யாரோ ஒருவன்
எதோ நினைவில்
புதிதாய் வெள்ளை அடித்த
வெளிச்சுவரில்
பெரிதாய் "ஐ லவ் யு "
என கிறுக்கி வைத்து விட்டு
போய்விட்டான்
திருப்பி
அதையழித்து வெள்ளை அடிக்கலாமா
என கேட்டுவந்தவனிடம்
'வேண்டாம் அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர் இருட்டறையிலிருந்து ....
43 comments:
அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'////
மௌனம் பேசிய உண்மை.
மனதுள் இறங்கிய கவிதை.
:)
//வேண்டாம் அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர் இருட்டறையிலிருந்து ..//
சுவர் இல்லாத சித்திரங்கள்..
தாமதமாக புரிந்தது மிக அருமை
கடுகு:)
காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
சூப்பருங்க...ரசித்த்த்த்த்த்த்த்த்து படித்தேன்.. அருமை..
கவிதை அருமை.
'அது குட்டிச் சுவராய் இருக்குமோ?
பத்மா...பாவம் விட்டிருங்க.
இருட்டில ஒரு மூலையா இருந்திட்டுப் போகட்டும் !
நல்லாருக்கு பத்மா.
வெளியில் வெள்ளை.. உள்ளே இருட்டு.. நல்லா இருக்கு :)
valaiyayum azhag solla mudiyuthu ungalaala
fine kka superb
உள்ளன்பு வற்றி வெளிச்சுவரில் மட்டும் சருகாய் வேடம் தரித்து
வெள்ளை அடிப்போனிடம் நடுங்கிக்
கேட்ட அந்தக்குரல் நவீன நாளின்
குரல் மிக ஆழமாயும் அழகாயும்
வந்தது உங்கள் கவிதையில் பத்மா.
:)
nice one
:-/
:-))
மனிதனின் ஆதார சுருதி.. அன்பு.. காதல். அந்த வார்த்தையைக் கேட்க.. சொல்லத் தவிக்கும் மனசு.
கவிதை படம் பிடித்த காட்சி வெகு அற்புதம்.
அழகான கவிதை உள்ளர்த்தம் புரியூம் போது மிக மிக அருமை!!!
அருமையா இருக்குங்க... இளைஞனோட உள்ளத்த அழகா பதிஞ்சிருக்கீங்க... (ஆமாம்..செவத்துலையாவது இருந்துட்டு போகட்டும்...சேம் ஃபீல்)
கடைசியா ஒத்துகிட்டாங்களா இருட்டறையில் இருந்தவங்க.
இல்லை தான் யார்டயோ சொல்ல முடியாததை இவன் சொல்லிட்டான் என்று நினைச்சிட்டாங்கல
அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்
good
கவிதை அருமை.
@ தமிழ் உதயம்
கவிதை மனதுக்குள் இறங்கியதில் மகிழ்ச்சி
நன்றி நண்பா
@D R ashok :) thanks
ஆம் ஜெய்லானி ..சில சித்திரங்களுக்கு சுவர் கிடைப்பதில்லை
@வானம்பாடிகள் ...
உங்கள் விமர்சனமும் :) நன்றி
ஜெயராமன் முதல் வருகைக்கும் ,விமர்சனத்திற்கும் நன்றி
மிக்க நன்றி பனித்துளி
ரசித்த்த்த்த்த்த்த்த்து படித்ததிற்கு மிக்க்க்கக்க்க்க நன்றி இர்ஷாத்
நன்றி ஸ்டார்ஜன் சார்
@R R R HAHAHA
@ ஹேமா
ஆம் ஹேமா விட்டுடறேன்
@ பா ரா சார்
மிக்க நன்றி சார் .இது உங்கள் தாக்கம் தான்
பல விஷயங்கள் இப்படித்தானே பிரசன்னா ?நன்றி பிரசன்னா
@பாலா நன்றிப்பா.என்ன ஏதும் எழுதலையா ?
விமர்சனமே கவிதையாய் சுந்தர்ஜி ...
இதற்காகவே நான் இன்றும் நன்றாய் எழுத வேண்டும்
நன்றி
@ஆறுமுகம் முருகேசன்
@மங்குனி அமைச்சர்
@சிவாஜி சங்கர்
மூவருக்கும் நன்றி :)
வாங்க முல்லை ..
முதல் வருகைக்கும் ,உங்கள் புன்சிரிப்புக்கும் நன்றி .
ரிஷபன் மிக்க சந்தோஷமாய் உணர்கிறேன் ..
நன்றி
சுரேந்திரகுமார் வாங்க வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிங்க
பாலாசி அழகா உங்க கண்ணோட்டதில பாத்துடீங்க
FETNA தேர்விற்கு பாராட்டுகள் நண்பா
நன்றி
அது அவங்களுக்கு தான் தெரியும் உயிரோடை ...
நன்றி
பத்மா க்ளாஸ். ரொம்ப சின்னதா சுருக்குன்னு.
edhuvum nalla closing :)
Short and sweet.
//'வேண்டாம் அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்' //
********
அதானே.... ஐ லவ் யூ என்பது அங்கேயாவது இருந்து விட்டு தான் போகட்டுமே...
ஆஹா... இருட்டறையிலிருந்து வந்த ஒரு திகில் குரல், சொன்னதோ ஒரு காதல் விஷயம்... உங்க கற்பனையின் எல்லை தான் எப்படி எப்படியெல்லாம் விரிகிறது...
என்னமா மனசை சுண்டி இழுக்கிற கவிதை! கவிதையோடு சேர்ந்து மனசும் ஆடிற்று!
மௌன ராகம்... அழகு பத்மா எப்பவும் போல
அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர் இருட்டறையிலிருந்து .
வலியுடன் இருந்தாலும் அருமை
நல்லாருக்கு மேடம்
Post a Comment