ஜெயந்திக்காவை முதன் முதலில்
பார்க்கும் போது
ஏழாங்கல் ஆடிக்கொண்டிருந்தாள் .
கல்லாடாம எடுக்கிறேனா பார்
என அவள் கல் வீசி ஆடும் போது
சேர்ந்தாடும் ஜிமிக்கி
மேலேழுந்தாடும் இமைகள்
துடித்தாடும் உதடு
காற்றிலாடும் முடி
அதனோடாடும் தாவணி
இதையே பார்த்துகொண்டிருந்ததால்
கல் ஆடியதா இல்லையாவென
பார்க்காமலே விட்டுவிட்டேன் !
ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்.
56 comments:
ரைட்டா!ரைட்டா கேட்டுகிட்டே ஆடுவதைத்தானே கல்லாட்டம் என்கிறீர்கள்.
அக்கா அண்ணியாவதுமுண்டு:)
கல்லாட்டமுன்னு சொல்லிட்டு கல்லாடியதை பாக்கலன்னு சொல்றதுதான் "கல்லாட்டம்".
கல்லாட்டம்= பொய்யாட்டம்!!!??
ரொம்ப நல்லாருக்கு பத்மா.
உங்க பக்கத்துல அண்ணனும் உட்கார்ந்திருந்தாரா? :-)
ஆஹா :-). பிடிங்க பூங்கொத்து.
நல்லாருக்கு மேடம்.
//ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்//
இந்த இரண்டு வரி இல்லாவிட்டாலும் நன்றாகவே இருக்கும்.
ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்
ஹா..ஹா..ஹா..
மனசு ஆடியிருக்கிறது!
எங்க ஊர் பக்கம்
இதை பொதக்கா
என்று சொல்வோம்.
அந்தக் காலத்துக்குள்
இழுத்துச் சென்று
விட்டீர்கள்.
எத்தனை
ஜெயந்திக்கா
சித்ராக்கா
உஷாக்கா
ஆடி பாத்துருக்கோம்.
மேலுதட்டில்
அரும்பும்
வியர்வை துளியை
மட்டும் விட்டுவிட்டீர்கள்.
மிக அருமை.
அட!!! பைனல் டச் சூப்பர் க்கா
//ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்//
இந்த வரிகள் விடுத்து பார்த்தால் வேறு பரிமாணத்தோடு இருக்கு கவிதை
அக்கா அண்ணியாவங்க .. கவிதை அருமை
ரைட்டா தப்பா என்று சதுர கட்டங்களுக்குள் கால் பாதித்து கேட்பது பாண்டி ஆட்டம் தானே. (raja natrajan)
கல் ஆட்டம் என்பது மேலே கல்லை போட்டு கீழே ஆறு, அல்லது எழு அல்லது நான்கு கர்களையும்ம் மூடி சேர்த்து பிடிப்பது போன்ற விளையாட்டு தானே.
நீங்க மட்டும் தனியா பார்திருப்பிங்கன்னு நினச்சேன், கூட அண்ணனும் இருந்தாரா? ஹா ஹா ....
கடைசி வரிகளில் எதை புரிய வைக்க முயற்சி செய்கிறீர்கள்? மன்னிக்கவும் எனக்கு விளங்கவில்லை.
விளக்கவும், அந்த வரிகள் இல்லாமலேயே கவிதைய ரசிக்க முடிகிறது .:-)
@V J R
நிச்சயமா கள்ள ஆட்டம் இல்லைங்கோ
அது பாண்டிங்க ராஜ நடராஜன் . இது ஒரு கல்லை மேலே தூக்கி போட்டு கீழே உள்ளதை ஒன்று இரண்டாக அள்ளுவது ..இதனுடன் பாட்டும் பாடுவோம்..
ஒன்றே ஒன்று ஞாபகம் இருக்கு
அது பல்லிலா கிழவனுக்கு பரங்கி காய் பச்சடின்னு முடியும்
நன்றி ஆடு மாடு மாடு சார்
நானும் அப்படித்தான் யோசித்தேன் ..
ஆனால் ஒரு பெண்ணை ரசித்தது ஆண் பார்வையாய் போய்விடும் என்பதாலே அந்த கடைசி வரிகள்
நன்றி ராமசாமி கண்ணன்
அண்ணன் போய் பாருன்னு சொன்னதாலே தானே பாத்தேன்
நன்றி பா ரா சார்
Super Padma... Congrats.
ஆமாம் ரிஷபன் ..
ஆடிய மனது அடைந்தது
@MADHUMITHA
எங்க ஊரென்ன எங்க ஊர்? நாங்களும் அந்த பக்கம் தான்
பொதைக்காய்ன்னு சொன்னா புரியாதுன்னு கல்லாட்டம்ன்னு சொன்னேன்
விளையாடி விளையாடி தேய்ந்து கூழாங்கல் போலாகும் கருங்கல் ..அதை எப்பிடி பொத்தி பொத்தி வச்சுப்போம் ..
அதன் பாட்டு எதாவது ஞாபகம் இருக்கா மதுமிதா ?
நன்றி பாலா
கல் ஆடியதா இல்லையாவென
பார்க்காமலே விட்டுவிட்டேன் !////
அடப்போங்க மேடம் , முக்கிய மான விசயத்த கோட்டவிட்டுடிக
வரவிற்கு நன்றி உயிரோடை
நன்றி L K
வாங்க ராம்ஜி யாஹூ .முதல்வருகைக்கு நன்றி
நீங்கள் சொன்னது போல் அது கற்களை மேலே போட்டு விளையாடும் விளையாட்டு தான்
நன்றி முரளி ..ஆடு மாடு கிட்ட இதற்கான பதிலை கூறியிருக்கிறேன்
THANK YOU IRSHAATH
nalla finishing :)"aadumadu" sonna mathiri last rendu line illana kuda edhu super than :)
நானும் இந்த கல்லாட்டம் ஆடியிருக்கேன். இப்பவும் சிறுபெண்கள் ஆடும்போது வாங்கி நாலு கல்லாவது எடுப்பதுண்டு.
கவிதை அருமையா யிருக்கு பத்மா. ஆனா பாத்தது நீங்க மட்டும் போலிருக்கே!
நல்லாயிருக்குங்க
ஏழாம் காய் / கல்லாங்காய் என்றும் சொல்வது உண்டோ?
கவிதை அருமை.
நன்றி அம்பிகா ..நம்முள் ஒரு சிறுமி வளராமல் இருந்து கொண்டே இருக்கிறாள் இல்லையா ? அது தான் நம் சந்தோஷத்தின் பலம்
எனக்கும் பாண்டி, பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம் ,ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுகள் பிடிக்கும் ..ஹ்ம்ம்
THANKS ZENO
ஆமாம் கௌதம் ஜி அப்படியும் சொல்வதுண்டு..
அந்த பாடல்கள்தான் அதன் சிறப்பு யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கணும் ..
நன்றி அசோக்
நன்றி கௌசல்யா ..
கலக்குறீங்க கவிதையில்
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்ப நல்லா இருக்குங்க....
உங்க அண்ணன் உங்களை தேடிகிட்டு இருக்கிறார் பாருங்க...
நாங்க அஞ்சாங்கல்லு-னு சொல்வோம்...
சின்ன வயசில விளையாடியிருக்கேன்
sweet! :-)
நல்லா இருக்குங்க பத்மா
ரொம்ப நல்லாருக்கு.
அடடா.
//இது ஒரு கல்லை மேலே தூக்கி போட்டு கீழே உள்ளதை ஒன்று இரண்டாக அள்ளுவது ..இதனுடன் பாட்டும் பாடுவோம்..
ஒன்றே ஒன்று ஞாபகம் இருக்கு
அது பல்லிலா கிழவனுக்கு பரங்கி காய் பச்சடின்னு முடியும் //
ஆமா. இதை எங்க
ஊர்ல கழச்சிக்கல்லுன்னு சொல்வோம்.
இதுக்குன்னு ஏழு பாட்டு இருக்கு.
ஒன்னு:
ஓரி உலகெல்லாம்
உலகெல்லாம் சூரியன்
சூரியன் தங்கைக்கும்
சுந்தரவல்லிக்கும் நாளை கல்யாணம்.
இரண்டாவது :
ஈரிரெண்டு எடுக்கவே
எலந்தம் பழுக்கவே
குழந்தை சமையவே
கொட்டுச்சத்தம் கேக்கவே.
கவிதை அருமை.
கல்லாட்டமும் அழகு.அப்படியே அண்ணனுக்கு பொண்ணு பாத்ததும் அதைவிட அழகு.பொண்ணுபாக்க இப்படியொரு டெக்னிக் இருக்கா.கல்லாட்டம் மேற்றிமோனி.காம்.
பரவாயில்லையே...இன்னும் இதை எல்லாம் மறக்காம இருக்கீங்க...!
மறுபடியும்..ஒரு மூணு, நாலு வயசு குழந்தை மாதிரி மாறினா எவ்வளவ் ச்ந்தோஷம்!!!!!!!!!ஹூம்.....
ஜெயந்தி அக்கா, அண்ணி ஆன கதையில் கல்லாட்டம் பிரதான இடம் பிடித்தது....
படிக்கும் போது, நானும் அந்த ஏழு கல் ஆட்டம் ஆடிய ஒரு உணர்வு...
நல்லா இருக்கு...
சொல்லாட்டம் நல்லாருக்கு
அக்காவை அண்ணியாக்கியது கல்லாயிருக்கமுடியாது.அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்.குறும்பு கொப்பளித்த கவிதை.இனிமேலாவது கவனமாகப் பாருங்க பத்மா.
அந்தப்பாட்டெல்லாம் சிடுக்காகிக் கிடக்கு.இந்த வாரத்துக்குள்ள சிடுக்கெடுத்துடுவேன்.
நாலு நந்தவனம்
அஞ்சு பந்தவனம்
ஆறு பார்வதி
அழகு பார்வதி.
இப்படி இப்படி ஒரு இழை நினைவில் வந்து மறையுது மக்கர் பண்ற ட்யூப் லைட்டாட்டம்.
Wow....super... தோழியே அண்ணியாய் வரம் தான் பத்மா
பத்மா...எனக்குத் தெரில இந்தக் கல்லாட்டம்..ஆனா என்னமோ பண்ணி தப்பாட்டம் பண்ணியாச்சும் அவங்களை அண்ணியாக்கியிருக்கீங்க.கவிதை இயல் வாழ்வோடு ஒட்டி அருமையா வந்திருக்கு.
அண்ணியாயிட்டாங்களா? அப்டின்னா தினமும் கல்லாட்டம் விளையாடலாம்...
childhood play remembered after so long years gr8
எல்லோரும் சொல்வது போல் அந்தக் கடைசிவரி இல்லாவிடில் கவிதையே
Post a Comment