Tuesday, July 20, 2010

கலாப்ரியா கவிதை

ஒரு மொழியில் ,ஒரு இனத்தில் ,
ஒரு முறை தான் நிகழும் அற்புதம் கலாப்ரியா 
                                                                                                           ---விக்கிரமாத்தியன் இந்த வருடம் சிற்பி இலக்கிய விருது  வாங்கும் திரு கலாப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .அவருடைய கவிதை ஒன்றினை மொழி மாற்றம் செய்ய முயற்சித்துள்ளேன் .
என் முயற்சி வெற்றி என்றால் மகிழ்ச்சி
கவிதையினை பங்கம் செய்திருந்தால் மன்னிக்கவும்
தமிழின் இனிமையையும் அழகையும் எந்த மொழிலும் புகுத்தல் கடினம் ..எனினும் என் சிறு பிரயர்த்தனை .

----------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         DID WE MEET?

WE FAILED TO MEET
THOUGH
WE DID MEET

BY CONSENSUS
WE CHOSE
NOT TO SIT BY THE TREE
WITH TREPIDATION
FOR THE BIRDS DROPPINGS
ON US

THE MOMENT
WE SAT ON GRASS
WE GLIMPSED AT AN ANTHILL
FRANTICALLY TRYING TO CAVE IN ,
AND OUT CAME SOME INSECTS
UNBALANCED AND SCURRYING ....
YOUR FORE FINGER TOO REMAINED
A BOOK MARK,
TO OPEN THE PAGE YOU LIKED
HOWEVER IDLE FOR LONG

AS WE FAIL TO NOTE ,
THE FINEST ATTRIBUTES OF A MOVIE ,
JUST BY READING AND FAILING ,
AND TRAILING BEHIND THE SUBTITLES ..

WE COULD NEVER
MEET EACH OTHER
ALTHOUGH...
WE MET ONE FINE DAY

-----------------------------------------------------------------------------------------------------------------

                                           துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது

 பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு  விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று

 

36 comments:

அஹமது இர்ஷாத் said...

Nice..

பா.ராஜாராம் said...

மிக நல்ல பகிர்வு பாஸ்!

kalapria said...

it came good , it very much has the central idea.thanks padma for chosing apoem i myself like very much

Anonymous said...

மொழிபெயர்ப்பு நல்லா வந்திருக்குங்க. சில இடங்கள்ல ஆங்கிலத்தோட ஒட்டாத மாதிரி ஒரு அன்னியம். தமிழோட வாக்கிய அமைப்பு அப்படியே ஆங்கிலத்துக்கு போகனும்னு அவசியம் இல்லையே... இத முதல் படியா (draft) வெச்சு இன்னும் செம்மை படுத்தி, நிறைய சொற்கள தூக்கிட்டீங்கன்னா கச்சிதமா வரும்னு தோணுது.

நன்றி.

- சித்தார்த்.

r.v.saravanan said...

நல்ல பகிர்வு நன்றி

ரிஷபன் said...

நல்ல கவிதை.. நல்ல முயற்சி..

செல்வராஜ் ஜெகதீசன் said...

Good work.
Keep it up.

பிரசன்னா said...

மிகவும் நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் :)

ஒரு சில்வண்டின் ரீங்காரம்:

//THOUGH
WE DID MEET//
இது இருக்க கூடாதோ?

//WITH TREPIDATION//
இந்த பயத்தை, தமிழில் வெளிப்படையாக சொல்லாமல் சொல்லி இருப்பார்.. இது வேண்டாமோ?

உங்கள் வார்த்தை தேர்வுகள் அருமை.. எனக்கு பட்ட சிலது இவை.. நான் சொன்னது தவறாக இருக்கலாம்.. சொல்லவும் :) தலைப்பு அருமை..

Madumitha said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கிட்டதட்ட மூலத்திற்கு நெருக்கமாய்
வந்துள்ளது உங்களின் மொழிபெயர்ப்பு.
இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால்
கிட்டதட்ட என்ற வார்த்தையை
எடுத்திருப்பேன்.
தொடருங்கள்.

Sangkavi said...

Super....

பத்மா said...

thanks irshath

நன்றி பா ரா சார்

பத்மா said...

மிக்க நன்றி கலாப்ரியா சார்

பத்மா said...

நன்றி சித்தார்த் ...முயற்சிக்கலாம் ..
தங்கள் கருத்துக்கு நன்றி .

பத்மா said...

@சரவணன்
@ரிஷபன் சார்
@செல்வராஜ்

ரொம்ப நன்றிங்க

பத்மா said...

thank you prasanna for your eloborate comment.
நன்றி

பத்மா said...

அடுத்த முறை உங்களிடமிருந்து சபாஷ் வாங்க முயற்சிக்கிறேன் மதுமிதா சார் ..நன்றி

பத்மா said...

thanks sankavi

Priya said...

Great Padma!

அப்பாவி தங்கமணி said...

Simply Superb. Good job Padma

D.R.Ashok said...

நாம் சந்தித்தோம்...
சந்தித்தோமா?

(எப்டி நாங்களும் எழுதுவோம்ல)

காமராஜ் said...

ரொம்ப அருமையா வந்திருக்கு பத்மா.
வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள் தோழி.

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி... பாராட்டுக்கள்.

சே.குமார் said...

மிக நல்ல பகிர்வு.

சுந்தர்ஜி said...

சபாஷ் பத்மா.

கலாப்ரியா சொன்னதுபோல கவிதையின் தேர்வு தனித்வத்தோடும் எல்லா மொழிக்கும் பொதுவான உணர்வைச் சொல்வதாகவும் அமைந்திருந்தது.

இங்லீஷில் இருந்து தமிழில் பண்ணினாலும் இதே விலகல் கொஞ்சமிருக்கத்தான் இருக்கும்.ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பலமும் பலவீனமும் உண்டு.

உங்கள் மொழிபெயர்ப்பை மட்டும் தனியே படித்தால் ஒருவேளை வேறு ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கலாம்.

ஒரே குறையாகத் தெரிந்தது வடிவத்தையும் பொருளையும் ரொம்பவும் நெருக்கமாக மூலத்துடன் கொண்டுசென்றதுதான்.

என்னோடதயும் ஒங்ககிட்ட கொடுத்தா பெயர்ப்பீங்களா பத்மா?

நாளைப்போவான் said...

நல்ல முயற்சி பத்மா... நன்றாக இருக்கிறது

thenammailakshmanan said...

நல்லா மொழி பெயர்த்து இருக்கீங்க பத்மா.. அருமை..

கமலேஷ் said...

அருமையான பகிர்வு சகோதரி.
நீங்கள் தேர்வு செய்து இருக்கு கவிதையும் உங்களின் ரசனையை பறை சாற்றுகிறது.
நான்றாக மொழி பெயர்த்து இருக்கிறீர்கள்.

ஜெரி ஈசானந்தன். said...

Bravo.

ஜெரி ஈசானந்தன். said...

pathma madam,iam learning from you.

ஜெகநாதன் said...

மொழிபெயர்ப்பு ஆழ்ந்த படைப்பாற்றல் கொண்டது. நான் ஆங்கிலப் பிரதியையும் மட்டும் வாசித்தேன். தமிழ் மூலத்தை வாசிக்கவில்லை. அதுவே போதும் என்று தோன்றியது.
படைப்பாளியை மொழிப்பெயர்ப்பாளர் தன்னை நிறுவுவது இப்படித்தான்.

பத்மா said...

நன்றி ஜெகநாதன்

ராகவன் said...

அன்பு பத்மா,

நல்ல மொழிபெயர்ப்பு முயற்சி... இது போல வார்த்தைகள் உங்களுக்கு மட்டுமே வாய்க்கும்... கலாப்ரியாவிடம் இருந்து அன்பும் வாழ்த்தும் வேறு... பத்மா... சிறகுகளுடன் மிதப்பது எனக்கு காண வாய்க்கிறது.


சில இடங்களில் மொழிமாற்றம் நிரடுவதாய் படுகிறது... கலையத்தவிக்கும் எறும்பு புற்று,
புத்தகத்துக்குள்ளே வைத்திருந்த விரல் என்று கலாப்ரியாவின் மூலத்திற்கும், உங்கள் மொழி மாற்றத்திற்க்கும் கருத்து ரீதியான நெருடல் இருப்பதாய் படுகிறது எனக்கு. ஆனாலும் என்னால் முடியாது இது போல எழுத...

வாழ்த்துக்கள்...

அன்புடன்
ராகவன்

பிரியமுடன் பிரபு said...

நல்ல பகிர்வு

uma said...

super padmaa

யாத்ரா said...

ரொம்ப நல்ல கவிதை, ரொம்ப நல்லா மொழியாக்கம் செய்திருக்கீங்க, பகிர்வுக்கு நன்றி