இரண்டு கைகள் விரித்து
அந்தோணியார் சிலை எதிரே
தினமும் இறைஞ்சி நிற்பார் அந்த முதியவர்
கண்ணில் தோன்றும் இரங்கல்
கல்லையும் கனிய வைக்கும்
அவர் பிரார்த்தனையை நிறைவேற்று ..
என்பதே என் வேண்டுதலாயும் ஆகிவிட்டது
பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார் போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ?
இப்போதெல்லாம் அந்தோணியார் கோவில் தவிர்த்தே அலுவலகம் போகிறேன்
ஏதாவது பிரார்த்தனை என் கண்ணில் பட்டுவிடப் போகிறதென்று!
54 comments:
எளிமையான் வார்த்தைகளில்....மனதை கணக்க வைத்துவிட்டீர்கள்...
அருமை, அருமை.
//பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார் போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ? //
எதோ செய்கிறது மனம்.
வாழ்க கவிதாயினி பத்மா
நன்றி ராமசாமி .முதல் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி கற்றவரே
முகுந்த் அம்மா . so fast .பிடித்ததா? மிக்க நன்றி
அட்டகாசம்...
உங்கள் கண்ணில் படவில்லை என்றாலும் "அந்த" பிரார்த்தனைகள் எத்தனையோ பேருக்கு தொடரும்...... மனதை நெருடும் தருணங்கள்.....
good one
மனதை கவ்வி பிடிக்கிறது கவிதை.
வழக்கம் போல பத்மா டச்... எளிமயான நடை...
தேங்க்ஸ் அசோக்
நன்றி சித்ரா
thanks vanambadi sir
நன்றி தமிழ் உதயம்
படத்தை மாத்திட்டு அல்லிக்கு வந்துடீங்க போல இருக்கே!!
மனதை தொட்டது....அருமை.
எத்தனையோ பேர்களுடைய மனவோட்டத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்...
//அவர் பிரார்த்தனையை நிறைவேற்று ..
என்பதே என் வேண்டுதலாயும் ஆகிவிட்டது//
ஆஹா..
//ஏதாவது பிரார்த்தனை என் கண்ணில் பட்டுவிடப் போகிறதென்று!//
அருமை..
மிக்க நன்றி தங்கமணி
ஆமாம் ஜெய்லானி.இது தாமரை இல்லை?பத்மான்னா தாமரை தானே ?
ஸ்ரீராம் நன்றி
காணாமல் போய் இங்கே ஒரு டிவிஸ் இருக்கு பத்மா. கவிதை நல்லா இருக்கு உணர்வுபூர்வமாக
எங்களையும் அவருக்காக வேண்ட வெச்சிட்டீங்க ஆத்மா சாந்தியடையயென்று..சில வரிகளில் மனதை தொட்டது உங்கள் திறமையே பத்மா..
//////பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார் போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ? ////////
சிந்திக்கத் தூண்டும் வாசகங்கள் . அருமை .பகிர்வுக்கு நன்றி !
யதார்த்தமான கவிதை
நல்ல சிந்தனை!
சுற்றுப்புறத்தை
உற்றுக் கவனிப்பீர்கள் போலிருக்கிறதே!
ஒரு உருக்கமான கதையே
சொல்லி விட்டீர்கள்!!!
இயல்பான மனப்பாங்கு உங்களின் கவிதையில்... அருமை...
வழக்கம்போல எளிமையான அழகான கவிதை!
சிலருக்கு, வரங்களே சாபமாய்,
சாபங்களும் சில சமயம் வரமாய்.
ஏற்கும் தகைமையில் `ஒன்றே`
வேறு வேறாய் அமைகிறது.
நன்றி வாசன் சார் .முதல் வருகைக்கும் கருத்துக்கும்
உங்கள் கருத்து மிகச்சரியானது
நன்றி பிரியா
மலர் வாங்க .முதல் வருகைக்கு நன்றி கருத்துக்கும் கூட
நன்றி உயிரோடை
தமிழ் ரொம்ப சந்தோஷமா இருக்கு .தேங்க்ஸ்
நன்றி ஷங்கர்
தேங்க்ஸ் கதிர்
ஆமாம் அண்ணாமலை .எல்லோரும் அப்படித்தானே
நிறைவா இருக்கு கேக்க பரோட்டா
நன்றி இர்ஷாத்
piraarthanai therithathuthaan. sollaaamal poi vittalum.
athu sari padma, comments athikamaa kaatta ippadiyum oru vazhi irukka?
thanks!
அடடா உண்மை தெரிஞ்சுட்டா ஆதிரன் ?
மனதில் அழமாக பதிந்த பதிவு. அருமை.
thanks rajan
இதே போல் நல்ல கவிதைகள் தொடர்ந்து தர.. என் பிரார்த்தனை
மனதை கணக்க வைத்துவிட்டீர்கள்..!
ரிஷபனை காணோமே என்று நினைத்தேன் .
நானும் அவ்வண்ணமே பிரார்த்திக்கிறேன்
நன்றி சே குமார்
அழகாக சொல்லி இருக்கிங்க
நல்லாயிருக்கு பத்மா :)
எதார்த்தம்தான் கவிதை, உங்கள் கவிதையில் யதார்த்தம் இருக்கிறது.
//பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார் போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ? //
padmaa...
great lines.
யதார்த்தம் இந்த கவிதையில் தெறிக்கிறது. ஏனோ தெரியவில்லை..
ஜெயகாந்தனின் ‘தேவன் வருவாரா’ ஞாபகம் வந்தது. இந்த நல்ல பகிற்விற்கு நன்றி!!
மிக மிக உருக்கமான எழுத்து...
//பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார் போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ? //
அடடா... இதை பாராட்ட வார்த்தையே இல்லை பத்மா...
யூகிக்க முடியாத ப்ரார்த்தனைகள் நம்மைக் கலங்கச் செய்கின்றன.நல்ல நெகிழ்ச்சியான கனவு.மனது பாரமாக இருக்கிறது பத்மா.
Post a Comment