Wednesday, February 29, 2012

கண்ணாடிகள் பொய் சொல்லாதடி என அம்மா சொல்கிறாள்இவ்வாடியில் நான் காண்பது
இந்த உயிர் வாழ் பெண்ணையல்ல
கட்டற்ற சுதந்திரம் விழை ஓர் ஆண் 
நிரந்தரமாய் ஆணாய் மாறப் போகும் ஓர் ஆணை !

அதற்கு
சிரங்குக் கட்டி போல் வளர்ந்த மார்பை
தட்டையாக்கி பின் கட்டி வைத்து
சுற்றித்திரியும் சிறார் போல்
தோற்றுவிக்க வேண்டும்

அவனின் பெண்மையான
இருதொடைக்கிடை
கவலையேதுமின்றி 
காற்று புக வேண்டும் .

பின் அவன் குரலையும்
மாற்றி அமைக்க வேண்டும்
ஏனெனில்
அவன் ஆணின் குரலில் பேசுவதாக
ஒருபோதும் யாருமே நம்புவதில்லை

ரோமங்களற்ற முகவாயில்
அவன் சவரக் கத்தி கொண்டு
மழித்துக் கொண்டே இருக்கிறான்
தன் பாவப் பட்ட, செல்லாத, உணர்வுகளையும்...

இப்போது நான் மீண்டும் ஆடியின் முன்
கபடமாடும் பெண் உடல் கண்டு
உடைந்து அழாமலிருக்க
முயற்சித்துக் கொண்டே
ஏனெனில்
அம்மா சொல்வாள்
கண்ணாடிகள் பொய் சொல்லாதடி பெண்ணே என்று !

(இதுவும் ஒரு மொழி பெயர்ப்பு  தான் )


Monday, February 27, 2012

நிலா ரசிகனின் கவிதை ....மற்றொரு மொழிமாற்றம் (தமிழ் தான் எத்தனை அழகு!!!


கடலாடும் தாழி

நீல
நிறம் படர்ந்திருக்கும்
ஆழ்கடலில்

காற்றிலாடியபடி

காற்றில்லா
இடத்தில்
நாம்
அமர்ந்திருக்கிறோம்.
ஒரு
முத்தத்தில் மலர்ந்து
ஒரு
முத்தத்தில் மரணித்த
நம்
உறவின் நடுவே.
மீன்குஞ்சுகள்
நம்மை மொய்க்கின்றன.
கற்பாறைகள்
நிறைந்த
தனித்தீவொன்றில்
ஒதுங்கிற்று
நம்
தாழி.
தாழியுடைத்து

உயிரற்ற
உனதுடலை இழுத்துக்கொண்டு
தீவில்
நடக்கிறேன்.
உடன்
வருகிறது கடல்
மாபெரும்
முத்தமாகி.
Awashed urn

We sit, waftingin the wind,
Amidst the kindness 
That was born
With the kiss and died with the kiss.....
In a breezeless ocean floor
That’s
Swathed in bursting blue!
The fingerlings
Encircle us .
Our urn aground
An isle,thick with rocks
Unsealing the urn, 
I walk,
Dragging your cadaver...
And the sea saunters by
Like a huge, colossal kiss .


Monday, February 20, 2012

வசந்தம் ( மீள் பதிவு )


தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு

மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ

பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம்

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி 

வந்தது வசந்தம்

Sunday, February 19, 2012

அன்பில் திளைத்த இல்லங்கள்

          இந்தப் பாழாய் போன கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனாலும் ஆனது,வலை உலக தொடர்பும்,எழுத வேண்டும் என்ற என் ஆசையும் கூடவே பாழாய் போய்விட்டன இறையருளால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் கிடைக்கப் பெற்றதால் ..இதோ கிளம்பிவிட்டேன் ...அதேயருள் காக்கட்டும் உங்களை ......

பல நாட்களாய் எழுத வேண்டும் என நினைத்து இன்று தான் முடிந்தது நட்புக்கும்,நேசத்திற்கும் நன்றி மக்களே 


நெகிழ வைத்த ,நெகிழ்ந்த இல்லங்கள்  மூன்று 
 
எனக்கு நேசனை  அன்று மிகவும் தள்ளி நின்று வியப்புடனும் பயத்துடனும் பார்க்கக்கூடிய ஒரு கவி  ஆளுமையாகத்தான் தெரியும்.நான் கவிதை என்று எழுதுபவைகளை அவர் வாசிப்பாரா என்று கூட நினைத்திருக்கிறேன்.
ஜிமெயிலில் ஒரு நாள் அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்த பின் தான் அவரின் பெருந்தன்மையான குணம் தெரிந்தது.அந்த வாரமே நான் திண்டுக்கல் செல்கிறேன் என்றதும் தன் வீட்டிற்கு போகும்படி சொன்னார்..இவரன்னையை பார்த்ததே இல்லை .நாங்கள் வரும் வழியில் தன் பேரனை தூக்கிக்கொண்டு காத்துக் கொண்டிருந்தார் அவர் .பின் நடந்ததெல்லாம் அன்பின் பொழிவு தான் ...இருந்த சில நிமிடங்களில் அவர் அன்னையும் பாட்டியும் அன்பினால் மூழ்கடித்தனர் ....திரும்பிய போது ஒரு புது சொந்தம் கிடைக்கப் பெற்றார் போன்ற உணர்வு ....மனமெல்லாம் அவர் கைநிறையத் தந்த ஏலக்காய்  போன்ற வாசம் ...அன்பு மணம் கமிழும் வீடு .....
இறுதியில் ஒரு ரகசியம் ...நேசன் கவிதை எழுதும் மச்சுஅறையையும் மேசையையும் அவர் பாட்டி சுட்டி காட்டினார் ...அவர் கவிதைகளின் பிறப்பின் உண்மை புலப்பட்டது ..
நேசன் அறையின் நேர் எதிரே ஒரு பெண்கள் கல்லூரி ...:)
பின் கவிதை வராமல் என்ன?
இன்று நேசனுக்கு பிறந்த நாள் ..வாழ்த்துக்கள் நேசன் .

பாலாஜி   
இவர் எங்க ஊர் பிள்ளை .எங்கள் ஊர் என்றால் எங்கள் ஊரே இல்லை கொஞ்சம் பக்கத்து ஊர் .இருந்தாலும் ஒரு சொந்த ஊர்  பாசம் இவரிடம் கூட .
பாலாவின் தளத்தில்   இருக்கும்

" எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்."

என்ற வார்த்தைகளைப் பார்க்கும் போது அவர் தன் தாய் தந்தையிடம்
 வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும்  மிகத் தெளிவாகத் தெரிந்தது.இந்த காலத்தில் இப்படி ஒரு  பிள்ளையா என எப்பவும் வியப்பேன்.அவரிடம் பேச்சு வாக்கில் அவருடைய விலாசம் வாங்கி வைத்திருந்தேன் .அவர் ஊர் அருகே  எங்கள் குலதெய்வக்  கோயில் இருந்தது .ஒரு நல்ல மழை நாளில் அக்கோயிலுக்கு   போக வேண்டும் போல் ஓர் எண்ணம் .மழையில்   கிளம்பி விட்டோம்.அப்போதே முடிவு செய்து கொண்டேன் வரும் சமயம் பாலாவின் வீட்டிற்கு செல்வதென .ஒரு ஏழு மணி வாக்கில் நல்ல மழையில் அவர் வீட்டை தேடி கண்டுபிடித்து இறங்க ,யார் என்று வியக்கும் அவர்களிடம் நான் பாலாவின் தோழி என்று சொல்ல,அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை இருந்தும்,அவர் அம்மா அன்புடன் கை பற்றி உள்ள வந்து சாப்பிட்டு போங்கம்மா என்று உபசரித்தார்.நான் சொன்னேன் பாலவிற்கே நான் இங்கு வந்தது தெரியாது ,அவரைப் போல் ஒரு நல்ல மகனை பெற நீங்கள் தவம் செய்து இருக்கிறீர்கள்.அவர் நிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராய் வரக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறன .அவர் உங்கள் மேல் வைத்த பிரியத்தினால் எனக்கு உங்களை பார்த்து இதை சொல்ல வேண்டும் போல் தோன்றியதால் வந்தேன் நிச்சயம் பாலா இதெல்லாம் உங்களிடம் சொல்ல மாட்டார் இல்லையா?  என்று கிளம்பி விட்டோம் .
வெளியே மழை விடவில்லை ....மனதில் பொழிந்த அன்பு மழையும் தான் ..சக்தி   
சங்கமத்தில் சந்தித்தோம் .உடன் நட்பு பற்றிக் கொண்டது ,மேம் மேம்  என்று அவரின் அழைப்பு காதுக்கு இனிமை .டக் என்று உணர்ச்சி வசப் படும் சுபாவம் ..சிரித்துகொண்டே பேசுகிறார்களா இல்லை பேசிக் கொண்டே சிரிக்கிறார்களா என்று தெரியாத படி சிரிப்பும் பேச்சும்.
முரளியின் திருமணத்திற்கு கோவை வருவேன் ஷக்தி என்று சொன்னதும் போதும் மேம் எங்க வீட்ல தான் தங்கணும்என பிடிவாதம்.எப்படியோ நழுவப் பார்த்தும் விடவில்லை .மேம் இன்றைக்கு சோபா புதிது செய்தோம் ,மேம் இன்றைக்கு சிம்னி போட்டோம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் .
அங்கு இருந்த சில மணி நேரங்களுக்கு என்னை எதோ ஒரு வி ஐ பி போல உணரச் செய்து விட்டார் .இத்தனை அன்பிற்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை .எப்போதும் தனித்த பயணங்களுக்கே பழக்கப் பட்ட எனக்கு வழியனுப்ப சக்தியும்,கார்த்திகை பாண்டியனும் ,கௌசல்யாவும் வந்தது எதோ கனவு போல் தோணுகிறது.

அன்பினால் நெய்யப்பட்ட வீட்டில் வாழும் நண்பர்களைப் பெற்ற நான் நிச்சயம் ஆசிர்வதிக்கப் பட்டவள் தான்     


இவர்கள்   மட்டும் தானோ   என்று நினைக்காதீர்கள் ...வேறேதும் இருக்கோ இல்லையோ நல்ல  நட்பு நிறைந்தது என் வாழ்வு.இன்னும் எழுத நிறைய அன்புள்ளங்கள் உண்டு ..எழுதுவேன் 
 

Saturday, February 18, 2012

றியாஸ் குரானாவின் கவிதை ஒரு மொழி பெயர்ப்பு .

இன்று தேரியில்  நடந்த இலக்கிய சந்திப்பில் இவருடைய நூல் விமர்சனமும் ஒன்று.இவ் வேளையில் இவருடைய கவிதை ஒன்றை மொழி மாற்றம் செய்ய முயன்றுள்ளேன்.நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு என்ற கவிதை நூலின் அத்தனை கவிதைகளும் அழகானவை, மனதை ஊடுருவிச் செல்பவை .ஏனோ இந்தக் கவிதை என்னை கொஞ்சம் அதிகம் ஈர்த்தது.திரு குரனாவிற்கும் இது ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன் .

முதலில் கவிதை

கடிதம் பற்றிய வாசிப்பு பிரதி

கடிதம்  எழுதப் பட்டிருந்த  தாளில் ஒரு பாதியில் கடலும் மறு பாதியில் நண்டுகள் போல் சில சொற்களும் ஊர்ந்தன .
கரையில் நடந்து கொண்டிருந்த சொற்களின் காற்சுவட்டை அழிக்கும் விதமாகவும் அலைகள் அடித்தன.
தாள்களை தோண்டி ஒழித்தன சில சொற்கள்.
வெளியில் கரையேறிக் கொண்டிருந்தன சில சொற்கள்
 அவளின் நினைவுகளைப் போல் பேரிரைச்சலாய் அதிர்ந்து கொண்டிருந்த கடலருகே கவனமற்ற ஒரு குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன்
கரையில் ஊர்ந்து கொண்டிருந்த சொற்களை அடுக்கி வாசிக்க முடியவில்லை,சில சொற்கள்,சில எழுத்துக்கள்,சில வாக்கியங்கள்  தரையை பொத்துக் கொண்டு  வெளிவருவதும் ,தோண்டி மறைந்து கொள்வதுமாய் இருப்பதால் அவள் சொல்ல நினைப்பதை  தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவான எதையும் சொல்ல விரும்பவில்லை என்பதை எழுதிருந்தால் போலும் .
சில வேளைகளில் தாளைக் கடந்து  பாயும் அலைகள் அதே வேகத்தில் திரும்பி விடுகின்றன
அடிக்கடி தாளுக்குள் குதித்துவிட விரும்புகிறேன் பின்னரே பின்வாங்கி கரையில் நின்றுவிடுகிறேன்
முன்பொரு வெய்யில் நாளிலும் இப்படித்தான் மழையை எழுதி அனுப்பி இருந்தாள்
தாளில் மிக மிக தூரத்தில் அவளுடைய இரண்டு கண்களும் நீந்திக் கொண்டிருந்தன
மழையை வாசிக்க வாசிக்க நான்  கரைந்ததை நினைத்துப் பார்க்கிறேன்
இத் தாளில் கடிதமாகியுள்ள கடலும் நிலப் பரப்பும்
இனி நான் அடிக்கடி வந்து உட்காருமிடமாகிவிடும் .என் மொழி பெயர்ப்பு  

A TEXT ABOUT READING THE LETTER


The words crawled like crabs
On one half of the paper, the letter was drafted
And the sea on the other.

The waves wiped away
The foot paths of the words
That sauntered on the shore.

Some words hollowed out the papers
And razed them off.
A few words glided ashore towards the bay.

I was playing like a careless child
Close to the sea,
That was bellowing  like her memories.

The slithering words on the shoreline
Could not be assembled and read.

Some alphabets
Some words
Some sentences
Surfaced on and submerged in the floor,
Preventing me to comprehend
Whatever she tried to convey.

Perhaps she had written
That she never wanted to express
Anything that’s definite.

Sometimes
The waves that leap ahead the paper
Revisit with the same speed.

I often yearn to dive into the paper
But vacillate and remain at the shore

Once she had written and forwarded the rain
On one sunny day

Her eyes were swimming
Far, far off in the paper.
And i muse on
The way i melted
Reading the rain endlessly.

The ground and the ocean
That had turned into a letter
In this paper
Will be my haunt   
Henceforth .....