ஒவ்வொரு புடவையும்
நெய்யப்படும் போதே
தான் யாருக்கென
தீர்மானித்துக் கொள்கிறது
உரியவளின் கை
தன்னை தொடும் வரை
அது தன் அழகை
வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை
ஆயினும் சிலசமயம்
அது ஆள் மாறி சேர்ந்து விடவும் கூடும்
ஒரு சிலைக்கு
உடுத்தப்படுவோம் என்றாசை பட்ட ஒன்று
எங்கோ பிரிக்காமல்
உறங்கியே கிடப்பதுண்டு.
ஆசீர்வதிக்கப் பட்ட சேலைகள் தான்
திருமணத்திலும்
வளைகாப்பிலும்
மிளிர்கின்றன
எனினும்
ஒரு சிறுமி தன் தாய்க்கு
பரிசளிக்கும் சேலை
எல்லாவற்றிலும் உன்னதமகின்றது .
நெய்யும் போதே
வ்ரக்தி அடையும் புடவைகள்
எப்படியோ இறுதி ஊர்வலத்தில்
பங்காகின்றன
பல சேலைகளின் அழகு
அதை பிரித்து அணியும் போது தான் வெளிப்படுகிறது
ஆயின்
சில சேலைகள்
கலை(ளை)யும் போதே
மிக அழகாய் தெரிகின்றன .
10 comments:
அழகான கவிதை வாழ்த்துகள்
nalla irukukka final touch thaan sema :-))
பத்மா புடவையில் இத்தனை கதைகளா? பெண்ணின் பார்வையில் மனதை சொன்ன கவிதை..அசத்தல்..வாழ்த்துக்கள்
நெய்யும் போதே
வ்ரக்தி அடையும் புடவைகள்
எப்படியோ இறுதி ஊர்வலத்தில்
பங்காகின்றன
அப்படித்தான் இருக்குமோ?
சூப்பர் கவிதை
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
புடவைக்கு கவிதை புடவை அணிவிக்கிறதே, ஆச்சர்யக்குறி..
ஹஹ்..
// ஆசீர்வதிக்கப் பட்ட சேலைகள் தான்
திருமணத்திலும்
வளைகாப்பிலும்
மிளிர்கின்றன
எனினும்
ஒரு சிறுமி தன் தாய்க்கு
பரிசளிக்கும் சேலை
எல்லாவற்றிலும் உன்னதமாகின்றது.. //
வரிகள் மனதை தொடுகின்றன.
உங்கள் கவிதைகள் பன்முகத்தன்மையுடன் உள்ளன. பத்மா நீங்கள் மேலும் சிறந்த கவிதைகளை இயற்றுவதற்கு கூறுகள் வெளிப்படுகின்றன
சேலைகளின் தலை(யெழுத்தை)ப்பை நிர்ணயிக்கும் அழகிய கவிதை. மனம் ஈர்க்கிறது பத்மா.
புடவை கவிதை அருமை பத்மா..
இது புடவைகளுக்கு மட்டுமில்ல அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்..
Post a Comment