இவ்வாடியில் நான் காண்பது
இந்த உயிர் வாழ் பெண்ணையல்ல
கட்டற்ற சுதந்திரம் விழை ஓர் ஆண்
நிரந்தரமாய் ஆணாய் மாறப் போகும் ஓர் ஆணை !
அதற்கு
சிரங்குக் கட்டி போல் வளர்ந்த மார்பை
தட்டையாக்கி பின் கட்டி வைத்து
சுற்றித்திரியும் சிறார் போல்
தோற்றுவிக்க வேண்டும்
அவனின் பெண்மையான
இருதொடைக்கிடை
கவலையேதுமின்றி
காற்று புக வேண்டும் .
பின் அவன் குரலையும்
மாற்றி அமைக்க வேண்டும்
ஏனெனில்
அவன் ஆணின் குரலில் பேசுவதாக
ஒருபோதும் யாருமே நம்புவதில்லை
ரோமங்களற்ற முகவாயில்
அவன் சவரக் கத்தி கொண்டு
மழித்துக் கொண்டே இருக்கிறான்
தன் பாவப் பட்ட, செல்லாத, உணர்வுகளையும்...
இப்போது நான் மீண்டும் ஆடியின் முன்
கபடமாடும் பெண் உடல் கண்டு
உடைந்து அழாமலிருக்க
முயற்சித்துக் கொண்டே
ஏனெனில்
அம்மா சொல்வாள்
கண்ணாடிகள் பொய் சொல்லாதடி பெண்ணே என்று !
(இதுவும் ஒரு மொழி பெயர்ப்பு தான் )
3 comments:
கண்ணாடிகள் மட்டும் அல்ல, அம்மாக்களும் பொய் சொல்ல மாட்டார்கள் தானே
nice one padma..
Post a Comment