Friday, July 16, 2010

எதோ ஒன்றிற்கு அல்லது எல்லாவற்றிற்கும்

பறக்க ஏலா
பறவைச் சிறகாய்
பதுங்கிச்  சிணுங்கும் மனம்...
எழுதாவொரு  வரி
பாடாதொரு  இசை
பேசாதொரு  சொல்
அணுகாதொரு நட்பு
தழுவாதொரு கை
வாராதொரு செய்தி
வீழாதொரு  மழை
நினைக்காதொரு மனம்
வீசாதொரு காற்று
எழும்பாதொரு மணம்
படிக்காதொரு  பக்கம்
பூக்காதொரு மலர்
என
எதோ ஒன்றிற்கு
காத்திருந்தபடியே .............


 

35 comments:

சுந்தர்ஜி said...

நீங்கள் காத்திருப்பது கைகூடட்டும் பத்மா.பறக்க ஏலும் பறவையின் சிறகை அது தரட்டும்.அது ஏதோ ஒன்றையல்ல எல்லாவற்றையும் உங்கள் வசம் தந்துவிடும்.

வடிவம் அழகு.சொற்கள் புதிது.

பழமைபேசி said...

காத்திருப்புகள் நிறைவேறும் எனும் நம்பிக்கையில்னுதான் சொல்ல வர்றீங்க?? இஃகி

VELU.G said...

காத்திருப்பும் ஒரு சுகம் தான்

அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

பதிவிடா பின்னூட்டம். போட்டிடா ஓட்டு... மனதை வசீகரித்த கவிதை.

vasu balaji said...

இந்தப் பக்கம் லோட் ஆக கூட காத்திருக்க வேண்டியிருக்கு:). நல்ல கவிதை.

ரிஷபன் said...

ஆஹா!

Unknown said...

அழகு :)

Madumitha said...

காத்திருத்தல்
வீண்போவதில்லை
என்றும்.

ஸ்ரீராம். said...

சொல்லாத சொல்லை எழுதாத வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்.

r.v.saravanan said...

கவிதை அருமை

Prasanna said...

தமிழ்மணத்தில் இணைப்பதில்லையே ஏன்..

vasan said...

காத்திருந்த‌ த‌வ‌த்துக்காய்
இக்க‌விதையே வ‌ர‌மாய்..

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை.

க.பாலாசி said...

வரும் ஏதோவொன்றிற்குத்தானே இந்த வாழ்க்கை.... பயணம்.......காத்திருப்பில் உள்ள சுகம் சிலநேரம் வரம், சிலநேரம் ரணம்... ரணமற்ற சுகத்திற்குதான் இம்மனதில் அத்தனை வாசல்களும் ஏங்கிக்கிடக்கின்றன. நம்பாவிடின் நம்பிக்கையென்ற வார்த்தை வீண்தானே...

நல்ல கவிதை...

பாலா said...

rightuuuuuuuuuu

Jackiesekar said...

அந்த ஏக்கம் வரிகளில் தெரிகின்றது...நல்லா இருக்கு..

Priya said...

அருமையா இருக்கு பத்மா, எனக்கு பிடிச்சிருக்கு!

Appu said...

உங்க கவிதைகளுக்கு காத்திருத்தல் தகும் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வழக்கம் போல அழகு பதிவு பத்மா
(உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வருக வருக)

sakthi said...

பறக்க ஏலா
பறவைச் சிறகாய்
பதுங்கிச் சிணுங்கும் மனம்

nice lines ma

அன்பேசிவம் said...

mmm. kalakkala kavithai, medam full foorm la iruppinga pola?

uma said...

yella fellings orae kavidhailla va nee kathadu nichiyam nirivarum

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காத்திருத்தல் சுகம் எப்போதுமே....

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை அருமை.ஏலா என்பது இயலா என்ற அர்த்தமா?

பத்மா said...

@ramasamy kannan :)

பத்மா said...

ஹ்ம்ம் நன்றி சுந்தர்ஜி ..
உங்கள் பொக்கிஷத்தில் இதை இட்டதிற்கும் ..

பத்மா said...

ஹிஹி ஆமா பழமை

பத்மா said...

நன்றி வேலுஜி
ஆஹா தமிழ் உதயம் ..நன்றி நன்றி
@வானம்பாடிகள் காத்திருந்தாவது வாசிக்கிறீர்களே மிக்க நன்றி
@ரிஷபன் சார்
@ஆறுமுகம் முருகேசன்
@மதுமிதா
நன்றி
@ஸ்ரீராம் பின்னூட்டமே ஒரு கவிதை போல் நன்றி
@சரவணன் தேங்க்ஸ் ங்க

பத்மா said...

@வாசன் சார் நன்றி நன்றி

@சே குமார் நன்றி

@பாலாஜி ஆமாம் நம்பிக்கையில் தான் வாழ்க்கை

@பாலா ok ok

@ஜாக்கி சேகர் நன்றிங்க

@நன்றி பிரியா

பத்மா said...

@பிரசன்னா இணைக்கிறேனே தமிழ்மணத்தில்....தெரியவில்லையா?

@zeno u really boost my ego ..thanks

@தங்கமணி நன்றி மா ..எழுத முயற்சிக்கிறேன்

@ஷக்தி நன்றி

@அன்பரசன் thanks

@முரளி கிண்டலா? நடத்துங்க நடத்துங்க

@உமா தேங்க்ஸ்

@ராமமூர்த்தி .
@செந்தில் குமார்
ரொம்ப நன்றிங்க

'பரிவை' சே.குமார் said...

ennanga namma valippakkamey kanom.

http://www.vayalaan.blogspot.com

vannga...

pinkyrose said...

பறக்க ஏலா...

எங்கள் ஊர் பாஸைப்பா!

நைஸ் லைன்ஸ்!

உயிரோடை said...

நல்ல கவிதை

ப்ரியமுடன் வசந்த் said...

good good :)

bogan said...

உச்சம்!