அன்பே!
நானும் நீயும் மட்டுமே உள்ள ,அதிசயமாய் நமக்கு வாய்த்த ,விடுமுறை நாளை கழிக்கப் போகிறோம் வா !
வானில் பகலவன் தோன்றும் முன் தளராது எழுந்து கடற்கரை நோக்கி விரைநடை போட்டு உதிக்கும் சூரியனை அலைகள் கால்கள் தழுவ வரவேற்று மகிழ்வோம்
இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின் இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம் .
பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே நீரில் திளைப்போம் .
பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும் வாசித்து பார்ப்போம்
உனக்கு பிடித்த வரிகளை நீ சிலாகித்து எனக்கு புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய அதை உற்று நோக்கி பரவசம் கொள்வோம்
எனக்கு மிகப்பிடித்த பின் மதியப் பொழுதில் நம் வீட்டு வாசலில் காற்று நம்மை தழுவி அணைக்க ஏதும் பேசாமல் கைப்பற்றி மௌனம் சுவைப்போம்
அப்படியே என்ன் மடி சாய்ந்து உறங்கி விடுவாய் நீ.குழந்தைபோல் உறங்கும் உன் தலை கோதி உன் முகம் ரசித்து புன்னகைப்பேன் நான் .
கண் திறக்கும் நீ என்னவென்று கேட்க ,ஏதுமில்லை என நான் தலையாட்ட பொன்னால் ஆக்கப்பட்ட கணங்கள் அல்லவா அவை ?
ஞாயிறு மறையத் தொடங்கியதும் நாம் திரும்ப நடக்கத் தொடங்குவோம் .
உலகமே வியக்கும் நம் கோயில் சிற்பங்களின் நுணுக்கம் வியந்து சேர்ந்து ரசிப்போம்
சோழரும் பாண்டியரும் சேரனுமான தமிழக வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவாய் நீ .அதில் திளைத்து, ஆண்டுகள் ஆயிரம் கடந்த வாயிலில் சிலிர்த்து நிற்ப்போம் நாம் .
எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன!
அந்த இளஞ்சூடான கருங்கல்லில் அமர்ந்து இலக்கியம் ,சித்தாந்தம்,காதல்,மனவியல் என சகலமும் கதைப்போம் நாம்
நிலவு வானில் நடக்கும் நேரம் ;இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .
எத்தனை பருகினாலும் தீராத தாகத்தோடு நிலவையும் கடலையும் உண்டு தீர்த்து மனதில்லாமல் வீடு ஏகுவோம்.
மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .
எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்
உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ !
37 comments:
ரம்மியம்:).
மிக அந்தரங்கமான கடிதம்.
வசீகரா பாடலை ஞாபகப்படுத்தியது.
அனுபவித்து எழுதப் பட்ட வார்த்தைகள்!
படிக்க சுகமாக இருந்தது!
ஒர் அற்புதமான காவியம்........
Good Romance.....
அனுபவித்து எழுதப் பட்ட வார்த்தைகள்!
ரம்மியமான அந்தரங்க கடிதம்...
மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .
எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்
உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ !
..... மிகவும் அனுபவித்து எழுதிய வரிகளில், அசத்திட்டீங்க! பாராட்டுக்கள்!
very beautifully real letter to very loved one nice kaviam
சுகமாய் இருக்கிறது,
அற்புதம் இந்த கடிதம்.
புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய ...
எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன...
உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ ..
கொஞ்சம் கை கொடுங்க பத்மா.. கண்ணுல ஒத்திக்கிறேன்..
அன்பு பத்மா,
அழகாய் இருந்தது... கோடை மழை மாதிரி... தாழ்வாரத்தின் கீழ் நின்று ரசிக்க முடிகிறது ஒவ்வொரு துளியையும்... ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ரசனையான உறவு... எல்லா விஷயங்களையும் நேசிக்க வைக்கிறது... அது கவிதையா இருக்கட்டும், ஒரு இசைத் துளியாய் இருக்கட்டும், உணவு பரிமாற்றமாய் இருக்கட்டும் இன்னும் ஏனைய பிரவாவும் இருக்கட்டும் அது காவடி சிந்தாய் ஒரு தினுசாய் இருக்கிறது...
பாதி ராத்திரி வேலையில் வீட்டு பக்கத்திலே வந்து மேவி, ஒரு பாதகன் அந்த பாவி, கையை பற்றி கூட்டி கொண்டேகினான் உள்ளம் பதைத்ததேன்னு வருகிற ரெட்டியாரின் பாடல்களில் வரும் ஒரு ரகசிய பகிர்வு போல காதோடு மயிர் விலக்கி கிசுகிசுப்பது போல இருக்கிறது... கொட்ட கொட்ட வருகிறது ஒரு அருவி... வழிந்து நிரம்பி, நிரம்பி வழிகிறது... வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள் கை பிடித்து நடக்கையில் உடன் வருபவர்களின் வெம்மை சுடு மூச்சு ஒரு ஒத்தடமாய் பரவுகிறது மனசெங்கும் பத்மா...
ஒரு பொயடிக் கவிதை... இது அழகு பெண்...கிற மாதிரி...
அன்புடன்
ராகவன்
brave disclosure.
chiththirai vaazhththukkal padma.
படிக்கும் போது மிக மிக ரம்மியமாக இருக்கிறது மனதிற்கு...
இது என்ன உங்களின் “எழுத்தோவியம்”ஆ??
நன்றாக உள்ளது பத்மா அவர்களே...
மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html
அடடா...
ஆழகான, மனதுக்கு நெருக்கமான கடிதம்
காதல் வழிகிறது
'கல்யாணத்தேனிலா'
பாட்டும் இசையும்அதில் இன்னும் கொஞ்சம் செறிவூட்டிய கவிதையுமாய்க் கலந்து கேட்கிறது பத்மா.அழகு.
எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு பத்மா. மிகவும் ரசிச்சு படித்தேன்!
மனமெல்லாம் மொழியின் சுகந்தம் கசிகிறது.கொடுத்து வைத்த விடுமுறையும்,பொருத்தமான இணையும் வரப்பிரசாதம்.நமக்குத் தேவையான எல்லாம் நம் வசமேதான் இருக்க நாம்தான் சுவர்களுக்குள் சுருங்கிப்போய்விட்டததை முகத்தில் அறைந்தது போலச் சொன்ன பதிவு.
மேலே தொடரச் சொற்களின்றி கொய்த மலர் நீட்டுகிறேன்.
Classic..!
//தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம்//
//நிலவு வானில் நடக்கும் நேரம்; இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .
//
அவ்ளோதானா? அநியாயதுக்கும் நீங்க சிம்பிள்ங்க.. :)))
நெஞ்சில் தங்கி விடும் காலங்களைப் பற்றி சொல்லும் கவிதை...அருமை.
அருமை பத்மா... ரெம்ப அழகா இருக்கு... தமிழில் அகத்திணை செய்யுளை படிப்பது போல் புரியும் அழகுடன்
nice!
:-)
ஓயாத உலகபரபரப்பையெல்லாம் ஒருநாள் முழுதும் ஒதுக்கிவிட்டு அன்புத்துணையோடு ஆசை தீர அலைந்து திரிந்து மகிழ நினைக்கும் அற்புதகணங்களை அழகாய் வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்.
காதல் இதை அனுபவிப்பதும் பகிர்வதும் சுகமான விஷயம் அனுபவிக்கும் நேரத்தை விட அந்த நிகழ்வை மனசு அசை போடும் நேரம் வாழ்வில் எண்ணவன்னா காவியமாகும்...
arumai
I have only one word to tell u about ur kavithai, i.e r..e..a..l..l..y.. fantastic!
நன்றி வானம்பாடி
நன்றி தமிழ் உதயம்
மகிழ்விற்கு நன்றி ராமமூர்த்தி
கரிகாலன்
சித்ரா
சே குமார்
உமா
சைவகொத்துபரோட்டா
ரிஷபன்
ஆதிரன்
ராகவன்
கோபி
கதிர்
ராஜப்ரியன்
காமராஜ்
பிரியா
சுந்தர்ஜி
ஜெகநாதன்
இர்ஷாத்
ஸ்ரீராம்
அப்பாவி தங்கமணி
பா.ராஜாராம்
துபாய் ராஜா
lk
கௌசல்யா
அனைவருக்கும் என் நன்றி .என் கிறுக்கல்களை எல்லாம் வந்து படிப்பதற்கு .நன்றி நன்றி
சும்மா இருந்த சங்கை .....
நிழல்களில் கலக்கிறேன் ,
நிஜங்களை மறக்கிறேன் ,
அருமையான பதிவு தோழி , என்ன கொஞ்சம் லேட்டா படித்திருக்கிறேன் .
என் முந்தைய பின்னூட்டமும் இதுவும் உங்கள் பார்வைக்காகத்தான். பிரசுரிக்க வேண்டாம்.
அழகான்......... மனதை தொட்ட வரிகள் ஒவ்வொருவருக்கும் இப்படி வாய்க்க வேண்டும்.
classic!
அன்புள்ள பத்மா,
உங்களது இந்த பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html
மென்மையான உணர்வுகளை மிக அழகாக எழுத்துக்களில் வடிக்கிரீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றி!
ரஞ்ஜனி
ranjaninarayanan.wordpress.com
/பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும் வாசித்து பார்ப்போம்//
பின் நீ காய் நறுக்க அதன்
பின்னே , குக்கர் திறந்து
பின் அதில் பாதி நீர் நான் பிடிக்க
பாங்காய் அது சரி என நீயும் சொல்ல,
பாதி டம்ளர் அரிசி எடுத்து
போதுமா பார் என்றுமே நான் கேட்க ,
எத்தனை நாள் சொல்லுவது
எப்ப உனக்குப் புரியறதென்
நீ கத்த நான் கேட்க,
நீ கத்த கத்த, நான் கேட்க கேட்க,
நடு நடுவே
விஜய் டிவியில்
விவேக்கும் வடிவேலுவும்
கிண்டலடிக்கும் காட்சியைக்
கண்கொட்டா ரசித்திடும்
கிழவியே ! என் இனிய
இல்லத்தரசியே !
இனி உன்னையல்லால்
இனிக்கும் கவிதை
எனக்கென ஒன்றும் உண்டோ ?
சுப்பு தாத்தா.
அழகான காவியக் கடிதம் !
azhagaai ezhuthiyirullireergaL..!! :)
Post a Comment