Tuesday, May 25, 2010

புறமும் அகமும்

புறங்காணின்
  அகம் மறைந்து போமோ?
அகங் கண்டு
மகிழ்ந்ததெல்லாம் பொய்யோ?

புறங்காணா
 நட்பெல்லாம் மாயோ?
அகம் காணும் !
எனும் விழைவு வீணோ?

புறங் கண்டு
புறத்தோடல் மெய்யோ?
அகம் அது கண்டு
அழிந்தே தான் போமோ?

புறமது தான்
புவியதனில் மேலோ ?
அகங் காண்பார்
என்பவரும் யாரோ?

புறங் கண்டு
புரியாமல் ஓடுமோ?
அகம் அது கண்டு
விசும்பத்தான்  வாழ்வோ

அகம் புறம்
காணாது ஏகுமோ?
புறம் அகம்
புரிந்தே தான் மீளுமோ ?

என்றாவது ஒரு நட்பு!   

39 comments:

Appu said...

வழக்கம் போல அருமையான கவிதை!

adhiran said...

welcome to the jungle :-)

Chitra said...

அடேங்கப்பா..... அகமும் புறமும்..... அருமையாக எழுதி இருக்கீங்க..... பாராட்டுக்கள்!

அகல்விளக்கு said...

//அகம் புறம்
காணாது ஏகுமோ?
புறம் அகம்
புரிந்தே தான் மீளுமோ ?

என்றாவது ஒரு நட்பு! //

:-)

கவிதை அருமை..

vasu balaji said...

செம வீச்சு..ம்ம்.

சுந்தர்ஜி said...

புறமெங்கும் அகம் தேடும் மேன்மையான மனம் துயருறல் ஏனோ? கிறக்கும் மொழி பத்மா.

Ashok D said...

ஆங்... புரிஞ்சிடுச்சுங்க...

மணிஜி said...

ரிலாக்ஸ் & சியர்ஸ் பத்மா....

Prabu M said...

புறத்தை மிகச் சாதாரணமாய் புறந்தள்ளிப் பேசுபவர்களுக்கு....
புறத்தின் நோக்கையும் அழகாக நடுநின்று சொல்லும் கவிதை...
இது ஒரு முடியாத தேடல்.... அழகாக வெளிக்கொண்டுவந்திருக்கும் புனைவு...
அகமும் புறமும் என்று சொல்லி பழக்கப்பட்டு போய்விட்ட நிலையில் "புறமும் அகமும்" மிகச்சரியான தலைப்பு :)

ஈரோடு கதிர் said...

அருமை

க ரா said...

அருமை.

பனித்துளி சங்கர் said...

நல்லா இருக்கு !

r.v.saravanan said...

நல்லா இருக்கு அருமை

"உழவன்" "Uzhavan" said...

அகம் புறம்னு போட்டு பட்டையக் கிளப்பிட்டீங்க..

விஜய் said...

புறமும் அகமும் அழகு

விஜய்

uma said...

agamum puramum what good heading for this kavidhi

க.பாலாசி said...

அடடா.. நட்புக்கான ஏக்கத்தை இதவிட அருமையா சொல்லமுடியாதுங்க...

தெளிநிலையில் அகமும் புறமும் வாய்ப்பின் அதுதானே இனிமைக்கொணரும் நட்பு...

VELU.G said...

extension from the last line

அகம் அறியாது புறமும்
புறம் அறியாது அகமும்
அழியுமோ?

அகம் அறிந்து புறமும்
புறம் அறிந்து அகமும்
வீழுமோ அறிந்ததினாலே
.....
......

யப்பா padma கலக்கிட்டீங்க

Madumitha said...

அகம் புறம்
அற்புதம்.

மதன்செந்தில் said...

திருவள்ளுவர் சொன்னத திரும்ப படிச்ச மாதிரி இருக்கு.. நன்று தொடருங்கள்..

வாழ்த்துக்கள்

www.narumugai.com

தமிழ் உதயம் said...

கவிதை நன்றாக இருந்தது.

பரிதியன்பன் said...

புறமும் அகமும் புரட்டிப் போட்டு விட்டது.வாழ்த்துகள்

ஹேமா said...

அகமும் புறமுமாய் நட்புத் தேடும் அழகே அழகு.வாழ்த்துகள்.

Priya said...

அகமும் புறமும் சேர அழகான கவிதை!

வவ்வால் said...

Mm bharathiyin thakkam kavithai vadivamaivil athigam thenpaduthu,

enna ore agathinai kavithaikala piravagam edukuthu? Innum konjam sorkalai pattai theettina vairamuthukalai kooda overtake seyyum vaaypu thenpadukirathu! Vazhthukal.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அகம் புறம்
காணாது ஏகுமோ?
புறம் அகம்
புரிந்தே தான் மீளுமோ ?//

என்ன ஒரு கோர்வை? அருமை

பத்மா said...

தேங்க்ஸ் zeno
thank u adhiran
மிக்க நன்றி சித்ரா
வாங்க அகல் .நன்றி
நன்றி நன்றி வானம்பாடிகள்

பத்மா said...

அது அப்படித்தான் சுந்தர்ஜி .நன்றி

ஓகே அசோக்

மணிஜி மறந்து போய் இங்க cheers ஆ

ரொம்ப நன்றி பிரபு சார்.சந்தோஷமா இருக்கு .நன்றி மீண்டும்

பத்மா said...

ஈரோடு கதிர்

ராமசாமி கண்ணன்

பனித்துளி ஷங்கர்

R V சரவணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

பத்மா said...

உழவன் :) தேங்க்ஸ்

நன்றி விஜய்

தேங்க்ஸ் உமா

வேலு G உங்க extension உம் அருமை ,நன்றி நண்பர்

பத்மா said...

சரியாய் புரிந்து கொண்டீர்கள் பாலாசி .நன்றி

தேங்க்ஸ் மதுமிதா

மதன் காமெடி பண்றீங்க போங்க

நன்றி தமிழ் உதயம்

பத்மா said...

வாங்க பாலா கவிதைகள் .முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா ரொம்ப நன்றி மா

பிரியா மிக்க நன்றி .அழகான கண்கள்

பத்மா said...

வாங்க வௌவால் .நல்லா இருக்கீங்களா? இப்படி கிண்டல்லாம் செய்யாதீங்க .அழுவாச்சியா எழுதினா கொஞ்சம் மொக்கையா எழுதுங்கபீங்க ...இப்போ என்ன அகம்னா? இங்க எழுதறதெல்லாம் எழுத்துன்னு பல பேர் ஒத்துகறதே இல்ல .சில சமயம் நானே கூட .

பத்மா said...

மிக்க நன்றி தங்கமணி

உயிரோடை said...

அம்மாடி புரை ஏறுது ப‌த்மா...

ஜெனோவா said...

மிக அருமையான சொல்லாடல்கள் !
வாழ்த்துக்கள் !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

புறம் வெளியில் தெரியும் பளிச் ரோஜாப் பூ. அகம் அதனடியில் உறங்கிக் கொண்டிருக்கும் முட்கள்..
உங்கள் கவிதையைப் படித்ததும் எனக்கும் எதொ எழுதத் தூண்டியது கவிதையாய்....

ஜெய்லானி said...

//என்றாவது ஒரு நட்பு! //

இருக்கலாம்...எப்போதும் ஒரு நட்பு..

goma said...

புறக்கண்ணில் படாதது அகக்கண்ணுக்குப் புலப்படுமே

அகத்தில் எழும் ஓசை அத்தனையும், புறத்தில் ஒலிக்காது போகுமே