Sunday, May 9, 2010

அம்மா எனும் அடுத்த வீட்டுக் குழந்தை

காணுமிடமெல்லாம் தேடிக்  களைக்கிறேன் நான் ........
ஜன்னல் வழி நோக்கும் செம்பருத்தியா    ? 
சுற்றி சுற்றி   வரும் பட்டுப்பூச்சியா  ?
கொல்லையில் கரையும் கருங்காக்கையா ?
நல்லது பலிக்க சத்தமிடும் உச்சிப்பல்லியா  ?
என் வலிக்குப்  பதறும் முகமறியா மூதாட்டியா    ?
என
அன்பிலெல்லாம் உனைக்கண்டு  பனிக்கிறேன் அம்மா !
என் வயிற்றில் வந்துதிக்க
இப்பிறவியில் இயலாதெனினும்
அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!

37 comments:

தமிழ் உதயம் said...

. ஏக்கம் விருப்பமாகி, விருப்பம் கவிதையாகி, நிஜமாய ஈடேறட்டும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம் ...
வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

ம்ம். moving.

கோமதி அரசு said...

அருமையான அவிதை.

உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள். :-)

தோழி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

ஹேமா said...

//அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை...
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே.
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!//

பத்மா இதே ஏக்கத்தோடு நானும் எழுதிய வரிகள்.கிடைக்குமா !
எல்லா அன்னையரயும் நினைத்துக்கொள்வோம் தோழி.

அஹமது இர்ஷாத் said...

Nice Lines...

Priya said...

அழகா எழுதி இருக்கிங்க!

விருப்பம் நிறைவேறிட வாழ்த்துக்கள் + இனிய‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள்.

thenammailakshmanan said...

அருமையான கவிதை அன்னையர் தின வாழ்த்துக்கள் பத்ம்ா

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அம்மா..கவிதை எவ்வளவு அருமையா
இருக்கு?

மயில்ராவணன் said...

mother's day poem...good ya.just now read..fantastic.

பாச மலர் / Paasa Malar said...

அன்னையர் தின வாழ்த்துகள்

ஆடுமாடு said...

அம்மா பற்றி எவ்வளவு எழுதினாலும்,
அந்த வார்த்தைக்கு ஆயுள் ஜாஸ்தி.

அன்னையர் தின வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

இனிய‌ அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்.

முகுந்த் அம்மா said...

அருமையோ அருமை.

//என் வயிற்றில் வந்துதிக்க
இப்பிறவியில் இயலாதெனினும்
அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!//

கண்கள் கலங்குகின்றன.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Jaleela said...

அருமை,அருமை,
அருமையான கவிதை
அன்னையர் தின வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

அம்மாவை நினைத்து கண்களில் நீர்..

D.R.Ashok said...

ஏன் எல்லாரும் அம்மாவ ஞாபகபடுத்திருங்களோ... வேணும்ன்னா அடுத்த ஓட்டு அவங்களுக்கு போட்டுறேனே..

அக்கா தின வாழ்த்துகள்... :))

ஜெய்லானி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

Chitra said...

இப்பிறவியில் இயலாதெனினும்
அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!


..... very touching.

இராமசாமி கண்ணண் said...

good one :-).

உயிரோடை said...

அடுத்த‌ வீட்டு குழ‌ந்தைக்கேனும்...

uma said...

AMMA a very touching one

Anonymous said...

தாயின் மேல் உங்கள் அன்பு அழகான ஏக்கம்..

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் சூப்பர். மிக அருமை பத்மா..

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..

http://fmalikka.blogspot.com

விஜய் said...

மனதை பிசைகிறது கவிதை

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

சுந்தர்ஜி said...

ஒருவேளை உங்கள் கவிதையின் உருக்கம்தான் உங்கள் அம்மாவோ!அனைத்திலும் ஒன்றைத்தேடுவது உயர்நிலை பத்மா.மனசு கனக்கிறது.பின் லேசாகி மிதக்கிறது.

r.v.saravanan said...

கவிதை
அருமை
அன்னையர் தின வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

டச்சிங்

க.பாலாசி said...

//அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!//

அருமை.... வீழ்த்தமுடியாத ஒரு வலிமைச்சொல் அம்மா.... (சொல்லிலும்)

ursula said...

mmm, nice...

anbudan
ursularagav

Madumitha said...

யாதுமாகி
நீ நின்றாய்
அம்மா.
உண்மை..உண்மை..

அப்பாவி தங்கமணி said...

அழகான கவிதை பத்மா... மனதின் ஏக்கத்தை மிச்சம் வைக்காமல் சொல்லிய வரிகள்

சுந்தரா said...

நெகிழவைக்கும் கவிதை பத்மா.

வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!//
 
இந்த வரி ரொம்ப நல்லாருக்குங்க