Saturday, April 17, 2010

கன்ஃபர்ம்ட்

உறுதியாகிவிட்டது
கொஞ்சம் சீக்கிரம்தான்
மாமியார் வாயெல்லாம் பல்
மாமனார் கை பிடித்து புன்னகைத்தார்
ஊருக்கு போன் போட்டு சொல்லியாயிற்று
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை செல்லில்
தங்கையின் உற்சாகக்  கிரீச்சிடல்
நிமிர்ந்து அவர் முகம் பார்க்க முடியாது
சந்தோஷம் அப்பி கிடந்தது ,
அடுத்த வீட்டு மாமி வந்து
" கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல  ?"
என்று கேட்கும் வரை .

50 comments:

இராஜ ப்ரியன் said...

கடைசி வரியில் பின்னி எடுத்து விட்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

மனிதர்கள் இப்படியும்தான்:( !

கவிதை அருமை.

அண்ணாமலையான் said...

முட்டாள்கள் எங்கும் இருக்கிறார்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

"படமும்" வித்தியாசமா இருக்கு!!!

அமைதிச்சாரல் said...

சிலபேருக்கு இப்படித்தான். மத்தவங்க சந்தோஷத்த பாக்க பொறுக்காது,அந்த மாமி மாதிரி :-((

Chitra said...

விட்டு தள்ளுங்க. இப்படி ஊருக்கு பத்து பேரு சுத்திக்கிட்டு இருப்பாங்க.....

வானம்பாடிகள் said...

சின்ன கவிதை! பெரிய யதார்த்தம். இதுங்களுக்கு பேருதான் சோ கால்ட் சொசைட்டி.விஷம் விதைத்தே அறுவடை செய்யும் கூட்டம்:(

VELU.G said...

இப்படிக்கூட கேட்பாங்களா என்ன

க.பாலாசி said...

அந்த மாமித்தலையில ஏதாவது அம்மிக்கல்லு இருந்தா தூக்கி போடணும்னு தோணுது...

பொம்பளைங்களுக்கு சில பொம்பளைங்களே எதிரியா இருக்காங்களே.....

நல்ல கவிதைங்க...

padma said...

நன்றி ராஜப்ப்ரியன்

padma said...

ஆம் முட்டாள்கள் தான் :)

padma said...

நன்றி ராம லக்ஷ்மி

padma said...

நன்றி பரோட்டா

padma said...

ஆமாம் சித்ரா .சரிதான்

padma said...

அவங்க மத்தில தானே நாமும் வாழணும் அமைதிச்சாரல் ?

padma said...

ஆமாம் வானம்பாடி சார் .நன்றி

padma said...

வேலு , இப்படி கேட்பாங்களாவா?
கல்யாணம் ஆனா பிறகு முதல் முறை தலைகுளிக்கும் சமயம் அதை ஒரு சடங்காகவே கொண்டாடுகிறார்கள் சிலர்.
இதன் பின்னால் மிகவும் அருவருக்கத்தக்க உண்மை உள்ளது .
என்ன வழக்கமோ? என்ன உலகமோ?

padma said...

ஆமாம் பாலாசி.எதிரிகள் வேறெங்கும் இல்லை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எப்பொழுதுதான் திருந்துவார்களோ !கவிதை கலக்கல்.

ரிஷபன் said...

இப்படிப்பட்ட மனிதர்களும்..
கூடவே தன்மையானவர்களும்..
உலகம் இவர்களால் நிரப்பப்பட்டு..

முகுந்த் அம்மா said...

பத்மா, அற்புதமா இருக்கு. அடுத்தவங்க வீட்டு விசயத்தில
பிரச்சனை ஏற்படுத்துவதை சிலர் பிழைப்பா வச்சிருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நல்ல செய்தி சொல்ல லேட் ஆனாலும் அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க தெரியுமா.

ஜெய்லானி said...

வீட்டுக்கு வந்தா ஏதாவது கேக்கனுமேன்னு அடுத்த வங்க மனசை நோகடிக்க பலருக்கு ஆசை. என்ன ஜென்மங்களோ???

காமராஜ் said...

அற்புதம் பத்மா,ஒரு படைப்பின் பெருமை வலியாகும் தருணத்தை
அழகாச்சொல்லிருக்கீங்க.

உயிரோடை said...

கவிதையின் கடைசி வரி எனக்கு இரு வேறு கருத்தை தந்தது. மிக நல்ல கவிதை வாழ்த்துகள் பத்மா

தமிழ் உதயம் said...

padma said...

வேலு , இப்படி கேட்பாங்களாவா?
கல்யாணம் ஆனா பிறகு முதல் முறை தலைகுளிக்கும் சமயம் அதை ஒரு சடங்காகவே கொண்டாடுகிறார்கள் சிலர்.
இதன் பின்னால் மிகவும் அருவருக்கத்தக்க உண்மை உள்ளது .
என்ன வழக்கமோ? என்ன உலகமோ?


உங்கள் வேதனைகளை வழிமொழிகிறேன்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்ன மாதிரி சில வீடுகளில் முதல் குளியலுக்கு ஸ்வீட் செய்து கொண்டாடுவார்கள்...இது ஒரு மாதிரி அவமரியாதைதான்..

Nithya.R.Iyer said...

சாமா ராகம் கேட்டுக் கொண்டே படித்தேன்.மனது கனத்துப் போயிற்று..
ராகம் மனத்துள் எடுபடவில்லை

padma said...

இதுபோல் எத்தனை சங்கர் ?
யார் திருந்தனும்?நேரா கேட்பவர்களா?
மறைமுகமா அங்கீகரிப்பவர்களா ?

padma said...

ஆம் இதையும் வெல்லுவது தானே வாழ்க்கை
நன்றி ரிஷபன்

padma said...

இது ஒரு வழக்கமா போச்சு ,தெரிந்தா இல்லை தெரியமலா? புரில
நன்றி முகுந்த் அம்மா

padma said...

ஆமாம் ஜெய்லானி
கருத்துக்கு நன்றி

padma said...

வலியாகும் தருணத்தை உணராமல் இருப்பது தான் கஷ்டமாக இருக்கு காமராஜ் சார்

padma said...

நன்றி உயிரோடை .
i value your opinion

ஈரோடு கதிர் said...

கவிதை ’நச்’

//க.பாலாசி said...
அந்த மாமித்தலையில ஏதாவது அம்மிக்கல்லு இருந்தா தூக்கி போடணும்னு தோணுது... //

யோவ் கொல கேசு ஆயிப்போயிரும்யா!!

padma said...

அதுக்கு அவங்க கல்யாணத்துக்கு முன்னே virginity test பண்ண சொல்லலாம் .
cheap practice .இல்லையா ஸ்ரீராம்

padma said...

வாங்க நித்யா.
உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
அடிக்கடி வாங்க

padma said...

நன்றி தமிழ் உதயம்

padma said...

நன்றி கதிர்

DREAMER said...

வித்தியாசமான கவிதைங்க..! யதார்த்த நடையில் ரொம்பவும் நல்லாயிருக்கு.

-
DREAMER

padma said...

நன்றி ட்ரீமர்

Anonymous said...

எதார்த்தம் சொல்லும் கவிதை என்னதான் நாகரீகம் விஞ்ஞானம் என வளர்ச்சி கண்டாலும் இப்படிப்பட்ட அபிஷ்டுக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

அப்பாவி தங்கமணி said...

இப்படியும் சிலர்..... இந்த காலத்திலும்... நானும் இந்த முதல் குளியல் சடங்கை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்... ரெம்ப கொடுமைங்க இதெல்லாம். இன்னொரு வெறுக்கத்தக்க கேள்வி "எதாச்சும் விசேஷமா?"னு கல்யாணம் ஆன ஒரு மாசத்துல இருந்தே கேக்கறது (உங்க short & sweet கவதைகள் அருமை பத்மா)

D.R.Ashok said...

புரட்சிய ஆரம்பிச்சிட்டீங்க... confirmed.. :)

padma said...

நன்றி தமிழரசி

padma said...

தேங்க்ஸ் தங்கமணி .நீங்க வந்து படிக்கறதே சந்தோஷம்

padma said...

அதெல்லாம் ஒண்ணுமில்ல அசோக்

அண்ணாமலை..!! said...

கடைசி வரியில்
இருக்குது செய்தி!
அருமை!

padma said...

நன்றி அண்ணாமலை

துபாய் ராஜா said...

பெண்ணுக்கு பெண்தான் எதிரி... :((

ஹுஸைனம்மா said...

//கல்யாணம் ஆனா பிறகு முதல் முறை தலைகுளிக்கும் சமயம் அதை ஒரு சடங்காகவே கொண்டாடுகிறார்கள் //

முதல்முறை கேள்விப்படுகிறேன்!! கொடுமை!! இப்படியுமா??

//துபாய் ராஜா said...
பெண்ணுக்கு பெண்தான் எதிரி... :((//

ஸ்வீட் செய்து கொண்டாடுவார்கள் என்றால், வீட்டில் உள்ள ஆண்கள் மட்டும் இனிப்பு சாப்பிடமாட்டார்களா என்ன? ஏன் அவர்கள் தடைசொல்ல வேண்டியதுதானே இப்பழக்கத்திற்கு?