அகநாழிகை ஏதும் stall போடவில்லை ...உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார் ..அங்கு எஸ் ரா வாங்கி விட்டு,பின் அவரின் "கடவுளுடன் பிரார்த்தித்தலில்" அவர் கையெழுத்தும் வாங்கிகொண்டேன் ..
அப்போதுதான் பா ராஜாராமின் கருவேல நிழல் கண்ணில் பட்டது ..மனுஷ்ய புத்திரன் சொன்னார் ..'வாசு என் நண்பர் தான்.அவர் தனியே கடை போடவில்லை ..நான் தான் வைத்திருக்கிறேன்' என்று..
உடன் அங்கிருந்த இரண்டு கருவேல நிழல் ,நீர் கோல வாழ்வை நச்சி,கூர்தலறம் ,கோவில் மிருகம் ,என எல்லாவற்றையும் வாங்கி விட்டேன்..என்னவோ சொல்ல இயலா சந்தோஷம் ..
அதேபோல் மற்றொரு இனிய surprise அடர்கருப்பு காமராஜரின் ஒரு தேவதையும் பொன்வண்டும் புத்தகம் கிடைத்தது (அதை படித்து முடித்து விட்டேன் சார் ).கூட வந்தவர்களிடம் இவங்கலாம் எனக்கு தெரியும்ன்னு பெருமை அடித்துக்கொண்டதில் அவர்கள் நொந்து போனது நிஜம் ..
வந்து ஒரே மூச்சில் இந்த புத்தகங்களை படித்தும் ஆயிற்று .(நம் வலைப்பூ நண்பர்களின் புத்தகங்களை சொல்கிறேன்)
மதியம் 12 மணிக்கு போனதால் கூட்டம் கம்மி . கடைசி நாளானபடியால் நல்ல discount உம் கிடைத்தது (15 முதல் 50 வரை )
சாம்ராஜ்யப்ரியன் கண்காட்சிக்கு வந்திருந்தார் ..சென்னை அளவில் இது மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்று சொன்னார்..இருப்பினும் நாங்கள் திரும்பும் சமயம் ஏறக்குறைய ஆறுமணி அளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது ...
நல்ல வேளை நாம் இப்போது வரவில்லை என நினைத்துக்கொண்டேன் .
அரங்க ஏற்பாடுகள் எல்லாம் அருமையான முறையில் இருந்தன ..ஆனால் விற்பவர்கள் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்கலாம்
இந்தமுறை தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்குவது என்ற முடிவில் வந்ததால் ஆங்கில புத்தகங்கள் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.
திஜா அனைத்தும் தமிழ் பல்கலைகழக நூலகத்தில் படித்தது தான்.
சொந்தமாக வேண்டும் என்று பல நாள் கனவு ..அது இன்று நிறைவேறியது ..
அரங்கம் விட்டு வெளியேறுகையில் "முகம் தேன் குடித்த நரி போல இருக்கு " ன்னு என சகோதரி மிகவும் கிண்டல் ..என்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே ?
நான் வாங்கினது
கடவுளுடன் பிரார்த்தித்தல் ----..மனுஷ்யபுத்திரன்
பிரமிள் கவிதைகள்
பின் நவீனத்துவம் என்றால் என்ன---- எம் ஜி சுரேஷ்
அஞ்சுவண்ணம் தெரு---- தோப்பில் முகமது மீரான்
ஏழாம் உலகம்------ ஜெயமோகன்
வனம் புகுதல்------ கலாப்ரியா
நா பிச்சமூர்த்தி---- முத்திரை கதைகள்
இருவர்------ அசோகமித்திரன்
இன்று---- அசோகமித்திரன்
விழா மாலைப் பொழுதில்------ அசோகமித்திரன்
ஆர் வி சிறுகதைகள்------ 2 தொகுப்புகள்
ஒரு தேவதையும் இரு பொன்வண்டுகளும் ----காமராஜ்
கருவேலநிழல் -------பா ராஜாராமன்
கோவில் மிருகம் ------விநாயகமுருகன்
நீர் கோல வாழ்வை நச்சி ------லாவண்யா (உயிரோடை)
கூர்தலறம் -------TKB காந்தி
இரவில் கனவில் வானவில் -----ஷங்கர நாராயணன்
கடலோடி ------நரசய்யா
தீர்க்க ரேகைகள் --------நரசய்யா
சாகித்ய அகாடமி தமிழ் சிறுகதைகள் தொகுப்பு
இரண்டு படி------- தகழி சிவசங்கரன் பிள்ளை
செம்மீன் ------தகழி
வானம் வசப்படும் -------பிரபஞ்சன்
மானுடம் வெல்லும் -------பிரபஞ்சன்
தமிழ் சொற்றொடர் அகராதி (thesaurus)
பிரபஞ்ச பூதங்கள் ------ஷங்கர நாராயணன்
குறுநாவல்கள் தொகுப்பு -------ஷங்கர நாராயணன்
எஸ் ராமகிருஷ்ணனின்
யாமம்
மலைகள் சப்தமிடுவதில்லை
வாசக பர்வம்
நகுலன் வீட்டில் யாருமில்லை
பேசத்தெரிந்த நிழல்கள்
சித்திரங்களின் விசித்திரங்கள்
உறுபசி
பூனைகள் இல்லாத வீடு --------சந்திரா
மற்றும் திஜாவின்
நளபாகம்
மரப்பசு
மனிதாபிமானம்
அடி
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
அம்மா வந்தாள்
தி ஜா சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
வாங்க நினைத்து வாங்காமல் விட்டது கோணங்கியின் சிறுகதை தொகுப்பு ,பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பு (too costly) .
எல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..
28 comments:
oru vazhiyaa poittu vanthaachchu!
ennoda roomla niraiya idam irukku padma, books vaikka!!
ஆமாம் இதெல்லாம் என்னைக்கு படிச்சு முடிகறது?
சில புத்தகங்களை நோட் பண்ணிருக்கேன் வாங்கிடுவோம் :)
மொத்தமா எவ்ளோ ( பைசா ) ஆச்சுன்னு எனக்கு மெயில் பண்ணுங்க ...( sayrabala @gmail.com) hahahaha
பாடல் படிக்க இடைஞ்சலாக இருக்கிறதே........
//வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..//
பின்ன இம்புட்டு வாங்கினா என்ன பண்றது...
நல்ல அனுபவம்... இந்த மாசம் இறுதியில் ஈரோட்டுல புத்தகத்திருவிழா போடுறாங்க... நானும் ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன்.. வாங்கணும்...
என்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே ?
நீங்கள் சொல்வது மிக சரி பத்மா சென்னையில் வருடாவருடம் நடைபெறும் புத்தக திருவிழா வில் நான் கண்டிப்பாக செல்வேன் சொர்க்கத்தில் நுழைந்தது போல் இருக்கும்
உங்கள் பட்டியல் பிரமாதம்.
உடனே படித்து விடுங்கள்.
சரி.. எப்ப தமிழ் பல்கலை கழக
நூலகத்திறகு வந்தீர்கள்?
பின் நவீனத்துவத்தைப் பற்றி திரு.அஷ்வகோஸ் மற்றும் பிரேம் ரமேஷ் நன்றாக எழுதியிருப்பார்கள்.
எம்.ஜி.சுரேசின் படைப்புகளில் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்,அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும் படித்திருக்கிறேன். எனவே பின் நவீனத்துவத்தைப் பற்றி அவருடைய பார்வையை அறிய ஆவலாக இருக்கிறேன்.
படித்துவிட்டு நீங்கள் பகிர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி.
மற்றபடி புத்தகங்களின் தேர்வு சிறப்பு.
ம்ம்ம்
புத்தகம் வாங்குகிற அன்றெல்லாம் என் முகம் பிரகாசமாக இருப்பதாக என் சகோதரி சொல்வாள்.எவ்வளவு மறைத்தாலும் காதல் தெரிந்துவிடும் என்பார்கள்.அது போல..கிரேட்.
mmmkkum iththanaiyumore attemptlayaa? pattaiya kilappunga..... enakku selavu michcham... :-))
||.படித்தும் விடுவேன் ..||
நானும் இப்படித்தான் சொல்றேன்
ம்ம்ம்.... ஒன்னும் முடியலைங்க
எல்லா புக்கையும் ஸ்கேன் பண்ணி என் மெயில் IDக்கு அனுப்புவைக்கவும்.. அல்லது எல்லா புக்கையும் படிச்சவொடனே எனக்கு அனுப்பிவைக்கவும்... பதிவர்கள் புத்தகங்களை தவிர்த்து... ஏன்னா அத தெரியாதனமா வாங்கிட்டேன் :)
அடடா ஞாயிறன்று நான் பக்கத்தில் விருத்தாச்சலத்தில்தான் இருந்தேன், பார்த்திருக்கலாமே....
அப்பப்பா... இத்தனை புத்தகங்களா!! எப்போ படிச்சு முடிப்பீங்க?
புத்தகங்களின் தேர்ந்தெடுப்பு அனைத்தும் மிகவும் அருமை . நானும் குறித்து வைத்துகொள்கிறேன் . வாசித்துவிட்டு சிறந்த புத்தகங்களின் சிறப்புகளைப் பற்றி விமர்சனங்கள் தந்தால் இன்னும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் . புரிதலுக்கு நன்றி . பகிர்வுக்கும் நன்றி
அப்பா...டி
கொடுத்து வச்சவங்க நீங்க பத்மா !
வணக்கம் பத்மா.
எனது தொகுப்பை வாங்கியதற்கும்
வாசித்ததற்கும் நன்றி. பாக்கியவன் நான்.
நல்ல பகிர்தல்.
யய்யாடி.. எத்தன..? பொறாமையாக இருக்கிறது.. :)
//எல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை//
பின்ன இம்புட்டு வாங்கினா என்ன பண்றது...
புத்தக லிஸ்ட் படிக்கும்போதே ஆசையாக இருக்கிறது. படித்து இன்புற வாழ்த்துக்கள்.
பொறாமையாய் இருக்கு பத்மா.
பாங்க்ல லோன் தர்றாங்களா., புத்தகங்கள் வாங்க? :-)
//எல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை//
விடுங்க. கஷ்ட்டம் வேணாம். சாக்குப் பையோட வர்றேன். :-)
//பதிவர்கள் புத்தகங்களை தவிர்த்து... ஏன்னா அத தெரியாதனமா வாங்கிட்டேன் :)//
இந்த, அசோக் ராஸ்களோடு பேசாதீங்க பத்மா. :-))
அப்புறம், அந்த க.நி. கருணைக்கு நன்றி.
மிக நெருக்கமான சூழல்.தாமதித்துவிட்டேன்.
இத்தனை புத்தகங்களை வாசிப்பதும் வாங்குவதும் எல்லாரிடமும் அற்றுப் போன சூழலில் கைப்பிரதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் வெகுசிலரில் நீங்களும் இருப்பது ஆனந்தமாக இருக்கிறது.
வாசிப்பதன் போதை வேறெதில் உண்டு?
புத்தகபட்டியல் பகிர்விற்கு நன்றி.
ஒரு புத்தகத்துக்கு ஒரு பின்னூட்டம்ங்கற அளவு கூட இன்னம் வந்து சேரலையே... என்ன ஏழைப்பட்ட தமிழ்நாடு இது
நல்ல தேர்வு... படித்து முடித்தவுடன், அந்த புத்தகம் சார்ந்த உங்கள் பார்வையினை பதிவிடுங்கள் பத்மா!! :)
ஆஹா...இவ்ளோ புக்ஆ? சூப்பர்...
you might have finished reading all this books by this time right?good habit reading books is it not?
யப்பா இத்தனை புத்தகங்களா
பத்மா
உங்களின் வாசிக்கும் தன்மை கண்டு
மெய்சிலிர்த்து நிற்க்கின்றேன்
Post a Comment