தனிமைப் பயணங்கள்
விடையனுப்பும் கையசைவுகளும்
ஜன்னல் விரல் பற்றுதல்களும்
கடைசி நேர கலங்கலும்
என்றுமே வாய்த்ததில்லை
என் பயணபொழுதுகளில் .
கேட்டு வாங்கிய ஜன்னலோரத்தில்
முகத்தில் அடிக்கும் காற்றில்
கடந்து போகும் பழைய பாடல்களில்
ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில்
அபூர்வமாய் கிடைக்கும் நட்பில்
சிறிதுநேரம் நம் மடி உறங்கும் மழலையின் மென்மையில்
மறந்து போகும்
இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை...
அடுத்த பயணம் வரை
62 comments:
Touching!
நல்லா இருந்தது பயணம்.
நன்றி ஸ்டார்ஜன்
thanks shankar
க்ளாஸ்........ :)
//சிறிதுநேரம் நம் மடி உறங்கும் மழலையின் மென்மையில்
மறந்து போகும்
இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை...
அடுத்த பயணம் வரை
//
SUPER
//இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை...
அடுத்த பயணம் வரை //
செமத்தியா இருக்குங்க... இதுபோல் எத்தனையோ.... வாசமற்ற மலர்களொத்து.....
எதுல போப்போறோம் எப்படி போப்போறோம் என்றே தெரியாத நிலையில் கையசைக்க யார் வருவார்? என்னையே பார்த்துக் கொண்ட உணர்வு...!
ரொம்ப நல்லாயிருக்கு..
ஏன்.. தமிழ்மணத்துல இணைக்காம இருக்கீங்க
அழகு...அழகு...அழகு...
சூப்பர் வரிகள்.. அருமை...
nice!
anbudan
ursularagav
தனிமையின் பயணக்கவிதை மனதை என்னவோ செய்து தான் விட்டது.
நல்லா இருக்கு..எப்போதோ எங்கேயோ அனுபவித்த மாதிரி...
ரொம்ப இயல்பாய்ச் சோகத்தையும் அதனிடையே சில சுவாரசியங்களையும் சொல்லியிருக்கீங்க.
கவிதை அருமை பத்மா.
வித்தியாசமான எண்ணம். புதுக்காற்று போல.
/ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில்/ நடக்கிற காரியமா? உடான்சா? (ஒரு வேளை bottled இளநீ கிடைக்குதோ இப்பல்லாம்?
ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில்
குடிச்சு பார்த்ததில்ல.. மேல ஊத்திப்பேனு பயம்..
அபூர்வமாய் கிடைக்கும் நட்பில்
இது 100% நிஜம்.. அனுபவபூர்வமாய் உணர்ந்தது..
ரொம்ப நல்லாஇருக்கு:)
சுகமாக ஆரம்பித்து, மெல்லிய சோகமாய்
முடிந்து விட்டது இந்த பயணம்.
nalla irukku. vazhthukal.
மனம் நிறைவாய் உணர்கிறேன்!!
நிஜமாவா அசோக் அண்ணா
thanks velu
நன்றி பாலாசி .நலமா?
நன்றி கதிர். தமிழ்மணம் பட்டை இணைக்கத் தெரியவில்லை
ராஜப்ரியன்
நன்றி:) நன்றி:) நன்றி:)
நன்றி இர்ஷாத்
hi ursula raagav ,
thanks for ur visit .
நீங்க எழுதுங்க .waiting for ur works
அப்படியா தமிழ் உதயம் .நன்றி
அருமை. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. :-)
மிக மிக இயல்பான ஆனால் படிக்கையிலே அள்ளிக்கொண்டு போகிற கவிதை.மற்றும் நிஜம். இளகிய அழகு.
எங்கேயோ எப்போதோ எல்லாருக்கும் நிகழும் தானே பாசமலர்?
நல்லா இருக்கு..
சுகமாய் சோகமான
"தனிமைப் பயணங்கள்"
ok. naan adikkadi kaiyasaippukalaiyum kan kalangalkalaiyum railway station-nil paarkiren. sila nerangalil avarkalin payanamatravarkalin kalakkam ethu saarnthathu enru puriyaathu.
vaazhthukkal padma.
வாங்க சுந்தரா!முதல் வரவுன்னு நினைக்கிறேன் .
உங்க பேரே அழகா இருக்கு .
கருத்துக்கு நன்றி
மேல ஊத்திகிட்டு குடிக்கறது தான் ரிஷபன் டேஸ்ட்
நன்றி
அப்பாதுரை நீங்கள் அவ்வாறு குடித்துப் பார்த்தது இல்லையோ?
அது ஒரு கலை .
மற்றபடி உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி வானம்பாடிகள் சார்
nandri aadu maadu saar
பயணங்கள் எப்போதும் இப்படித்தானே
பரோட்டா ?
ரொம்ப சந்தோஷம் ராமமூர்த்தி சார்
மிக்க நன்றி காமராஜ் சார் .
இப்போதுதான் உங்கள் வலைத்தளத்திலிருந்து வந்தேன்
நன்றி செந்தில் குமார்
தனிமை பயணம்..... மிக அழகா இருக்கு! வாழ்த்துக்கள் பத்மா!
நன்றி ஆதிரன் .இதுக்கு comments வரும்ன்னு நினைக்கல.அதனால இது ஒரு surprise தான் .
கையாட்டலுடன் கூடிய பிரிவு சுகம் தான் .இல்லாத போது,இப்படி கவிதை தான் :) .(இதை கவிதை என்று ஒப்புக்கொண்டால் )
எப்போதும் போல கவிதையான கவிதை... சூப்பர் பத்மா
உலகின் கடைசி இரண்டு
மனிதர் இருக்கும் வரை
நமக்கு யாருமில்லை
என்று நினைக்கக் கூடாது.
//ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில் // கவிதையில் ஒவ்வொரு வரியும் ரசனை மிகுந்த வரிகள் ..கிராம நாட்களுக்கு பிறகு ஸ்ட்ராவோடே அருந்து்வதாலோ என்னவோ.. இன்றி அருந்த ஏங்கும் மனம் ... இதே போல் எல்லா....
நல்ல கவிதை. பத்மா !
பிரியா
தங்கமணி
நானும் என் கடவுளும்
ரொம்ப நன்றிங்க
நீங்க சொல்றது சரிதான் மதுமிதா .அந்த இரண்டு பேர்களும் அவரவர்களுக்கு இருப்பார்கள் .அப்படித்தான் ஆகிவிடுகிறது
நன்றி பத்மநாபன் கருத்துக்கும் வருகைக்கும்
பொறுமையா பதிவு போட்டாலும் கலக்கிவிடுகிறீர்கள்...
நன்றி ராஜராஜசோழன்
என்ன பேருங்க அது!சூப்பர்
அருமையா இருக்குங்க மேடம்......
ரொம்ப எளிமையா சொல்லிடிங்க, ரொம்ப நல்லா இருக்கு
(உங்க எழுத்துக்களை போல்ட் செய்யாமல் போஸ்ட் செய்து பாருங்கள். படிக்கும்போது கண் உறுத்துவதாய் படுகிறது)
கண்கலங்கியது பத்மா.பயணங்கள் எப்போதுமே தத்துவ தரிசனங்களின் குறியீடாகத்தான் எனக்குத் தோன்றும்.அற்புதமான கவிதை இளநீரின் ருசி போல.
வாங்க.. வாங்க.. நல்லாருக்கீங்களா?
ரொம்ப நல்லாயிருக்கு
பூங்கொத்து!
பயணங்களில் வழியனுப்பவோ கூட வரவோ வரவேற்க்க ஆள் வராமல் இருப்பதோ எல்லாமே கொடுமையான விசயமாக இருக்கும். ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
//இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை...
தனிமை பயண வரிகள் அருமை
அருமைங்க.... தொட்டுட்டீங்க.
மீண்டும் படிக்கும்போதும் அதே இனிமை...மனதை அடைக்கும் வெறுமை... எதோவொரு புள்ளியில் ஒத்துப்போகும் அனைவருக்கும் இந்த பயணம்....
(மெயில் பாத்தீங்களான்னு தெரியல... கதிர் சார் உங்களோட இந்த கவிதையை ஈரோடு அரிமா சங்க மலர்ல வெளியிடுவதாக சொன்னார்..)
அவர் சார்பாக நன்றி, என் சார்பாக வாழ்த்துக்கள்..
Post a Comment