ஒரு நதியாக ஓடுகிறது
காலம்
வாழ்வு
நேரம்
விதி
பயணிக்கும் இந்நேரமே நம்முடையதாக
அசராது செல்லும்
அவ்வற்றாத ஆறில்
நம் தாத்தனும்
சென்றிருப்பான் ஒரு நாள் .
இக்கணம்
செலுத்தப்படுபவராக
நான்
நீ
மற்றும் நாமெல்லோரும்
எக்கணமும்
அதிலில்லா சாத்தியத்தில்
ஒரு சலனமாவது
உருவாக்க முயன்று
பின்
காணாமல் போவோம் வா
4 comments:
அழகிய கவிதை.
kp my take on salana nathi
ஒரு நதியாக
ஓடுகிறது காலம்
சிறு அலைகளின் மடிப்பில்
சுருண்டு விரிகிறது வாழ்க்கை
இந்த தருணமே
நிச்சயமானதாக இருக்கும் போது
ஒரு கல்லேனும் எறிவோம் வா
சில கணங்களுக்காவது
எதிர்சலனம்
இல்லாமலா போகும்
v s sasikumar
nice
Post a Comment