Monday, July 12, 2010
நான் இப்போ சப் ஜெயில்ல !
மாலா அக்கா எங்க ரொம்ப ப்ரிய தோழி .
முதுகலை படிக்கும் சமயம் விடுதி வாசம் .கொதிக்கும் தேநீரின் வாசம் பிடித்தே மாலைப் பொழுது ஓடிவிடும் ..கையில் போதுமான அளவு பணம் இருந்தாலும் செலவு செய்ய பயம் .அக்கா store keeper .நாங்கள் வர,போக திங்கும் மிட்டாய்களுக்கு கணக்கு பார்க்க மாட்டார் .அதனாலேயே ரொம்ப பிடிக்கும் .
என்னவோ அக்காவிற்கும் எங்கள் மேல் ப்ரியம் தான் .பல சமயங்களில் சிறு குன்றில் அமைந்திருந்த எங்கள் கல்லூரியில் இருந்து அவர்களோடு பேசிக்கொண்டே கீழே வந்துவிடுவோம்.
படித்து முடித்த உடனே எங்களுக்கு வேலை .கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் ,கல்லூரி முடிந்து ஊர் வந்து சேர்ந்த மறுநாளிலிருந்து வேலை.
கொடுமை என்னவென்றால் அதுவும் எங்கள் ஊரிலேயே!என்னவோ வாழ்கையை அனுபவிக்காமல் பாரம் சுமக்கிறோம் என்ற மனநிலையில் இருந்த நாங்கள் பட்டமளிப்பு என்ற ஒரு விழா வந்ததும் மகா குஷியோடு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றோம்.
ஒரு நான்கு பேர் பேருந்தில் ஒன்றாக பயணப்பட்டோம் .நாங்கள் செய்த அலப்பறையை கேட்கவும் வேண்டுமா ?பேருந்தில் அனைவரும் முறைத்துக்கொண்டே வந்தனர் ...but who cares?
பேருந்து நகரை சமீபிக்கும் முன் ட்ராபிக் ஜாமில் கொஞ்சம் நிற்க நேர்ந்தது .அப்போது பார்த்தால் எதிர் திசையில் ஒரு பேருந்தில் மாலா அக்கா .அவர்களை பார்த்து இங்கிருந்தே நாங்கள் பேச துவங்கினோம் .
ஒரே சிரிப்பும் உற்சாகமும் தான் .பேருந்து கிளம்ப எத்தனித்துக் கொண்டிருந்தது அப்போதுதானா நாங்கள் உரக்க 'அக்கா !இப்போ எங்க இருக்கீங்க' என கேட்க வேண்டும் ?
இருவருடைய பேருந்து புறப்படவும் ,அக்கா "நா இப்போ சப் ஜெயில இருக்கேன்...நீங்களாம்? என கேட்கவும்" சரியாய் இருந்தது ..
(அவர் சப் ஜெயிலில் அலுவலக உதவியாளராய் மாற்றம் பெற்று சென்றிருந்தார் )
அதன் பிறகு பேருந்தில் மக்கள் எங்களை பார்த்த பார்வை இருக்கிறதே !
நாங்கள் கப் சிப் .
மாலா அக்காவிற்கோ அதற்கு மேல் தர்ம சங்கடம் ஆகி விட்டதாம்
மறு நாள் மாலை நன்றாய் வாங்கி கட்டிக் கொண்டோம் .இருந்தும் இப்போது அக்காவை பார்த்தால் கூட என்னக்கா இப்போ எந்த ஜெயில்ன்னு கேட்கத் தவறுவதே இல்லை !
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ஹா ஹா ஹா...நல்ல பதிவு... சில சமயம் இப்படி தான் ஆய்டும்...
சப்-ஜெயில்? அப்படீன்னா...
புரியலியே..கல்யாணம் ஆயிடுத்தா,
அவங்களுக்கு?
நீங்களும் ரவுடிதான்னு நினைச்சிருப்பாங்க :)
திருமணத்தை மெய்ன் ஜெயில்னு
சில பேர் சொல்றாங்களே அத மாதிரியா?
ஹா ஹா ஹா
எதிர்பாராத தருணங்களில் சாதாரண வார்த்தைகள் கூட இப்படி அதிர்ச்சி தந்து விடும்.. ரசிக்க வைத்தது..
நல்லா கலாய்ச்சிருக்கீங்க.. :))
:-) :-) :-) நல்ல அனுபவம்...
நீங்க எல்லாரும் ரௌடிஅப்டீங்கற விஷயம் அந்த நொடியிலே தெரிஞ்சி போச்சே .....
what a pity...
what a pity...
இதுதான் ராவான ரவுடி என்பதோ ! நல்ல இருக்குங்க
:-))
ரசிக்க வைத்த நல்ல பதிவு..!
சரியாய்ப் புரியவில்லை. சப் ஜெயிலில் என்றால் என்ன வேலையாக இருக்கும் என்று யோசனை.
hi hi hi
பத்மா..ஜெயில்ன்னு சொல்லிப் பயமுறுத்துறீங்க.இருக்கிற தைரியமும் குறைஞ்சு போகுது !
Post a Comment