என் முதல் கதை (please bear)
சுமதியை முதல் முதலில் அந்த ரிசப்ஷனில் தான் பார்த்தேன் .என் தங்கை என்று அண்ணி அறிமுகப்படுத்தினார் .
சுமதியை முதல் முதலில் அந்த ரிசப்ஷனில் தான் பார்த்தேன் .என் தங்கை என்று அண்ணி அறிமுகப்படுத்தினார் .
அவளும் என்னை முதலில் பார்க்கிறாள் .பார்வையால் என்னை போலவே அளவெடுத்தாள்
சுமதி நல்ல சந்தன நிறம்.மாசுமருவற்ற கன்னங்கள்;என்னையறியாமல் என் கன்னங்களை வருடிகொண்டேன் .
என்னை முதலில் கவர்ந்தது அவளின் கால் விரல்கள் தான் .செல்வாவிற்கு கால் விரல்கள் மேல் தனிப் பிரேமை !அவராலேயே நான் அடிக்கடி pedicure செய்து கொள்வேன் .
என் காலும் வெடிப்புகளின்றி ஈரப்பசையுடன் பளபளப்பவை தான் ;ஆனால் சுமதியின் கால் தாமரை இதழ்களை ஒத்து இருந்தது ,
நல்ல வடிவான உடலமைப்பு ,வரிசையான பற்கள்,அடர்த்தியாய் ,குட்டையாய் வெட்டப்பட்ட முடி,நீள விரல்கள்,ரோஜா நிற நகங்கள்,பளபளக்கும் கண்கள். அவள் இடுப்பின் வளைவே ஆயிரம் கதைகள் பேசியது.
கண்கள் விலக்கிக் கொள்ள இயலாமல் பார்த்துக் கொண்டே நின்றேன் .
அந்த ரவிக்கை பின்புறத்தில் அழகாய் இறங்கி பார்ப்பவர்களை எல்லாம் கிறங்கடித்தது.
சுமதி என்ற பெயர் செல்வாவிற்கு மிகவும் பிடிக்கும் .என்னிடம் அடிக்கடி சொல்லிருக்கிறார்.
சுமதியின் அருகே சிறிது நரைத்த தலையுடன் ஒரு மத்திய வயது ஆண் .
"மீட் மை ஹஸ்பன்ட் விஸ்வம் " என அறிமுகப்படுத்தினாள்.அவர் மிகப்பெரிய பதவியில் இருப்பதை கேள்விப்பட்டிருக்கேன் .
அவர்களுக்கு தெரிந்தவர்கள் "சுமதி ஊருக்கு வாயேன் 'என்று அழைத்த போது 'அய்யே இவரோடு நான் எங்கும் போவதில்லை " என முகத்தில்
அடித்தாற்போல் பதில் கூறினாள்.அவர் தர்ம சங்கடத்துடன் நின்றிருந்தார் .
அவளும் அண்ணியும் நான் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப்பற்றி குறையை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு கணம் விஸ்வத்தின் கண்களில் கலக்கமும் நீர் திரையும் கண்டது நிஜம் .
நாங்கள் எங்கு சென்றாலும் செல்வாவிற்கு கொஞ்சம் கூட பிரியக்கூடாது .கூடவே இருந்து ,சிரித்து, அறிமுகங்கள் பெற்று ,நல்லதொரு ஜோடியென்று எங்களுக்குப் பெயர்
அப்போது அவர் மனதில் அவளை ஆசைப்பட்டதும் ஆனால் பெண் கேட்கக் கூடிய நிலையில் இல்லாததால் , நிச்சயம் தனக்கு மணமுடித்து தரமாட்டார்கள் என ஆசையை புதைத்துக்கொண்டதும் கூறினார்
ஆனால் ஒரு கணம் தான்; மறுகணம் 'அது போகட்டும் ,இந்த வைரம் நீ கிடைக்க வேண்டும் என்பதால் தான் அது நடக்கவில்லையோ " என அணைத்துக்கொண்டார் .
இருந்தாலும் எனக்கு மிகவும் ஆவல் .அவர் மனம் கவர்ந்தவள் எப்படி இருப்பாளென்று !
இன்று தான் அது நிறைவேறியது.
மனதில் சொல்லிக்கொண்டேன் "நல்ல வேளை செல்வா ,அவளை நீங்கள் மணக்கவில்லை !உங்களையும் உங்கள் அன்பையும் புரிந்துகொள்ளாமல் இப்படித்தான் அலட்சியமாய் நடந்திருப்பாள்
உதட்டில் ஒரு சிறு புன்னகை ,,இது பொறாமை பட்ட மனதின் சமாதானமா ? இல்லை நிஜமாகவே வந்த நிம்மதிப் பெருமூச்சோ? என்னவென்று தெரியவில்லை
ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் , அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார், படத்தில் என் செல்வா .
45 comments:
என்னங்க இது? இப்படி ஒரு எதிர்பாராத திருப்பம்....? ஓ.ஹென்றி கதை போல இருக்கு..பாராட்டுக்கள்...!!!
நல்ல திருப்பம் இறுதியிலே
கதைக்கு அவார்ட் வாங்கினது முற்றும் பொருந்தும். நிச்சயமாக முதல் முயற்சியானால் சபாஷ். :)
sema twist!super short story
கடைசி மூன்று சொற்கள் தான் கலங்கடிக்குது.
புனைவா?இறுதி வார்த்தைகளில் இன்னுமொரு கதை ஒளிந்து கொண்டிருக்கிற மாதிரி தெரிகிறதே!
முதல் முயற்சி மாதிரி இல்லீங்க. கலக்கல் திருப்பம்.(தேவையான்னு கேட்டுகிட்டே இருக்கேன்)
@@@சி. கருணாகரசு--//கடைசி மூன்று சொற்கள் தான் கலங்கடிக்குது.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
என்னங்க.. கடைசில இப்படி ஒரு குண்டு போட்டுட்டீங்க.. முதல் கதையா.. பேஷ்.. நல்லாவே ஆரம்பிச்சுட்டீங்க.. மனமார்ந்த பாராட்டுக்கள்..
அழகான வடிவமைப்பு இந்த க(வி)தைக்கு கொடுத்திருக்கீங்க... சுமதிக்கான வர்ணனைகள் அருமை... ரசித்தேன்... காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்கிய எழுத்து... முதல் முயற்சியென்பதுதான் என்னையும் பொறாமைப்படவைக்கிறது...
கடைசியில் வைத்த நாட் மனசுல நங்குன்னு அடிச்சமாதிரி ஆயிடுச்சு... சுகமாக்கூட முடிச்சிருக்கலாமோன்னு தோணுது...
//எதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு spark பறந்தது//
படிக்கும் போது எனக்கும்..
எதுவும் தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே கலக்கிறீங்க...
ரசனையான பெண் கதைகொள்ளி நீங்கள்.. keep it up :)
நல்ல கதை. நல்லா எழுதியிருக்கீங்க!
சபாஷ்..சபாஷ்..சபாஷ்..!!!
நல்ல தலைப்பு... நல்ல கதை!
கடைசி வரி எதிர்பாராதது!
நல்லா ரசனையா எழுதி இருக்கீங்க.
முதல் கதை.!!!
:D
கதை ok.
பாட்டு கேட்டேன் பத்மா. நல்ல குரல். அருமையா இருந்தது. 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்கிற வாணி யின் பாடல் பாடி அனுப்புங்க ப்ளீஸ், அது இப்படி இசையில்லாம கேட்க ஆசை.
மெள்ள என்று சொல்லாமல் மெல்ல என்று சொல்லுங்கள் என்றால் கோபப்படவேண்டாம். என் காதுதான் சற்று மந்தம் என்று கொள்கிறேன்.
நன்றி.
முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை.வாழ்த்துக்கள்.....கதை நன்றாக போய் நல்லபடியாகத்தானே முடிந்தது..எதற்கு கடைசி வரி என்று அனைவரையும் யோசனை செய்யவைக்கும்...
முதல் கதைக்கு பாராட்டு.
நல்ல கதையும் திருப்பமும்.
பாராட்டுகள் தோழி.
முதல் கதையிலேயே பின்னிட்டீங்க........ சூப்பர்!
தொடர்ந்து கதை எழுதுங்கள்.....!
கதையை அந்தக் கடைசி வரி இன்னும் ஆழப் படுத்துகிறது.பெருத்த சிரிப்பொலிக்குள் ஒரு விம்மல். நல்ல கதி.
ம்ம்ம்..இப்படி எழுதிவிட்டு எங்ககிட்ட டிப்ஸ் கேட்பதுதான் அடக்கம்.
ரொம்ப நல்லாருக்குங்க.
excellent writing
சூப்பர், நிறைய எழுதுங்கள்
விஜய்
//என் முதல் கதை//
முதல் கதை-க்கு வாழ்த்துக்கள்..
கதை நல்லா வந்திருக்கு.. :)
கதையின் ஆரம்பம் முதல் கதை போலவும் முடிவு உங்கள் உச்சத்தையும் தொட்டது. நீங்கள் நம்பாவிட்டாலும் கதையின் முடிவை நான் யூகித்தேன். நல்ல முதல் கதை பத்மா.
நல்ல முயற்சி
நல்ல திருப்பம்
நல்லா எழுதி இருக்கீங்க.
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள் பத்மா மேடம் .. நல்ல நடை..இன்னும்...
கடைசி வரியில் கலங்கடித்து விட்டீர்கள்...
நன்றாக எழுதியுள்ளிர்கள் .பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க ,மீண்டும் தொடர்ந்து எழுதவும் எனது வாழ்த்துகள்.
ஐயோ...சிரித்து கொண்டிருந்தார் படத்திலா? என்னங்க இப்படி முடிச்சுட்டீங்க? ஆனா... முதல் கதை மாதிரி இல்ல.. சூப்பர்ஆ இருக்கு வார்த்தை கோர்வை
படிப்பதற்கு ஏதுவான நடை. அழகான நதி போல ஓடி சட்டென அணை போட்டது போல நின்று விட்டது.
அது திருப்பமாகவோ அல்லது மனதை தொடுகிற முடிவாகவோ எனக்கு தோன்றவில்லை.
மனதை தொடும்படி முடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் முடித்தது போன்ற தோற்றம்.
- But Good luck for the future ventures.
if u don't mind நடை இன்னும் கொஞ்சம் கனமா இருந்திருக்கலாம்..பொதுவா நிறைய கிரைம் நாவல் படீச்சீங்கனா நீங்களே ரொம்ப அருமையா ஒரு கிரைம் நாவல் எழுதலாம்...நான் ஏன் இப்படிச்சொலறன்னா கடைசி டுவிஸ்ட் வலிய வெச்சுதமாதிரி இருக்கு..மற்றபடி முதல் முயற்சி பாராட்டும் படியாகவே இருக்கிறது...
ரசித்தேன்....
PADMAJAJI can you sing p.suheelaji song from paalum pazhamum Aalaymaniyin osai naan kaatan full song.
//ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் , அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார், படத்தில் என் செல்வா //
என்னங்க இது... இப்படி அழ வெச்சுட்டீங்க?
முதல் கதை மாதிரியே இல்லை...
வாழ்த்துக்கள்
ராமமூர்த்தி சார்,
இப்படிலாம் தாக்க கூடாது :))
நசரேயன் முதல் வருகைக்கு நன்றி
வானம்பாடி சார் முதல் தான் ...its so evident இல்லையா ?
zeno thanks for being so kind
நன்றி கருணாகரசு சார்
ராஜா நடராஜன் .. dont read between lines please :))
இளா வாங்க .நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்
okok ஜெய்லானி
பீஷ்மர் போன்ற உங்களிடமிருந்து வாழ்த்து !நன்றி ரிஷபன்
அடுத்த முறை பாலாசி.நன்றி
அசோக் ரொம்ப தேங்க்ஸ்
HVL வாங்க முதல் முதலா வரீங்க ,மிக்க நன்றி
@கதிர் நன்றி நன்றி நன்றி
நன்றி பிரியா
உங்களுக்கும் நன்றி அம்பிகா
@சாம்ராஜ பிரியன் :))))
பாட்டு கேட்டதுக்கு நன்றி ஆதிரன் .
உண்மையை சொல்ல போனால் அது மெல்லவா இல்லை மெள்ளவான்னு நெஜம்மா எனக்கு தெரியாம தான் பாடியிருக்கேன் .திருத்திக்கிறேன்
உங்க காது மந்தம் அப்படின்னு நான் எடுத்துகிட்டா நீங்க பாட்டை விமர்சனம் பண்ணினது பொய்யா போகுமே !::))) ஆக அப்படி எடுத்துக்கொள்ள இயலாது :))
நன்றி பத்மநாபன்
உங்களுக்கும் நன்றி மதுமிதா
ஹேமா நன்றி
சித்ரா :))
காமராஜ் சார் நா கேட்டது நிஜம்மா
வாங்க ஹுசைனம்மா .:)) நன்றிங்க
@LK :)) THANKS
ஆம் விஜய் நிறைய எழுதினால் தன வசப்படும்:)) நன்றி
சிவாஜி உங்கள் புன்னகையின் பின் பல அர்த்தங்கள் .கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
நன்றி சுந்தர்ஜி
நன்றி உழவன்
R V சரவணன் க்கு நன்றி
மணிஜி தேங்க்ஸ் ங்க
ஸ்ரீராம் ,நன்றி
இளம் தூயவன் நன்றி உங்கள் ID அழகாக உள்ளது
ஆயிரம் கதை எழுதிய தங்கமணி கிட்டேந்து பாராட்டா .தேங்க்ஸ் ங்க
THANKS A LOT நானும் என் கடவுளும் . WILL TRY
நன்றி ஜெர்ரி சார்
சிவா :))
ஐயோ விந்தை மனிதன்
கோமா வாங்க முதல் வருகைக்கு நன்றி
முதல் கதையா? நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தி! நல்ல கதைகளில் சேர்த்தி! -KBJana
cute and painfulll
Post a Comment