Monday, March 26, 2012

எல்லா வாகையும் ஒரே சமயத்தில் பூக்கின்றன (இன்று உயிரோசையில் வெளியானது )

பின்னந்திப் பொழுதின் நிழலாய் 
கருமை படர் நாள் 
எதிர் பாரா தூறலாய்
நட்புறவு 
நீடிக்கும் இரவாய் 
துயர் 
வான் மினுக்கும் சிறு ஒளியாய் 
உடற்கூடல் 
கிழக்கை வெளுக்கும் ஆதவனாய் 
நம்பிக்கை 
சாலைகளில்
ஒரே சமயம் பூத்துதிர்ந்த 
வாகை

10 comments:

கீதமஞ்சரி said...

வாகை உதிர்ந்துகிடக்கும் சாலையொன்றில் தனித்து நடக்கும் உணர்வினைத் தந்து கிளர்த்துகிறது கவிதை.

ரிஷபன் said...

சாலைகளில்
ஒரே சமயம் பூத்துதிர்ந்த
வாகை


கவிதை தன்னை எழுதிக் கொள்ளும் நேரமிது.

பத்மா said...

மிக்க நன்றி கீத மஞ்சரி வாசிப்புக்கும் கருத்துக்கும் .

Unknown said...

''கிழக்கை வெளுக்கும் ஆதவனாய்
-நம்பிக்கை'' ரசித்துப் படித்த வரிகள்.

Madumitha said...

வெளிச்சத்தையும், இருளையும்
சம விகிதத்தில் சொன்ன கவிதை
அழகு.

Unknown said...

சிறு கவிதை,
வரிகள் அத்தனையிலும் கவித்துவம்.
நான் மிக ரசிக்கும் கவிதை.

அன்பு வாழ்த்துகள் தோழி!

காமராஜ் said...

அருமை பத்மா.

Ashok D said...

அற்புதம்

அப்பாதுரை said...

smart

இராஜராஜேஸ்வரி said...

சாலைகளில்
ஒரே சமயம் பூத்துதிர்ந்த
வாகை -

வாகை சூடி வீசிய சாமரமாய்
வாழ்த்தும் வரிகள்.. பாராட்டுக்கள்..