இந்தப் பாழாய் போன கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனாலும் ஆனது,வலை உலக தொடர்பும்,எழுத வேண்டும் என்ற என் ஆசையும் கூடவே பாழாய் போய்விட்டன இறையருளால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் கிடைக்கப் பெற்றதால் ..இதோ கிளம்பிவிட்டேன் ...அதேயருள் காக்கட்டும் உங்களை ......
நெகிழ வைத்த ,நெகிழ்ந்த இல்லங்கள் மூன்று
எனக்கு நேசனை அன்று மிகவும் தள்ளி நின்று வியப்புடனும் பயத்துடனும் பார்க்கக்கூடிய ஒரு கவி ஆளுமையாகத்தான் தெரியும்.நான் கவிதை என்று எழுதுபவைகளை அவர் வாசிப்பாரா என்று கூட நினைத்திருக்கிறேன்.
ஜிமெயிலில் ஒரு நாள் அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்த பின் தான் அவரின் பெருந்தன்மையான குணம் தெரிந்தது.அந்த வாரமே நான் திண்டுக்கல் செல்கிறேன் என்றதும் தன் வீட்டிற்கு போகும்படி சொன்னார்..இவரன்னையை பார்த்ததே இல்லை .நாங்கள் வரும் வழியில் தன் பேரனை தூக்கிக்கொண்டு காத்துக் கொண்டிருந்தார் அவர் .பின் நடந்ததெல்லாம் அன்பின் பொழிவு தான் ...இருந்த சில நிமிடங்களில் அவர் அன்னையும் பாட்டியும் அன்பினால் மூழ்கடித்தனர் ....திரும்பிய போது ஒரு புது சொந்தம் கிடைக்கப் பெற்றார் போன்ற உணர்வு ....மனமெல்லாம் அவர் கைநிறையத் தந்த ஏலக்காய் போன்ற வாசம் ...அன்பு மணம் கமிழும் வீடு .....
இறுதியில் ஒரு ரகசியம் ...நேசன் கவிதை எழுதும் மச்சுஅறையையும் மேசையையும் அவர் பாட்டி சுட்டி காட்டினார் ...அவர் கவிதைகளின் பிறப்பின் உண்மை புலப்பட்டது ..
நேசன் அறையின் நேர் எதிரே ஒரு பெண்கள் கல்லூரி ...:)
பின் கவிதை வராமல் என்ன?
இன்று நேசனுக்கு பிறந்த நாள் ..வாழ்த்துக்கள் நேசன் .
பாலாஜி
இவர் எங்க ஊர் பிள்ளை .எங்கள் ஊர் என்றால் எங்கள் ஊரே இல்லை கொஞ்சம் பக்கத்து ஊர் .இருந்தாலும் ஒரு சொந்த ஊர் பாசம் இவரிடம் கூட .
பாலாவின் தளத்தில் இருக்கும்
" எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்."
என்ற வார்த்தைகளைப் பார்க்கும் போது அவர் தன் தாய் தந்தையிடம்
வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் மிகத் தெளிவாகத் தெரிந்தது.இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என எப்பவும் வியப்பேன்.அவரிடம் பேச்சு வாக்கில் அவருடைய விலாசம் வாங்கி வைத்திருந்தேன் .அவர் ஊர் அருகே எங்கள் குலதெய்வக் கோயில் இருந்தது .ஒரு நல்ல மழை நாளில் அக்கோயிலுக்கு போக வேண்டும் போல் ஓர் எண்ணம் .மழையில் கிளம்பி விட்டோம்.அப்போதே முடிவு செய்து கொண்டேன் வரும் சமயம் பாலாவின் வீட்டிற்கு செல்வதென .ஒரு ஏழு மணி வாக்கில் நல்ல மழையில் அவர் வீட்டை தேடி கண்டுபிடித்து இறங்க ,யார் என்று வியக்கும் அவர்களிடம் நான் பாலாவின் தோழி என்று சொல்ல,அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை இருந்தும்,அவர் அம்மா அன்புடன் கை பற்றி உள்ள வந்து சாப்பிட்டு போங்கம்மா என்று உபசரித்தார்.நான் சொன்னேன் பாலவிற்கே நான் இங்கு வந்தது தெரியாது ,அவரைப் போல் ஒரு நல்ல மகனை பெற நீங்கள் தவம் செய்து இருக்கிறீர்கள்.அவர் நிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராய் வரக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறன .அவர் உங்கள் மேல் வைத்த பிரியத்தினால் எனக்கு உங்களை பார்த்து இதை சொல்ல வேண்டும் போல் தோன்றியதால் வந்தேன் நிச்சயம் பாலா இதெல்லாம் உங்களிடம் சொல்ல மாட்டார் இல்லையா? என்று கிளம்பி விட்டோம் .
வெளியே மழை விடவில்லை ....மனதில் பொழிந்த அன்பு மழையும் தான் ..
சக்தி
சங்கமத்தில் சந்தித்தோம் .உடன் நட்பு பற்றிக் கொண்டது ,மேம் மேம் என்று அவரின் அழைப்பு காதுக்கு இனிமை .டக் என்று உணர்ச்சி வசப் படும் சுபாவம் ..சிரித்துகொண்டே பேசுகிறார்களா இல்லை பேசிக் கொண்டே சிரிக்கிறார்களா என்று தெரியாத படி சிரிப்பும் பேச்சும்.
முரளியின் திருமணத்திற்கு கோவை வருவேன் ஷக்தி என்று சொன்னதும் போதும் மேம் எங்க வீட்ல தான் தங்கணும்என பிடிவாதம்.எப்படியோ நழுவப் பார்த்தும் விடவில்லை .மேம் இன்றைக்கு சோபா புதிது செய்தோம் ,மேம் இன்றைக்கு சிம்னி போட்டோம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் .
அங்கு இருந்த சில மணி நேரங்களுக்கு என்னை எதோ ஒரு வி ஐ பி போல உணரச் செய்து விட்டார் .இத்தனை அன்பிற்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை .எப்போதும் தனித்த பயணங்களுக்கே பழக்கப் பட்ட எனக்கு வழியனுப்ப சக்தியும்,கார்த்திகை பாண்டியனும் ,கௌசல்யாவும் வந்தது எதோ கனவு போல் தோணுகிறது.
அன்பினால் நெய்யப்பட்ட வீட்டில் வாழும் நண்பர்களைப் பெற்ற நான் நிச்சயம் ஆசிர்வதிக்கப் பட்டவள் தான்
இவர்கள் மட்டும் தானோ என்று நினைக்காதீர்கள் ...வேறேதும் இருக்கோ இல்லையோ நல்ல நட்பு நிறைந்தது என் வாழ்வு.இன்னும் எழுத நிறைய அன்புள்ளங்கள் உண்டு ..எழுதுவேன்
10 comments:
Really its a memorable moment wit u ..n ur family ppl r having so much care n affectionate toeards,,,i havent c ppl lik them in this city...awaiting to meet u soon ..
i m really proud to c these words in this blog..
பிரியங்கள் பத்மா,அம்மாவின் அன்பும் :)
:)))))))))))))) negilndhadhu manam.
//நேசன் அறையின் நேர் எதிரே ஒரு பெண்கள் கல்லூரி ...:)//
:)))))))
ஓ! இன்று நேசனுக்கு பிறந்த நாளா? வாழ்த்துகிறேன் நானும்.
உஷ்,
என்ன ரொம்ப நாளா காணோமேனு பார்த்தேன் , இதான் சமாச்சாரமா?
பாழாய் போனது கணினி மட்டுமா தமிழும் தான் ,நல்ல வேளை வந்தீங்களோ பிழைத்தது தமிழ் :-))
நல்ல அன்பான அனுபவங்கள், அன்பெனும் மழையிலே அகிலங்களே நனையும் போது மானிடர்கள் நனையாமல் போகக்கூடாதுனு மழையில் நனைந்துக்கிட்டே போனிங்க போல இருக்கே :-))
ஹி...ஹி பாழாய் போனதால் ரிப்பேர் ஆச்சா இல்லை ரிப்பேர் ஆனதால் பாழாய்ப்போச்சா உங்க கணினி :-))
புது கணினி, புது கவிதைனு கலக்குங்க ;-))
ம்ம் இப்போ எல்லாம் கூகிளில் பிளஸ் ஆகிட்டிங்களா அதான் யாகூல காணோமா?
நேசன் அண்ணனுக்கு வாழ்த்துகள்!
உங்க பதிவை படிக்கும் போதே உங்கள் உணர்வுகள் எங்களுக்குள்ளும் ஊடுருவுகிறது. அன்புக்கேது அடைக்குந்தாழ்?
பாலாசி பற்றிய உங்கள் கணிப்பு உண்மை.
நெகிழ்ச்சியான பகிர்வு. நன்றி.
ஆஹா.. :))
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நேசருக்கு..
என் மீதான உங்களின் அன்பு எப்போதும்போலவே நெகிழவைக்கிறது. அன்றைக்கு அம்மாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி.. காரணகாரியத்தையும், தங்களையும் அவர்களால் இதற்கென அறியமுடியாவிட்டாலும் நானொரு சரியான பாதையில் செல்வதாக உணர்ந்தார்கள்..(என் முந்தையகால சில தவறுகள் காரணம்).. அந்தவகையில் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.
உங்கள் வீட்டிற்கு வந்தபிறகும், உங்களின் வாசிப்புகளை உணர்ந்தபிறகும், நீங்கள் நேசனை பயத்துடன் அணுகுவதுபோல உங்களிடம் எனக்கான பயம் தொற்றிக்கொண்டது.. ஆனாலும் பழகுவதில் அப்படியில்லையென்பதை உணர்ந்தேயிருக்கிறேன்.
இப்பதான் வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு பழகிக்கொண்டிருக்கிறேன், எழுதுவதிலிலிருந்தும்..
எப்போதும்போல நிறைந்த அன்பும் நன்றியும்..
பகிர்விற்கு நன்றி பத்மா மேம் !!!
என்ன தவம் செய்தனை சக்தி !!!
நல் உள்ளங்கள் நட்பாய் வாய்க்கப்பெற்றமைக்கு ::))
உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உடன் பிறவா தமையருக்கு :)
அழகா, சுருக்கமா சொல்லியிருக்கிங்க மேடம். பாலாசியை பற்றிய உங்கள கருத்துக்கள், என்னுடையதும்தான்.
Post a Comment