடுத்துட்டீங்களா?
உங்கள் இடுகைகளை தமிழ்மணம் திரட்டியிலும் இணையுங்கள்...
P FOR பத்மா. தென்கச்சி ஸ்வாமிநாதனின் இன்று ஒரு தகவல் ஸ்டைல்ல ஒரு நல்ல தகவல் சொல்லி எங்களை அசத்திட்டீங்க போங்க.
அது மிராண்டா இல்லை. மிரிண்டா
வாஸ்தவம்.
:D
அது மிரிண்டாவா ? எங்க ஊர்லேல்லாம் மிராண்டான்னு சொல்றாங்க ...திருத்திக்கிறேன் சதீஷ்
ரொம்பவே தான் ராஜப்ப்ரியன்
என்ன செய்றது மஹி ?யாரவது காப்பாத்தணுமில்ல ?:))
தேங்க்ஸ் சித்ரா .சமாளிப்பு தான்
ஆம் பரோட்டா
மணிஜி விளம்பரகாரர்களே இப்படி கிண்டல் அடிக்கலாமா?
சரி தான் இர்ஷத்
என்ன செய்றது பாலாசி .?அவன் அழுகைய நிறுத்தனுமே
அடடா.. குழந்தைக்கு கூட இங்க பிடிச்ச ட்ரிங்க் குடிக்க சுதந்திரம் இல்ல..
அப்பிடியா ஹேமா? பெரியவர்களும் சில சமயங்களில் குழந்தைகள் தான்
Good one Padma. You did a good job. Its really painful to see how kids got addicted to cool drinks :((
அது என் பெண் எடுத்தது கதிர் சார் .அவனை சிரிக்க வைக்க என்னென்னவோ செய்தோம்
மிராண்டா படித்து
மிரண்டு போய்ட்டேன்.
ஆரம்பத்திலேயே குழந்தைக்கு
பழச்சாறு கொடுத்து
பழக்க வேண்டும்.
பழங்களுக்கும்
விளம்பரம் வந்தால்
நன்றாக இருக்குமில்லே?
என்ன செய்ய..விளம்பர ஊடகங்கள் அவ்வளவு சிறப்பா செயல்படுகின்றன. இது அவர்களின் வெற்றியே...
விளம்பரங்களில் வியாபாரத்தைதான் பார்ப்பார்கள்...விளைவதையா பார்ப்பார்கள்..நல்லா எதிர்பார்த்தீங்க போங்க...
தயவு செய்து கேசரி பவுடர் உபயோகிக்காதீர்கள்
கேசரி என்றால் பழங்காலத்தில் குங்கும பூவினால் தயாரிக்க பட்டு வந்தது
இன்று metanil yellow போன்ற artificial நிறமிகள் கொண்டு தயாரிக்க பட்டு வருகிறது.
இது carcinogenic
நன்றி
விஜய்
கொடுமை தான் பத்மா... அதுவும் இந்த காலத்து சுட்டிக ரெம்ப சுட்டியாதான் இருக்குதுக... ஒண்ணும் சொல்றதுகில்ல... விளம்பரங்களும் அவங்கள டார்கெட் பண்ணி தான் எடுக்கறாங்க
படிக்கும் போது சற்று மிராண்டா...ஸாரி..மிரண்டேன்!!!
முதல்ல சிறு குழந்தைகளுக்கு இப்படி பட்ட குளிர்பானம் தருவதே தப்பு...
தலைமறைவு வாழ்க்கையா அடிக்கடி ப்ரோஃபைல் போட்டோ மாறுதே!!!
///இத்தனை சிறிய குழந்தையின் மனதில் விளம்பரம் இப்படி புக முடியுமானால் ,நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக் கொண்டு வரலாம்? ///
ஒரு பெரிய விஷத்தை மிக அழகா சொல்லி இருக்கறீர்கள்..
சிறுவனோடு நிகழ்ந்த மல்யுத்தத்தை வரிகளாக்கி இருப்பதும் மிக அருமை...
அந்த காலத்தில், மளிகைக் கடையில் யாரோ ஒரு நாட்டுப்புறம் மம்மி..மம்மி..மாடர்ன் ப்ரெட் இருக்கா என்று கேட்டதாக வேடிக்கைக்காக சொல்வார்கள்..விளம்பரத்தின் தாக்கம் அத்தகையது!!
:) romba interesting.. neenga "punnagai mannan" cinemaa paaththathillayaa? chaplin chellappaa thaligeezha thongaraapla irunthathu unga muyarchi.. semma comedy! :D
anyway.. kutties manufacturing ippoolaam munna pola illa pola irukku! :)
,நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக் கொண்டு வரலாம்
கண்டிப்பாக
inndha kutty romba clever yenn memory avanuku gr888 thanks to advertasment on the tv ko
Post a Comment