Thursday, May 6, 2010

பொறியில் சிக்குதல்

எல்லாப் பொறிகளிலும் இலகுவாய்
போய் சிக்கிக்கொள்கிறது சுயம் .
எந்த பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய்  பொறியிலிருந்து இடதுகையால்
தூக்கி எறியப்படும் நானானது
மற்றொரு பொறியில் தான்
தவறாமல் விழுகிறது ,
மீண்டும் மறுமுறை தூக்கி எறியப்பட
எங்கோ உள்ளது தனக்கான இடம்
அது சிக்கும் பொறியாய் இருப்பினும் கூட...
தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !

61 comments:

Madumitha said...

பொறியில் சிக்கிய சுயத்தின்
வலி சுகமா?
என்ன சுக ராகம் சோகம்தானா?

முகுந்த்; Amma said...

பத்மா, பெண்ணா பிறந்துட்டா சுயம் ரொம்ப கம்மியாயிடுதுன்னு நான் நினைக்கிறன். நீங்க சொன்ன மாதிரி ஒரு பொறியில இருந்து அடுத்த பொறிக்கு தான் மாத்தி மாத்தி எறியப்படுவோம்கிறதுதான் என் எண்ணம்.

நல்ல கவிதை

Chitra said...

Good one. :-)

Ashok D said...

திருவிழான்னா கிடைக்குமே அதேன்ன பொறிங்க... (அது பொரியொ?)

சும்மா பொறி பறக்குதுங்கண்ணா..(டூப்புதான்)

//எல்லாப் பொறிகளிலும் இலகுவாய்
போய் சிக்கிக்கொள்கிறது சுயம்//
அதெப்படி ஒரே நேரத்துல போய் சுயம் சிக்கிக்கும் எல்லாப் பொறிகளிலும், First line மட்டும் contradictiona இருக்கு

உங்ககிட்ட ஒரு பொறி இருக்குங்க... கவித சூப்பரு :)

பத்மா said...

ஒரே சமயத்திலேயே வா சிக்கும்? ஒண்ணு ஒண்ணா தான்
அண்ணன் கிண்டல் தான் போங்க
இருந்தாலும் தேங்க்ஸ்ணா

பத்மா said...

thanks chithu

பத்மா said...

நிஜம் தான் முகுந்த் அம்மா .
மாட்டிகறது சுகம் அப்படின்னு நினைக்கிறோம் இல்ல? அதான் வேதனை

பத்மா said...

இல்லை மது
சோகம் இல்லாத சுயம் இது

க.பாலாசி said...

//தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !//

இது சரி....

சூழ்ந்திருக்கும் பொறிகளில் எது நல்லது... யாரரிவார்...குட்டையூறும் மட்டையாய் சுயமும்....

ரிஷபன் said...

சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !
சட்டென்று வார்த்தைகள் பொருந்தி விட்ட அழகு..

அன்பேசிவம் said...

உங்ககிட்ட ஒரு பொறி இருக்குங்க... கவித சூப்பரு :)

நைஸ் கமெண்ட்.
:-)

அட நிஜமாவே உங்ககிட்ட ஒரு பயர் இருக்குங்க.

Ahamed irshad said...

Nice Write up...

பத்மா said...

ஏதும் தெரியாமல் இருப்பதே நல்லது இல்லையா பாலா?

பத்மா said...

நன்றி ரிஷபன் .என்னவோ அமைஞ்சுட்டு

பத்மா said...

ஆஹா முரளி .நன்றி

காமராஜ் said...

திரும்ப திரும்ப வாசிக்கவைக்கும்.
அர்த்தங்கள் கொண்ட கவிதை.
நல்லா இருக்கு பத்மா.

தமிழ் உதயம் said...

வேறு வழி இல்ல.
சிக்கி தான் ஆகணும். ஏனா
வேறு வழி இல்ல.
தரமான கவிதை

ராகவன் said...

அன்பு பத்மா,

தனிமை பயணங்கள் நல்லாயிருந்தது... நீங்கள் கவிதையை முடிக்கிற இடம் கொஞ்சம் மாற்றலாம்... இதே கவிதையை கொஞ்சம் ஜ்ம்பிள் பண்ணி பாருங்கள் இன்னும் அழகாய் இருக்கிறது...

பொறியில் சிக்குதல்...
ஒரே குரல் கேட்கிறது பத்மா... நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்... கொஞ்சம் மாறுதல் கொண்டு வாருங்களேன்...மொழி வசப்படுகிறது உங்களுக்கு எளிதாய்... கொஞ்சம் உள்ளும் பாருங்களேன்.

அன்புடன்
ராகவன்

மரா said...

நல்லா எழுதுரீங்க. வாழ்க்கையை கொண்டாடுங்க எழுத்துக்களில்.....நன்றி

vasu balaji said...

சுயம் ப்ரகாசம்:)

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பத்மா.

Santhini said...

சிக்குவது பொறி
சிக்குவது சுகம்
அறிவது சுயம் !
அறிவில் அழிவதும் சுயம் !
அறிவும் அழிவும் சுகம் !

----------சுகமாய் இருப்பதைத்தவிர வேறு என்னதான் செய்யப்போகிறோம் ? ---இல்லையா பத்மா?

ஹேமா said...

பத்மா....மனசை இலேசாக்காமல் இறுக்கிப் பாருங்கள்.சுயம் எங்களோடுதான்.எங்கள் பேச்சுக் கேட்கும்.இல்லாதவரை ஆபத்து அருகில் தோழி.என் அனுபவம் !

பத்மா said...

மிக்க நன்றி காமராஜ் சார்

பத்மா said...

thanks irshath

பத்மா said...

ஆமாம் தமிழ் உதயம் வேறு வழியில்லை தான்

பத்மா said...

ராகவன் வாசிப்புக்கு நன்றி .உங்கள் கருத்திற்கும் .
மாறுதல் கொண்டு வர முயற்சிக்கிறேன் .
தவறாக நினைக்க வேண்டாம் என்றெல்லாம் கூறவேண்டாம் ப்ளீஸ்
விமர்சனங்கள் தானே நம்மை புரியவைக்கும் ?
நன்றி ராகவன்

பத்மா said...

நன்றி மயில் ராவணன் .முதல் வருகை என்று நினைக்கிறேன்.
கொண்டாடுவேன் வாழ்கையை .அனால் ஊடால கொஞ்சம் கொண்டாட்டம் இன்மையும் இருக்கே !அதான் .நன்றி ராவணன்

பத்மா said...

என்னவோ போங்க வானம்பாடிகள் :)

பத்மா said...

நன்றி ராஜாராம் சார்

பத்மா said...

ஆம் நானும் என் கடவுளும்,
சுகமாய் இருப்பதால் தான் சிக்கிக்கொள்கிறோம்
இப்படியே இருக்கலாம் தானே

பத்மா said...

நன்றாய் சொன்னீர்கள் ஹேமா. ஆனால் அதானே கஷ்டம்?
கருத்துக்கு நன்றி தோழி

இராஜ ப்ரியன் said...

நடத்துங்க.......சீக்கிரமாக புத்தகம் வெளியிடவும்

Anonymous said...

அது சிக்கும் பொறியாய் இருப்பினும் கூட...
தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !

சரியாகச் சொன்னீங்க பத்மா...

சுந்தர்ஜி said...

பொறியில் சிக்கிக்கொள்ளுதல் சில சமயம் சுகமும்,சில சமயம் அபத்தமும்,சில சமயம் அடையாளமுமாக வெளிப்படுத்திக்கொள்கிறது தன் இயல்பை.

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...

ராகவன் சொன்னது போல் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.

உங்கள் ரசனை நல்லாயிருக்கு

DREAMER said...

ஆழமான வார்த்தைகள்...! அருமையாயிருக்குங்க..!

-
DREAMER

தாராபுரத்தான் said...

சுகம்.

பத்மா said...

ராஜா பிரியன் காமெடி பண்றீங்க போங்க

பத்மா said...

நன்றி தமிழ்

சின்னப்பயல் said...

கடலைப் பொரியா..?

பத்மா said...

சரியாய் சொன்னீர்கள் சுந்தர்ஜி

பத்மா said...

மிக்க நன்றி

சே குமார்

ட்ரீமர்

தாராபுரத்து ஐயா .

முரளி உங்களுக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் .

ursula said...

nice thozi!

anbudan
ursularagav

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சிக்குதலும் சுகம்//

அழகான பதிவு... படிக்கற ஒருஒருதருக்கும் ஒரு ஒரு அர்த்தம் குடுக்கற நினைவுகளை தூண்டற பதிவு...

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

யதார்த்தத்தின் வெளிப்பாடு... நன்றாக உள்ளது... :)

Thenammai Lakshmanan said...

எங்கோ உள்ளது தனக்கான இடம்
அது சிக்கும் பொறியாய் இருப்பினும் கூட...
தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் , //

எங்கிருந்தாலும் சிக்குதல் சுகம்தான் பத்மா....மாயையாய் இருந்தாலும்...

ஸ்ரீராம். said...

எல்லாமே ஒரு காம்ப்ரமைஸ்தானே...

Good one

இராஜ ப்ரியன் said...

//இராஜ ப்ரியன் said...
நடத்துங்க.......சீக்கிரமாக புத்தகம் வெளியிடவும்//

//padma said...
ராஜா பிரியன் காமெடி பண்றீங்க போங்க//

என்னது நான் காமெடி பண்றனா? நீங்களும் என்ன காமெடியனாத்தான் பாக்கறிங்க போல.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை

அண்ணாமலை..!! said...

எவ்வளவோ வெண்பா பார்த்திருக்கேன்!
ஆனா, இது மாதிரி ஒரு புதுப்பாவைப் பார்த்ததில்ல!
இந்த மரமண்டைக்குப் புரியாவிடினும்,

பெரியவங்க சொல்றீங்க !
கண்டிப்பா அதுல செய்தி இருக்கும்!
வாழ்த்துகள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிக்குவதே சுகம் தான்...கவிதையில் தான் வார்த்தைகள் என்ன அருமையாய்
வந்து அமர்ந்து கொள்கின்றன!!

பத்மா said...

thanks ragav ,
for being a regular visitor .thanks

பத்மா said...

சின்ன பயல் ஹ்ம்ம் அதே தான்

பத்மா said...

நன்றி தங்கமணி

பத்மா said...

நன்றி நாளை போவான்

பத்மா said...

மாயைன்னு தெரிஞ்சும் சிக்கி உழல்றோம் இல்லையா தேனம்மை

பத்மா said...

yes yes ஸ்ரீராம் .compromise தான் .தேங்க்ஸ்

பத்மா said...

மிக்க நன்றி
உழவன்
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

பத்மா said...

அண்ணாமலை நீங்க தான் பெரியவர் .
நாங்கலாம் chotus .

பனித்துளி சங்கர் said...

எதையும் கஷ்ட்டம் என்று நினைப்பதைவிட இஷ்ட்டம் என்று நினைத்தால் அதிலும் ஒரு சுகம்தான் . உங்கள் பொறியில் சிக்கிய சுயத்தின் வலியின் சுகம் போல . அருமை