கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய்
ஊரெல்லாம் ஒரே புரளி !
அதனுள் செல்ல கடவுச் சொல்
அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம் ...
ஊரையே கூட்டி முயல்கிறது அரசு !
என் முறை வருமுன்னே எப்படியாவது அதை மாற்றிவிடு
இல்லையெனில்
எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான
உன் பெயரை
உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்?
ப்ளீஸ் டா!
33 comments:
கத்திக்கப்பல் பற்றி ஒரு கவிதை எழுதுங்கள் பத்மா..
நல்லா இருக்குக்கோவ் !!!!
உங்க Source of inspiration for creativity எங்கேயிருந்து வருதுன்னு சொல்லுங்க ப்ளீஸ் :)
கப்பல்னு கத்தி சொன்னா அது கத்தி கப்பலா மணிஜி?
தேங்க்ஸ் பாலா ....என்ன ஒண்ணும் எழுதலையா?
zeno comedy பண்ணாதீங்க ..
அதுசரி உங்கள் வலைப்பூவை தொடர இயலவில்லையே
ஆவன செய்யவும்
nice. :-)
நல்லா இருக்குங்க.
ithil yenna vetkam thozi ungalukku...
anbudan
ursularagav
கவிதை நல்லாருக்கு
மணிஜீ...... said...
/கத்திக்கப்பல் பற்றி ஒரு கவிதை எழுதுங்கள் பத்மா../
ஏன்? பறக்கும் கப்பல் வேணாமா:)).
நல்லாருக்கு பத்மா
|| பத்மா said...
கப்பல்னு கத்தி சொன்னா அது கத்தி கப்பலா மணிஜி?||
கத்தியும் சொல்லலாம்... தண்டோரா போட்டும் சொல்லலாம்
அடடா!!!
//கப்பல்னு கத்தி சொன்னா அது கத்தி கப்பலா மணிஜி? //
அட, நீங்க நகைச்சுவை பதிவு கூட போடலாம். கவிதை அருமை.
ஓ...கதை கப்பல்ல போகுதா பத்மா !
அந்த கடைசி பிளிஸ் டா வில் இருக்கு அத்தன காதலும்.
ஆஹா :)
அந்த கடவுச் சொல் எனக்கும் தெரியுமே!
******* இதுதானே அது?!
கவிதையை ரசித்ததும் கிளம்பிய குஷியில் ஒரு சின்ன கலாட்டா..
ரொம்பப் பிடித்த கடவுச்சொல்லா பத்மா>::))
அழகான கவிதை பத்மா
நல்லா இருக்கு.
வித்தியாசம்
Cute !!
எல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க போல
உங்கள் கவிதை கப்பலுக்குள்
நுழைந்து பொக்கிஷங்களை
இப்பவும் அள்ளிக் கொண்டு
தானிருக்கிறேன். நிறைய கப்பல்கள்
கரையேறட்டும்.
கடவுளிடம் கடவுச்சொல் கேட்ட கவிதை ஆஹா என்றால் மணிஜீயிடம் கேட்ட இந்த விஷயம் ஓஹோ...
//பத்மா said...
கப்பல்னு கத்தி சொன்னா அது கத்தி கப்பலா மணிஜி? //
கலக்கல் பதிவு...
மேலே நீங்கள் கேட்ட கேள்வியை நினைத்து சிரித்துக்கொண்டே உங்களை வாழ்த்துகிறேன் பத்மா
எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான
உன் பெயரை
உலகின் முன் எப்படி
உரக்கச் சொல்வேன் நான்?
ஒவ்வொரு கவிஞர்கள் ஒவ்வொரு வகை
உங்கள் நடை சற்று வித்தியாசமாய் ஆனால் அழகாய்
தொடருங்கள் சகோதரி!!!
அருமை பத்மா.இன்னும் எத்தனை கப்பல் கைவசம் இருக்குன்னு தெரியல்லியே?கடவுச்சொல்லை விட உங்க அடுத்த கவிதை என்னவாயிருக்குமென யூகிப்பது படு சுவாரஸ்யமாயிருக்கு.கவிதைத் தொகுப்புக்கு ”கப்பல்களை ஏற்றிய கவிதைகள்”னு தலைப்பு நல்லாருக்கில்ல.
கடவுச்சொல் கப்பல் கலக்கல் கவிதைதாங்க... :)
காதலை உரக்கச் சொல்வதில் என்ன தப்பு? கடவுச் சொல் சாக்கில் உரக்கச் சொல்லி மகிழவும்...! காதல் சுகமானது.!
hi padma. nice.
karri odhigya kappal very nice kavidhi
Post a Comment