உனக்கான என் காகிதக் கப்பலை
நிரப்பத் துவங்கி விட்டேன்
என்ன முயன்றும் என அனைத்து பிரியமும்
அதில் கொள்ளவே இல்லை
மீதி உள்ளது
இங்கு என்னை மூச்சு முட்டச் செய்கிறது
என்னை கேட்காமலேயே என் ஆசை
அதை செலுத்தும் விசையாகி விட்டது
என் நிஜ முத்தங்களின்
பளு தாங்காது கப்பல் மூழ்கிவிடும் என்பதால்
என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்
உன்னை வந்தடையும் போது
அவை நீரிலே கரைந்து போயிருக்கலாம்
அப்போது கப்பலறியாது
அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு
வேகம் திருப்பி அனுப்பி விடு
உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !
36 comments:
சத்தமில்லா முத்த கவிதை மிக நன்று!
வோட்டு போட மறந்திட்டேன்! இப்போ போட்டுட்டேன்!
ம்ம்ம்.
நல்லாயிருக்கு
உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !
ஹா.. என் மூச்சே நின்று விட்டது..
சபாஷ்..முழு கவிதையும் சட்டென்று ஒரு உணர்வுப் பிரவாகமாய்..
என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்
என்கிற வரியில் கவிஞரின் சமர்த்து தெரிகிறது!
நல்லா ரொமண்டிக்கான கவிதைங்க. அற்புதம்.
wow superkkaa
என் நிஜ முத்தங்களின்
பளு தாங்காது கப்பல் மூழ்கிவிடும் என்பதால்
என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்
உன்னை வந்தடையும் போது
அவை நீரிலே கரைந்து போயிருக்கலாம்//
உருவக அணி என்பது இதனைத் தானே? மிக மிக எளிமையான சொல்லாடலில் நகர்ந்துள்ள முத்தக் கப்பல் அருமை. கவிதைக் கப்பல் தள்ளாடாமல் நகர்ந்து செல்லுகிறது. வாழ்த்துக்கள் தோழி!
முத்தத்திற்கு
உதடு மட்டுமா தேவை?
கண்கள்!
ஆசைகள்,
பாசங்கள்,
தாபங்கள்,
ப்ரவஹிக்கும்,
அந்த கண்கள்?
அம்மாவுக்கும் சரி....
பிள்ளைகளுக்கும் சரி..
முத்தம் கொடுக்கும் போது,
பரிவினை சுமந்து செல்லும்,
அந்த கண்களை
மறக்க முடியுமா??
நல்ல கவிதை.. பத்மா அக்கா
நன்று.
முத்தங்களைச் சுமந்த
கப்பலை காதலின்
சின்னமாக அறிவித்து விடலாமே?
கவிதை வசீகரம்.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
Super Padma...Nallairukku...
ரொம்ப உருகி ரசித்து எழுதி இருக்கீங்க.... ம்ம்ம்ம்....நல்லா இருக்குதுங்க.
ம்ம்ம்ம்...
உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே
பத்மா அக்கா வெளுத்திட்டிங்க
அட அட...
காகிதத்தில் கப்பல் செய்து கடல் மேலே ஓடவிட்டேன்...
பிரிவின் துன்பவியல் கவிதையோ
நல்ல இருந்துச்சிங்கோ...
(அடுத்தவாட்டி காகித கப்பல் உடாம.. ஒரு INLAND letter அனுப்பவும்... மறக்காம ’To’ address எழுதவும்)
மூழ்கடிக்கும் முத்தங்கள்
//மீதி உள்ளது
இங்கு என்னை மூச்சு முட்டச் செய்கிறது//
எவ்வளவு அழுத்தம் இதற்குள்... அருமையா இருக்குங்க...
முத்தம் போல வசீகரம்.
//என்னை கேட்காமலேயே என் ஆசை
அதை செலுத்தும் விசையாகி விட்டது//
//கப்பலறியாது
அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு
வேகம் திருப்பி அனுப்பி விடு
உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !//
கலையும்,ஒரு உன்னதப் பீரிடலும் ஒன்றே இணைந்து என்னை வதைக்கின்றன பத்மா.
அற்புதம்.துறைமுகம் நோக்கி நிறையக் கப்பல்கள் வரட்டும்.காத்திருக்கிறேன்.
கப்பல் எப்படி எல்லாம் உபயோகப்படுது.. அது சரி ஏன் தமிழ்மணத்தில் இணைப்பதில்லை..
முத்தம்.... மொத்தமும் அருமைங்க.
முத்துச் சூடால் மொத்தத் தண்ணீருமே சூடாகியிருக்கும்!
நல்ல கவிதை...
என்ன முயன்றும் என அனைத்து பிரியமும்
அதில் கொள்ளவே இல்லை
மீதி உள்ளது
இங்கு என்னை மூச்சு முட்டச் செய்கிறது///
மிகவும் பிடித்த வரிகள், இன்னும் என்னென்னவோ யோசனை வருகிறது. அடுத்த கிறுக்கலுக்கு விதை கிடைத்தது.
:-)
அப்போது கப்பலறியாது
அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு
வேகம் திருப்பி அனுப்பி விடு//
அமைதியான ரொமன்ஸ்.. ம்ம்ம் சூப்பர் பத்மா..:))
தமிழுடன் ஒரு யுத்தமா...ஒரு முத்ததிற்காக...
நல்ல கவிதை
உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !//
அற்புதம்
"....அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு.."
"...உதடில்லா(து) முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே ..."
எவ்வளவு அழகாக சிந்தனைகளும் வார்த்தைகளும் இசைந்து வருகின்றன உங்களுக்கு. அருமையான கவிதை
எழுத்துல நல்ல ஃபீல் குடுக்குறீங்க. அருமை :-)
காதலின் அடையாள முத்தச் சத்தமும் அதன் ஈரலிப்போடும் முத்தக்கவிதை.நல்லாயிருக்கு.
காகித ஓடமும் காதலுக்குத் தூதுவானானது அருமை
கப்பல் கொள்ளாத அழகுக் கவிதை!
அமைதியான ரொமன்ஸ்.. ம்ம்ம் சூப்பர்
//என் நிஜ முத்தங்களின்
பளு தாங்காது கப்பல் மூழ்கிவிடும் என்பதால்
என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்//
பலே கற்பனை... சிறகடித்து பறந்த அந்த கற்பனையில் படிக்கும் எல்லோரும் அவரவர்களை மறப்பது நிச்சயம்...
ஒரு நல்ல காதல் கவிதை...
Lovely.....
கச்சிதம்.எதற்கு அந்த [து] ?
அருமையாக இருக்கிறது
Post a Comment