காகிதக் கப்பல்கள் நிறைந்து பிதுங்கும்
அறையில் நசுங்கியபடி நான் .
ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும்
ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது
கனன்று சிவந்த விழிகளுடன் கண்விழிக்கையில்
அவை மேலுமெனை வஞ்சத்துடன் அழுத்துகின்றன
அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன
ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன
வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்
18 comments:
நல்லா இருக்குங்க.
///ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும்
ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது////////
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை இறுக்கி பிடித்துகொள்கிறது , மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி
அழகாக எழுதியிருக்கிங்க
எதிர்பார்த்தது இல்லாமல் போகும் காலத்தில நாமே அதுவாய் மாறிக்கொள்கிறோம்.சரியா பத்மா !
very nice. :-)
அனைவரும் தங்களை
பொருத்திப் பார்த்துக்கொள்ள
வசதியான கவிதை .
மிக நன்று பத்மா.
best one padma.
அருமை
//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்
//
மிகவும் அருமை
இத்தனை நாள் இடைவெளி? எத்தனை அழகான கவிதை?ஏன் இத்தனை காகிதக் கப்பல்கள் செய்துவைத்தீர்கள் பத்மா?மழை ரொம்ப ஜாஸ்தியோ?
//அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன//
//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்//
க்ளாஸ் வரிகள்.அருமையான வடிவம்.சபாஷ் பத்மா.
ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன
மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்
good
நல்லா இருக்கு பத்மா
அருமையான கப்பல்.. இல்ல.. கவிதை..
கவிதை நல்லா இருக்கு பத்மா.
"வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான் "
மிக கவித்துவமான வரிகள்
கவிதை அருமை!!
//கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன//
அப்புறம் ஏன் பறக்கல?
கடைசி இரண்டு பத்தியில் பாரம் உணர்ந்தேன்...
நன்று பத்மா :)
ingu namathu azugaiyaikooda suthanthiramaga aza mudivathillai sari thaanea thozi
உங்கள் மாஸ்டர்பீஸ் இதுவாய்த் தான் இருக்கும் எனக்குத் தோன்றுகிறது.மிகையும் குறையும் இல்லாத கவிதை.அற்புதம்.நல்ல கவிதை என்பது சட்டென்று புன்னகைக்கவோ திடுக்கிடவைக்கவோ செய்யவேண்டும்.அதை இந்தக் கவிதை சரியாய்ச் செய்கிறது.
Post a Comment