Saturday, May 29, 2010

எரிநிழல்

 உன் தண்முகம்
கண்டேனில்லை 

உன்புன்சிரி 
கண்டேனில்லை 

உன் குறுவிழி 
கண்டேனில்லை

உன் திமிர்நடை  
கண்டேனில்லை

உன் உயிர்ப்பார்வை  
கண்டேனில்லை 

உன் பருந்தோள்
கண்டேனில்லை

உன் நெடுமார்பு 
கண்டேனில்லை

உன் கடி மெய்யும் 
 கண்டேனில்லை 

கண்டதெல்லாம் 
அது யாதெனின் 

உன் மனம் 
என் அகம் பற்றியதும்

பற்றியெரியும்  
என் நிழலதைத்தான் 

47 comments:

dheva said...

பற்றியெறியும் நிழல்.....! வாவ்.... நேர்மையான வரிகள்! வாழ்த்துக்கள்!

Ahamed irshad said...

Nice Padma... We Want More....

க ரா said...

கவிதையும் அதற்கேற்ற படமும் ரொம்ப நல்லாருக்குங்க.

Ashok D said...

அழகு :)

மணிஜி said...

நேர்மையான ஆக்கம்

vasu balaji said...

ஓஓ. இதத்தான் அய்யய்யோ பத்திக்கிச்சின்னு பாட்டா எழுதிப்புட்டானுவளா:)). டாப் கிளாஸ் பத்மா

அ.முத்து பிரகாஷ் said...

// உன் தண்முகம்கண்டேனில்லை.. //
உந்தன் முகமென முதலில் வாசித்தேன் ...
பின்னர் பார்த்தேன் ...
உன் தண் முகம் ...
அருமை தோழர் பத்மா !
.........
உயிரோடு விளையாடும் dash களின் கல்லூரி...
http://neo-periyarist.blogspot.com/2010/05/dash.html

மதுரை சரவணன் said...

good. all lines with meaning.

விக்னேஷ்வரி said...

கவிதை, படம், தலைப்பு எல்லாமே நச்.

ursula said...

mmm,nice thozi.

anbudan
ursularagav

uma said...

whoooww shadow ku thaan yethana varni nice padmaja yenku yendh pattu jabkam varuthu theruma 'NIZILAKA NANN VARAVANDUM YOU GOT IT

தமிழ் உதயம் said...

கவிதை நன்றாக இருந்தது.

காமராஜ் said...

பத்மா....
அடிச்சு விளாசுறீங்கப்பா.
திகு திகுவென எரிகிறது.
அழகு.

ஸ்ரீராம். said...

காதல் மனசைப் பொறுத்து என்று சொல்கிறீர்களா?

ஜெயசீலன் said...

உயிரோட்டமான கவிதை... வாழ்க வளமுடன்....

ஜெய்லானி said...

சூடு ஓவர்...

ஹேமா said...

படமும் கவிதையும் நிறைவு தோழி.

Appu said...

பார்க்காமலே இப்படி என்றால்?அருமை அருமை!

adhiran said...

nice one.

r.v.saravanan said...

படம் சூப்பர்

கவிதையும் மிக நன்று

ரிஷபன் said...

வார்த்தைகளின் தகிப்பு..

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Nice... :)

அன்புடன் மலிக்கா said...

அழகான வரிகள் சூப்பர்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அருமையா இருக்கு ! கமகமவென வெங்காய சாம்பாருக்குப் பொருத்தமான உருளைக்கிழங்கு பொடிமாஸ் போல படமும் செம பொருத்தம்!!

Priya said...

Good one padma!

Madumitha said...

கவிதை அழகு.
உங்களுக்கு ஒரு
பூந்தோட்டம்.

உயிரோடை said...

//பற்றியெரியும்
என் நிழலதைத்தான் //

க‌விதை அழ‌கு

சிவாஜி சங்கர் said...

:)
(:
:)
(:

சுந்தர்ஜி said...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
புறம் துரந்து அகம் தேடலையும்
அகம் பற்றிய மனதையும்
அதன் நிழ்ல் பற்றி எரிந்ததையும்
சொட்டும் மொழிக் கவிதையையும்.
அற்புதம் பத்மா.

அன்புடன் நான் said...

வலிமையான கவிதை பாராட்டுக்கள்.

அண்ணாமலை..!! said...

ரொம்பவே நல்லா அழகா
எனக்கும்
புரியற மாதிரி இருக்குங்கோ..!!

க.பாலாசி said...

இந்த வடிவம் அழகு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Padma - Superb...touching...asusual.

Prabu M said...

//உன் மனம்
என் அகம் பற்றியதும்

பற்றியெரியும்
என் நிழலதைத்தான்//

லவ்லி!! :)

பற்றியெரியும் நிழலில் தண்முகம் காணலாகுமோ!!!

நீங்கள் காணாததெனக் கண்டதைக் கண்டிருக்கிறேன்...
கண்டதைக் முதன்முறைக் காண்கிறேன்...

அழகு!! :)

ilamthooyavan said...

சகோதரி வாழ்த்துக்கள்

விஜய் said...

வர வர கலக்குறீங்க

வாழ்த்துக்கள்

விஜய்

Nathanjagk said...

கவிநடை போலவே கருத்தும் ​செவ்வியல் தன்மையோடு இருக்கு.

வாழ்த்துக்கள் பத்மா!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பத்மா.

தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.

பத்மா said...

தேவா
இர்ஷாத்
ராமசாமி கண்ணன்
அசோக்
மணிஜி
வானம்பாடிகள்
நியோ
அனைவருக்கும் மிக்க நன்றி .மிக காலம் தாழ்த்தி சொல்வதை மன்னியுங்கள்

பத்மா said...

thank u saravanan

பத்மா said...

விக்னேஸ்வரி நன்றி

பத்மா said...

thanks a lot ursula raagav

பத்மா said...

hey uma thanks di

பத்மா said...

அன்பின்
தமிழ் உதயம் ,
காமராஜ் சார்
ஸ்ரீராம்
ஜெயசீலன்
ஜெய்லானி
ஹேமா
அனைவருக்கும் ரொம்ப நன்றிங்க

பத்மா said...

zeno
ஆதிரன்
r v சரவணன்
ரிஷபன்
நாளைப்போவான்
மலிக்கா
எல்லோருக்கும் நன்றி நன்றி

Roy Cherian Cherukarayil said...

Very nice....and the punch was in the last 4 lines...

ஹ ர ணி said...

பத்மா...

எரிநிழலில் அருகில்நின்று அதன் சிறுசிறு சுடர்வெப்பமுணர்ந்தேன். சொற்செட்டும் அதன் துளிவெப்பமும் அடர்த்தியானது. வடிவமும் அதன் பொருண்மையும் அருமை. வாழ்த்துக்கள். உறரணி.