Thursday, April 22, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள்

தொடர் பதிவுக்கு பல அழைப்புகள் வந்துவிட்டன .என்னால் எழுத இயலுமா என்ற சந்தேகத்திலேயே எழுதாமல் விட்டேன் .


சைவ கொத்து பரோட்டா பிடித்த பத்து படங்கள் எழுத அழைப்பு விட்டதும் எழுதியே தீர்வது என்று முனைந்து விட்டேன் .


பிடித்த பத்து பெண்கள் போல ,என்ன பத்துகுள்ளேயே அடக்கி விடுகிறார்கள்? என் நினைவுக்கு முதலில் தோன்றிய பத்து படங்களை பட்டியல் இட்டுள்ளேன் ..எனக்கு படம் பார்த்தல் சிறுவயதிலிருந்தே ஒரு சுவையான அனுபவம்.அழுவாச்சி படங்கள் பிடிக்காது,என்னுடைய all time favourite எப்பவுமே M G R படங்கள் தான் .அதில் தான் நல்லவன் ஜெயிப்பான் ,காதல் வெல்லும், முடிவு சுபம். M G R உம் பார்க்க அழகு .பாடல்கள் சுகம் .இருப்பினும் மற்றபடங்களும் உள்ளனNOT IN THE ORDER .அழகன் .இது  நானும் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் படம் .அதில் உள்ள ஜாதி மல்லி பூச்சரமே எங்கள் குடும்ப பாட்டாக ஆகிவிட்டது .

அனுபவி ராஜா அனுபவிமூன்றாம் முறையாக திரையிடப்பட்ட போது பார்த்த படம். இதில் சிரித்த அளவுக்கு வேறு எதிலும் சிரித்ததாக நினைவில்லை .ஜாதிமல்லிசங்கீதமும் காதலும் நிறைந்த படம். ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா ஒரு மெச்சூர் காதல்.குஷ்பு

என் பிரிய நடிகையும் கூடஹேராம்இதை விமர்சிக்க எனக்கு திறனில்லை .ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் .என் ஆதர்சநடிகனின் masterpieceவெள்ளிவிழாஎந்த காலத்திலோ வந்த புரட்சிப்படம் இது.பார்க்கும் போதெல்லாம் கதாசிரியரின் துணிவை பாராட்டாமல் இருக்க முடியாது .சக்திகொடு என்று இந்த படத்தை பார்த்து வேண்டிக்கொள்ளலாம் .'காதோடுதான் நான் பேசுவேன்' பாட்டும் இதில் தானே !கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்அழகு அழகு என்று கதறும் படம் .மனதுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியான ,பாசிடிவ் முடிவு உள்ள படம் .நடித்த அனைவருக்காகவும் மிகப் பிடித்ததுமன்மதலீலை
என்னவோ தெரில இந்த படம் பிடிக்கும் .தில்லானா மோகனாம்பாள்

நாதஸ்வர இசையில் பித்து பிடித்தவள் நான் .பத்மினியின் பரதம் அல்லாத நடனத்தை மன்னித்து விட்டால் ,இந்த படம் ஒரு காவியம் .சட்டம்

இந்த படம் வந்தது பல பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது .அழகிய இரு கனவான்கள் .ஊடே ஒரு கன்னி .எல்லா படத்திலும் வருவது போல் தான் .ஆனால் இந்த இருவரும் நிஜமாகவே அழகிய கமல்ஹாசனும் ,சரத் பாபுவும் .அந்த பெண் மாதவி .இந்த மூவரின் கூட்டணிக்காகவே பிடித்த படம்கடைசியாக நம் தலைவர் படம்

நம்நாடு

இது மிகப்பிடித்த காரணம் ,இதில் ஜெயலலிதா ஆடும் நடனம்  "ஆடை முழுதும் நனைய நனைய' வென்று .ஒரு பெண்ணுக்கு பிடித்தவனே மணாளனாக வரப்போகிறான் என்று உறுதியானதும்

அவள் மனம் போடும் குதியாட்டம் அப்பா என்ன அழகு .அதை மறைந்து நின்று ரசிக்கும் தலைவரும் என்ன அழகு !எப்படியோ ஒருவழியாக எழுதி முடிச்சாச்சு.ஒரு சாதாரண layman போல வகைபடுத்தயுள்ளேன் .உலக சினிமால்லாம் எங்க ஊர் திரையரங்குக்கு வராது .வந்தாலும் புரியாது .மனதை சந்தோஷப்படுத்திய படங்கள் இவை .கலையின் நோக்கமே அது தானேஇந்த பதிவை தொடர

ஆதிரன்

ராகவன்


முகுந்த் அம்மா

அப்பாவி தங்கமணி

ஆகியோரை அழைக்கிறேன்

54 comments:

இராஜ ப்ரியன் said...

ஹேராம் படத்த சொன்னனீங்க பாருங்க அது ஒன்னு போதும்,உங்களுக்கு இருக்கிற சினிமா ரசனைய தெரிஞ்சிக்க.அருமை அந்த ஒரு படத்துக்காகவே உங்கள புதுசா எதனா வார்த்த கண்டுபுடிச்சி பாராட்டனும்.

. said...

பத்துபாட்டை(கொஞ்சம் அதிகமோ...) போல் எல்லாம் அருமையான படங்கள் தான்...
நானும் ரசித்த படங்கள்....

ஜெய்லானி said...

//இந்த படம் வந்தது பல பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது .அழகிய இரு கனவான்கள் .ஊடே ஒரு கன்னி .//

ஒரு நண்பனின் கதையிது ன்னு பாட்டே வருமே!!


மற்ற படங்களும் அழகு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் பதிவு .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சைவகொத்துப்பரோட்டா said...

இதில் ஐந்து படங்கள் நான் இன்னும் பார்க்கவில்லை ( 2, 3, 5, 7, 10)
இனிமேல்தான் பாக்கணும்.
நன்றி.

ஜாக்கி சேகர் said...

அழகன்., கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்னோட பேவரிட்...

Chitra said...

கரெக்டா "rules and regulations" படி எழுதிட்டீங்க. பாராட்டுக்கள்!

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இரண்மே எனக்கும் மிகவும் பிடித்த படங்கள். :-)

Anonymous said...

NICE COLLECTIONS PADMA

வானம்பாடிகள் said...

நானும் பெண்டிங் வெச்சிருக்கேன்.:). நல்லாருக்கு செலக்‌ஷன்

Priya said...

அழகனில் ஆரம்பித்து அழகாக பிடித்த பத்து படங்களை தொகுத்துள்ளீர்கள்.
அழகன் படம் வந்தபோது நான் பள்ளி மாணவி.அப்போதே எனக்கு நீங்க சொன்ன உங்க குடும்ப பாட்டு பிடிக்கும்.

தமிழ் உதயம் said...

ஒரே பாலச்சந்தர் மயமா இருக்கு.

philosophy prabhakaran said...

ரொம்ப பிளாஷ்பேக்குக்கு போயிட்டீங்களே படமா... இதுல நாலு படங்கள் மட்டும் நான் பார்த்த படங்கள்... ஹே ராம், க.கொ.க.கொ., அழகன், ஜாதிமல்லி இந்த நாலு தான் அவை...

adhiran said...

try panren!!!!

D.R.Ashok said...

சாதிமல்லி பூச்சரமே பாடலும்... மன்மதலீலை படமும் பிடித்தமானவை

முகுந்த் அம்மா said...

நல்ல தேர்வு பத்மா. அழகன், ஹேராம் எனக்கும் பிடித்த படங்கள். என்னையும் அழைத்ததற்கு நன்றி பத்மா.

ஸ்ரீராம். said...

அனுபவி ராஜா அனுபவி, ஹே ராம் போன்ற படங்களின் ரசனைகளுக்கே ஜே...சட்டம் ஓகே. வெள்ளி விழா ஆச்சர்யம்

padma said...

ஆஹா ராஜப்ப்ரியன் .இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? :)

padma said...

ஆஹா ராஜப்ப்ரியன் .இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? :)

padma said...

நன்றி ஆ ஆ

padma said...

ஆமாம் ஜெய்லானி.நன்றி

padma said...

தேங்க்ஸ் பனித்துளி

padma said...

பொறுமையா பாருங்க பரோட்டா .எழுதசொன்னதுக்கு ஓகே யா

padma said...

வாங்க ஜாக்கி சேகர் சார் .முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

padma said...

என்னமோ போங்க சித்ரா

padma said...

ATLEAST ரெண்டு படமாவது பிடித்ததா முரளி?

padma said...

THANK U THAMIZH

padma said...

உங்க கலக்ஷ்ன்ஸ் பார்க்க ஆவலுடன் இருக்கோம் வானம்பாடி சார்

padma said...

ஹே பிரியா இப்படிலாம் சொல்லி என் வயசு ஜாஸ்தி ஆக்கிடாதீங்க .அழகன் வந்தோன்ன பாக்கல.கொஞ்சம் வருஷம் கழிச்சுன்னு வச்சுகோங்க :)

padma said...

ஆமாம் தமிழ் உதயம் .என் FAVOURITE அவர்

padma said...

வாங்க பிலாசபி பிராபாகரன் .முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

padma said...

ட்ரை பண்ணறதா?நோ வே .கட கடன்னு எழுதுங்க ஆதிரன்

padma said...

உங்களுக்குமா அஷோக் ? மகிழ்ச்சி

padma said...

YOU ARE WELCOME MUKUND AMMA .WAITING FOR YOUR POST

padma said...

வெள்ளிவிழா படமே ஆச்சர்யம் தானே ஸ்ரீ ராம் ?

DREAMER said...

நல்ல கலவையான தேர்வுகள். இப்படங்களை வரிசையாக பார்க்க, கண்களுக்கும் கருத்துக்கும் ஒரு நல்ல விருந்தாக அமையும் போல் தோன்றுகிறது. தேர்வுக்கான காரணங்களும் அருமை..!

-
DREAMER

பார்வையாளன் said...

no superstar movie ???

: - (

LK said...

nalla selections padma..

அப்பாவி தங்கமணி said...

நல்ல தேர்வுங்க பத்மா. உங்க கவிதைகள் மாதிரியே உங்க பட தேர்வுகளும் கவிதையா இருக்கு. தொடர் பதிவுக்கு அழைச்சதுக்கும் நன்றி... எழுதிடறேன் சீக்கரம்...

R.Gopi said...

ஹலோ...

பத்து படங்களில் “தலைவர்” படம் ஒண்ணு கூடவா இல்ல...

என்னங்க இது...

எனிவே... உங்க லிஸ்ட்ல இருக்கற எல்லா படங்களும் நான் பார்த்தவையே.. நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும்...

பஹ்ரைன் பாபா said...

எனக்கு பிடிச்ச படம் ஒன்னு கூட இல்லையே..
ஒ.. மன்னிக்கணும்..
இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச படம் இல்ல..தலைப்பை நான் சரியா படிக்கல..அதான்..

சோ .. நோ கமெண்ட்ஸ்..

r.v.saravanan said...

அழகன் ,தில்லானா மோகனாம்பாள் ,படங்கள் எனக்கு பிடிக்கும்
சட்டம் படத்தில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தவை

அப்பாவி தங்கமணி said...

நீங்க அழைச்ச பத்து படங்கள் தொடர் பதிவு போட்டாச்சு பத்மா... கொஞ்சம் லேட்ஆ போட்டதுக்கு மன்னிக்கணும்... பாத்துட்டு சொல்லுங்க... அழைச்சதுக்கு மறுபடியும் நன்றி

பிரபு . எம் said...

இந்த பத்துப் படங்களையும் நானும் பலமுறை விரும்பிப் பார்த்திருக்கிறேன்....
என்னுடைய டாப் 10ல் இவை இருக்காது.... ஆனாலும் உங்கள் ரசனை மிகவும் இயல்பு .. அருமையானதும் கூட....
அழகன், அனுபவி ராஜா அனுபவி, கண்டுகொண்டேன், தில்லானா மோகனாம்பாள், ஜாதிமல்லி.... ச்சே ரொம்ப மெலடியான டேஸ்ட் உங்களுக்கு...

வாழ்த்துக்கள் :)

மேடேஸ்வரன் said...

கடலோரக் கவிதைகள்..?

VJR said...

ohh....,

with out S U P E R S T A R movi................e?

Riyas said...

எல்லாமே அருமையான தெரிவுகள்..

உங்கள் தளத்தை இப்போதுதான் பார்வையிட்டேன் எல்லாம் அருமையான பதிவுகள்.. பின் தொடர்ந்தும் விட்டேன்

Anonymous said...

Ellaame attu padangal. Try to list hundred. Few may be good.

aasaisaravana said...

அனைத்து படங்களும் நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் ...
http://aadaillathavarigal.blogspot.com/

அப்பாதுரை said...

பாதி படங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை!
பாலசந்தர் பிடிக்குமோ?
ஹே,ராம் அரை கிணறு தாண்டின படம்னு தோணுது (குருவைப் போலத் தான் சிஷ்யரும் :)

Arun said...

ஹே ராம் கமலின் masterpiece. எனக்கு மிகவும் பிடித்த படம். எவ்வளவு முறை பார்த்தேன் என்று தெரியவில்லை!! உங்கள் ரசனை அருமை !!

rasi said...

mm. good. neenga sonna yellam nalla padangal thaan. innum kooda kavanithup parkalam. magenthiranin mullum malarum, arilirunthu arupathu varai, uthirip pookal, 16 vayathinile, veedu, santhiyaa raagam, pallik koodam, naan pani aarriya devar magan, apoorva sagothararkal, michel madana kamarasan,guna, magalir mattum. innum niraiya naam kalathodu ottip pogavendum. yeninum nalla pagirvu. rasanaiku vazhthukkal.

Paa Krishnan said...

12.2.2012
I think we both have same taste Ms Padmaja, though some of the films I dislike
Good selections.
Paaki

Paa Krishnan said...

12.2.2012


I think we have same taste Padmaja. Most of the films you like are liked by me also.
Paaki