Thursday, July 22, 2010

சோதனைக் கப்பல்

சோதனைகென்றொரு  
கப்பலை
செலுத்திப்   பார்க்க
துணிந்து விட்டேன் 

போகுமிடம் தெரியாததால் 
அடையும் முகவரி
அறியாததால்
காற்றினை மட்டும் நிரப்பி,
விரைந்து போ
என ஆணையிட்டேன் .

காத்து காத்து
மறந்த ஒரு நாளில்
சோதனைக் கப்பலும்  
இக்கரை அடைந்தது .

காற்றடைத்த இடமெல்லாம் 
காணாவிடங்களிலிருந்து  ,
அன்பின் முகவரி ரொப்பி,
ஆயிரம் மலர்களும்  தாங்கி
என் சோதனைக் கப்பல்
ஒரு சாதனைக் கப்பலாய்!

43 comments:

Prasanna said...

கப்பல் ஓட்டிய தமிழச்சி :)

Madumitha said...

இது மாதிரி நிறைய கப்பல்கள் அனுப்பி
அன்பினையும், மலர்களையும்
சேகரியுங்கள். கவிதை மயக்குகிறது.

எல் கே said...

kappal peru enna padmaa

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Madumitha said...

இது மாதிரி நிறைய கப்பல்கள் அனுப்பி
அன்பினையும், மலர்களையும்
சேகரியுங்கள//

இதையே வழிமொழிகிறேன் பத்மா..:)

சாந்தி மாரியப்பன் said...

இதேபோல் நிறைய கப்பல்களை அனுப்புங்க..

சிவாஜி சங்கர் said...

:)

க.பாலாசி said...

அனுப்பும் கப்பல்கள் யாவுக்கும் இலக்கில்லையெனினும், அன்பை நொப்பிடின் அது சாதனைக்கப்பல்தானே...

நல்லாயிருக்குங்க...

//பிரசன்னா said...
கப்பல் ஓட்டிய தமிழச்சி :)//

:-))))

Riyas said...

ம்ம்ம் கப்பல் கலக்கல்..

r.v.saravanan said...

சோதனை கப்பல் சாதனை கப்பலாய் மாறிய அதிசயம் கவிதை கப்பல் நன்று பத்மா

உயிரோடை said...

ம்ம் சோதனையையே கப்பல் ஆக்கிவிட்டீர்களா

'பரிவை' சே.குமார் said...

கவிதை மயக்குகிறது.

Chitra said...

நிஜமா.... எத்தனை கப்பல்கள் - அதில் எத்தனை கவிதைகள்..... சாதனைதான்.....! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan said...

காணாவிடங்களிலிருந்து ,
அன்பின் முகவரி ரொப்பி,
ஆயிரம் மலர்களும் தாங்கி
என் சோதனைக் கப்பல்
ஒரு சாதனைக் கப்பலாய்..//

அருமை பத்மா ரசித்தேன் டா..

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு சகோதரி.

இது காகித ஓடம் நகர்ந்த தடமா ...

ரோஸ்விக் said...

அடுத்த கப்பல் எப்பக்கா?? :-))

"உழவன்" "Uzhavan" said...

மழைக்காலம் வந்துவிட்டதால், காகிதக்கப்பலும் ஞாபகத்திற்கு வருகிறது :-)

விஜய் said...

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

R.Gopi said...

பத்மா மேடம்....

உங்களின் இந்த சாதனை கப்பலில், நானும் உங்களோடு சேர்ந்து பிரயாணித்தேன்....

கவிதை என் மனதை கவர்ந்தது...

வாழ்த்துக்கள்....

க ரா said...

நல்லா இருக்குங்க :)

ரிஷபன் said...

அட அதுல எங்க எல்லாருடைய முகவரியும் இருக்கே..

ஸ்ரீராம். said...

கப்பல் கவிதை சூப்பர்.... அன்பின் முகவரி ஆயிரம் மலர்கள் தாங்கி வந்த கவிதைக் கப்பல்.

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க

காமராஜ் said...

//காணாவிடங்களிலிருந்து ,
அன்பின் முகவரி ரொப்பி,
ஆயிரம் மலர்களும் தாங்கி
என் சோதனைக் கப்பல்
ஒரு சாதனைக் கப்பலாய்..//

அன்பின் பத்மா.
இப்படி உலகம் முழுக்க
பூத்திருக்கிற அன்பெடுத்து சேகரிக்க
அன்பால் மட்டுமே சாத்தியம்.

ஆசுவாசமான வார்த்தைகளில் நம்பிக்கை அடர்த்தியாய் இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி.

ஆடுமாடு said...

காகித கப்பல், முத்தக்கப்பல், காகித கப்பல்... ஒரே கப்பலா இருக்கு?

Anonymous said...

anbai sumanthu vantha adhisaya kappal indraiya andrada vazhkai payanathuku thevai ikkappal....

சுந்தர்ஜி said...

மலர்களின் சேகரம் கவிதையின் சொற்களில்.வசீகரித்ததது இந்தக் கப்பலும்.

பத்மா said...

பிரசன்னா :))

பத்மா said...

நன்றி மதுமிதா

சோதனை கப்பல் தான்@LK

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து

அனுப்பலாமே :)) @அமைதி சாரல்

பத்மா said...

@ SIVAJI SANKAR :))

நன்றி பாலா சி

ம்ம் தேங்க்ஸ் ரியாஸ்

நன்றி சரவணன்

ஆம் உயிரோடை

மிக்க நன்றி குமார்

பத்மா said...

வாங்க சித்ரா .நல்வரவு .நன்றி

தேங்க்ஸ் தேனம்மை

நன்றி கமலேஷ் ..இருக்கலாம்

நாளைக்கே கூட இருக்கலாம் ரோஸ்விக். ரொம்ப கொடுமை படுத்த கூடாதென்று தான் சிறிது இடைவெளி விட்டு

பத்மா said...

மழை இல்லாத நேரம் கூட இங்கு கப்பல் உண்டு உழவன்

நன்றி விஜய்

எனக்கு தெரியாமல் எப்படி பயணம் ? நன்றி கோபி ..

நன்றி ராமசாமி

@ரிஷபன் .கண்டு பிடிச்சிடீங்களா ?

பத்மா said...

ஸ்ரீராம் நன்றி நன்றி

@அன்பரசன் தேங்க்ஸ்

மிக்க நன்றி காமராஜ் சார்

ஹிஹிஹி @ஆடு மாடு

@தமிழரசி சூப்பர்

@வாசிப்புக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி .மகிழ்ச்சி

priyamudanprabu said...

நல்லாயிருக்கு


///
ரொப்பி,
///

இது மற்ற வார்த்தை வழக்குகளோடு பொருந்தாமல் தனியே இருக்கு என் தோனுது எனக்கு

முனியாண்டி பெ. said...

It's too good. if you time read my blog

http://adisuvadu.blogspot.com/2010/07/1.html

இந்திரா said...

மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

இந்திரா.
(தீவு.கோம்) .

pinkyrose said...

அட அதுல எங்க எல்லாருடைய முகவரியும் இருக்கே.///

அதானே!

Aathira mullai said...

கப்பல் பெரியதாக உள்ளது.. சரக்கும் அதிகமாக உள்ளன. என் அன்பையும் ஏற்றி அனுப்பி விட்டேன்.. நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் பத்மா..

அன்புடன் நான் said...

சாதனை கப்பல் அல்ல அது,
சாதித்த கப்பல்!
நல்லாயிருக்குங்க.

ராசராசசோழன் said...

சிறப்பான கவிதை....

ப்ரியமுடன் வசந்த் said...

kalakkareenga padma :)

பத்மா said...

வாசித்து கருத்து கூறிய

பிரபு
முனியாண்டி
இந்திரா
பிங்கி ரோஸ்
ஆதிரா
கருணாகரசு
ராஜராஜசோழன்
வசந்த்

ஆகியோருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

uma said...

Aahaa yenna arumaiya kappal tell me how many more ship you have in stock padmaja?will this ship comes to my place you are the capitn of this na

bogan said...

இதுதாங்க கவிதை!