Thursday, March 15, 2012

இன்றைக்கு வாய்த்தது

என் பேருந்து பயணத்தில்
வழக்கமாய் சிரிக்கும்
அவ்விளஞ் சிவப்பு லில்லிகளைத்
தவறவிட்டாலும்
வரிசையாய் நடப்பட்ட
மூங்கிற் செடிகள்
தலையாட்டி
என்னை நட்பாக்கிக் கொண்டன .

அபூர்வமாய்
உடன் வந்து உடல் தழுவியது
பனிக்காற்று

குட்டிக் கிருஷ்ணன்
வேடமணிந்த
ஒரு குழந்தை
புல்லாங்குழலை என்னிடம் தந்து விட்டு
கடைவாய் ஒழுக 
என் மடி சாய்ந்து உறங்க
பறக்கும் அதன் முடி கோதி
தாலேலோ பாடியது மனம்.

நாளை இதெல்லாம் வாய்க்குமோ
தெரியாது
இன்றைக்கு இது போதும் போ !


(மார்ச்அதீதத்தில் வெளியான கவிதை)

8 comments:

எல் கே said...

:)

சத்ரியன் said...

கடந்து விடும் ஒவ்வொரு மணித்துளிகளில் வாய்த்த எதுவுமே அடுத்த நொடிகளில் வாய்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஓவ்வொரு நொடியையும் வாழ்ந்து விடுவதே சிறந்த வாழ்வு.

சாந்தி மாரியப்பன் said...

//நாளை இதெல்லாம் வாய்க்குமோ
தெரியாது
இன்றைக்கு இது போதும் போ !//

அருமை.. முதலில் இன்றைய கணத்தை நிறைவா வாழ்ந்துக்குவோம் :-)

'பரிவை' சே.குமார் said...

super.

ரிஷபன் said...

இன்றைக்கு இது போதும் போ...

super final touch !

சந்திர வம்சம் said...

[முதல் வரவு]

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் அழகு கவிதை.பத்மாசூரி!

காமராஜ் said...

கிருஷ்ணன் வேடமணிந்த சிறுவனின் வாயொழுகும் இசையும்,அமுதும்,கவிதையுமாகி அழகாகிறது. மிக மிக அற்புதக்கவிதை பத்மா.

everestdurai said...

நல்ல கவிதை