உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்
ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச் சிரிக்கிறது
நான் பேசநினைப்பதும்
உன் மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன
நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .
இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம்
51 comments:
//கண்களால்
கதைக்கிறோம் நாம்//
வார்த்தைகள் அற்ற நிலை.. அதன் சுகமே அலாதி..
மொத்தமாகவே ரொம்ப அழகு. ரிஷபன் சொன்னா மாதிரி மௌன மொழிக்கீடேது.
காதல் அனுபவித்த ஆழமான
காதல் வரிகள்.அற்புதம் பத்மா.
ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச் சிரிக்கிறது
காதலில் மௌன மொழி என்பது ஒரு பரவசம் வெளிபடுத்திய விதம் அருமை
அருமைங்க... கண்களின் மொழிவிளையாட்டில் சிலநேரம் மௌனம்கூட வாயடைத்துப்போகும்... அருமையான எக்ஸ்ப்ரஸன்....
//நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .//
அடடா...அழகு....
அழகான கவிதை
வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு!
அருமைங்க...
ண்ணா... ரைட்டுங்ண்ணா...
நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .
...... அருமையான வரிகள். :-)
//நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .//
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்.
அழகான கவிதை பத்மா.
மௌனம் பல உண்மைகள் பேசும்
ரொம்ப பிடத்தது
வாழ்த்துக்கள்
விஜய்
//////////ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச் சிரிக்கிறது
///////
மிகவும் என்னை ரசிக்க வைத்த வார்த்தைகள் .அருமை . பகிர்வுக்கு நன்றி
அருமை..அருமை...நல்லா எழுதி இருக்கீங்க பத்மா...அந்த வார்த்தைகள் வரும் என்று தெரிந்து ஆனால் இன்னும் வராத நிலையில் அதற்குக் காத்திருக்கும் சுகமான தவிப்பு இருக்கே அது தனிதான்...
நல்லாயிருக்குங்க ...
//உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்//
அழகு!!!
வாழ்த்துக்கள்
கண்களால்
கதைக்கிறோம் நாம் :)
கவிதை சூப்பர்.....
//நான் பேசநினைப்பதும்
உன் மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன//
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டுமென்ற நிலை உறவின் பூரணத்வம்.உங்கள் மொழி வர வர மிக அருமையாக வசப்படத் துவங்கியிருக்கிறது.வார்த்தைச் சிக்கனமும்-சரியான துவக்கமும் முடிவும் ஒரு கவிதைக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றன.
உங்கள் கவிதையும் அப்படித்தான்.
அருமையான சொல் விளையாட்டு.
இதுவரை எழுதிய கவிதைகளை காட்டிலும் இது சிறப்பாக வந்திருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள். சித்திரமும் கை பழக்கம்!
வாழ்த்துகள் மேடம்.
கண்களிரண்டும், கதைக்கத் துவங்கியபின்
நடுவிலான வார்த்தைகளாலென்ன பயன்?
வார்த்தைகள் தேடி கண்களில் காண்டடைவது
அருமைதான்... பின் அருகாமையும்..
மேடம் எனக்கு அந்த பாட்டு நியாபகம் வந்துடுச்சு... :-)
கவிதை நல்லா இருக்கு பத்மா
வார்த்தைகளுக்கு இடையே
புகுந்து காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாது.
கண்கள் மட்டும் இல்லை என்றால் காதல் என்பதே மானுடத்தில் இல்லாமல் போயிருக்கும்..வெகு அழுத்தமான கவிதையைப் படித்த திருப்தி எனக்கு.
கவிதை அருமை
arumaiyana varthai vilayattu :)
உண்மை தான் ரிஷபன் .நன்றி
வாங்க வானம்பாடிகள் சார் .நன்றி
ரொம்ப தேங்க்ஸ் ஹேமா
:) நன்றி சரவணா
பாலாசி பாராட்டுக்கு நன்றி நண்பர்
மிக்க நன்றி
அருணா
கதிர்
அகல் விளக்கு
அஷோக் அண்ணா
சித்ரா மேடம்
நான் பேச நினைப்பதை நீ பேசினால் எத்தனை இன்பம்
இல்லையா அம்பிகா ?
நன்றி விஜய்
மிக்க நன்றி பனித்துளி ஷங்கர்
ஹ்ம்ம் காத்திருத்தல் சுகம் ...
நன்றி ஸ்ரீராம்
மிக்க நன்றி நண்டு
ராஜப்ப்ரியன்
யாதவன்
சிவாஜி ஷங்கர் வருகையே பாராட்டு தான்
நன்றி ஜெய்லானி
மிக்க நன்றி சுந்தர்ஜி
ஆனந்தமளிப்பது மிக்க சந்தோஷமாஇருக்கு ...
அது என்னையும் அறியாமல் நடக்கிறது என்றறியும் போது அது இன்னும் இரண்டு மடங்காகிறது ...
வாசித்து கருத்தளிதற்க்கு மிக்க நன்றி மீண்டும்
ஆடு மாடு சார் ,
முதல் மதிப்பெண் வாங்கிய மாணவி போல பெருமை கொள்ள வைக்கிறது உங்களின் ஊக்க வார்த்தைகள் .
மேலும் முனைவேன் .நன்றி
எந்த பாட்டு முரளி?
நிறைய பாட்டு வரப்போகிறது , beware
// நிறைய பாட்டு வரப்போகிறது , beware //
:-)
நல்லாருக்குங்க பத்மா...
வார்த்தையை வார்த்து வளைத்து
கற்பனையை ஒரு வழி செய்திருக்கிறீர்கள்!
வார்த்தைகள்! இல்ல..இல்ல..வாழ்த்துகள்!
ஹ்ம்ம் ஆமாம் வாசன்
நன்றி உயிரோடை
really? @ மதுமிதா?
ரொம்ப மகிழ்ச்சி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே
thanks a lot zeno
romba superb padmaja slient langauge made me think the old song nan pasa ninpthala nee pasa vandum
:) Wow...
Post a Comment