Sunday, April 18, 2010

நானாய் மாறிய இலை

நீண்ட இரு கைகளுக்குள் புக ஓடும் ஓட்டமாய் தான் என் கனவு
ஓடும்  போது கூட வரும் ஓர்  இலையின் அணுவாய் மாறிப்போனேன்
இங்கே அங்கே என்று மாறும்  நேரம் அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன  
இலையே நான்
நானே இலை
முகம் மட்டும் வேறாய் !
இலை உதிர்க்கும் பச்சை என் முகத்தில் தீற்றி
ஒரு பச்சை ஜந்துவாய் ஆகிப்போனேன்
மாறிய நேரம் நீண்ட  கைகள் காணாமல்  போயிருந்தன !
எனினும் அந்த காணாமல் போன கைகளின் அணைப்பில்
நானாய் போன இலையும்
இலையாய் போன நானும் 

52 comments:

D.R.Ashok said...

அப்ப நீங்க ’இரட்டை இலையா’? ;)

padma said...

சத்தமா சொல்லிடாதீங்க .நீங்கதானே advice பண்ணினீங்க எந்த ஒரு வட்டத்திலும் மாட்ட கூடாதுன்னு

D.R.Ashok said...

அட அட .. நம்ம பேச்சையும் கேக்கறதுக்குன்னு ஒருத்தர் இருக்கறார்ன்னு நெனைக்கும்போது கண்ணெல்லாம் கலங்குதுங்க...

வானம்பாடிகள் said...

என்னாச்சு? ஏன் குழப்பம்?:)

அண்ணாமலை..!! said...

என்னை நன்றாக சுத்திவிட்டு விட்டீர்கள்!
மறுபடியும் படிக்கிறேன்.

"நீண்ட இரு கைகளுக்குள்.....

padma said...

சில சமயம் எல்லாம் ஒரே குழப்பம் தான் வானம்பாடி சார் .குழப்பமும் சேர்ந்தது தானே வாழ்க்கை .நெஜம்மா தெளிதலுக்கு காத்திருக்கிறேன் .ரசமாகும் அப்போது .வாழ்க்கையை சொன்னேன் :)

padma said...

அண்ணாமலை சார் நீங்களுமா?

அஹமது இர்ஷாத் said...

//அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன//

எப்படி இப்படி.

அசத்திட்டீங்க போங்க......

துபாய் ராஜா said...

படிச்ச உடனே அப்படியே மிதக்குற மாதிரி ஒரு ஃபீல். அருமை.

dheva said...

வேறு எதுவும் எழுத வேண்டாம் பத்மா....இலையாய் மாறணும்னு நீங்க நினைச்சதே..கவிதைதான்! வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் said...

ரெண்டு தடவை புரியாம வாசிச்சேன். மூணாவது தடவை.. ஆஹா.. நானும் இலையாய்ப்போனேன்.

அமைதிச்சாரல் said...

ரெண்டு தடவை புரியாம வாசிச்சேன். மூணாவது தடவை.. ஆஹா.. நானும் இலையாய்ப்போனேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

விட்டலாச்சார்யா படம் பாத்த
மாதிரி இருக்கு :))

adhiran said...

நீளும் கைகளுக்குள் புகுமென் கனவில் வரும் பசிய இலையின் அணுமாற்றத்தில் ஒர்மையாகும் கணத்தில் மறைந்த கைகளில் நான் இலை. என் பச்சையமும் இலை.


இந்த கவிதையை இப்படி சொன்னா நல்லா இருக்கா?

உயிரோடை said...

நல்லா இருக்கு கவிதை. தலைப்பும் அழகா இருக்கு. வாழ்த்துகள்

சே.குமார் said...

சருகாக் கிடக்கிற வாழ்க்கையா...?
கவிதை நல்லாயிருக்கு... உங்கள் எழுத்துக்களில் அழகான ஆழமான வார்த்தை வீச்சு தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

padma said...

நன்றி அஹமத் இர்ஷாத்

padma said...

நன்றி துபாய் ராஜா.but நிஜம்மாவா?

padma said...

வாங்க dheva .முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

padma said...

கொஞ்சம் எனக்கே குழப்பம் தான் அமைதிச்சாரல் :)

padma said...

எதோ சண்டேல என்னாலான உதவி பரோட்டா :)

padma said...

ஆதிரன் அதென்ன நான் எழுதியதா?
குயவன் கை மண் போல .நீங்கள் பிள்ளையார் ஆக்கி
இருக்கிறீர்கள், நான் யானை என நினைத்து பிடித்த குரங்கை .
இது கவிதை ....நன்றி

padma said...

நன்றி உயிரோடை

padma said...

சே குமார் மிக்க நன்றி

சங்கர் said...

கற்பனைக்கு கடிவாளம் போடமுடியாது... உதாரணம் உங்கள் கவிதை...

Chitra said...

நானாகி போன பூக்கள் கண்டிருக்கிறேன். இலைகள்? புதுமையாய் இருக்கு, பத்மா...!

ஜெய்லானி said...

இன்னாது இது தலையும் பிரியல வாலும் பிரியல ஆனாகா கவுஜ படா ஷோக்காகீது.

இராஜ ப்ரியன் said...

நான் இந்த கவிதையை முழுவதுமாக புரிந்துகொள்ளுமளவிற்கு பெரிய ஆள் இல்லை.அருமை உங்கள் கவிதை.......

padma said...

பூவாக இயலாதபோது இலையாகவாது ஆகப்பார்க்கிறேன் .நன்றி சித்ரா

padma said...

ஆமாம் ஷங்கர். முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

padma said...

அப்படிஇப்படின்னு கடேசில கவுஜன்னு சொல்லிடிங்க .எனக்குமே கொஞ்சம் புரியாத மாறி தான் இருக்கு ஜெய்லானி

padma said...

ஆஹா ராஜப்ரியன் !எனினும் நன்றி

Anonymous said...

இதை நான் நேற்றே படித்தேன் பத்மா..அப்போது யாரும் பின்னூட்டம் இடவில்லை..சரி பின்னூட்டதை பார்த்து புரிந்து கொள்ளலாம் என மீண்டும் இன்று வந்தேன் என் போல் பலர் இங்கு எங்களுக்காக பொருள் சொல்லுங்க ஏன்னென்றால் கவிதை பிடிச்சிருக்கிறது..ஏதோ மனதுக்கு பக்கம் இருக்கும் உணர்வை சொல்வது போல்....

ஸ்ரீராம். said...

நல்ல இலை. நல்லா இருக்கு. ஆதிரனின் திருத்தப் பட்ட பதிப்பு அபாரம்.

தமிழ் உதயம் said...

ஒரு அழகிய கவிதை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////நீண்ட இரு கைகளுக்குள் புக ஓடும் ஓட்டமாய் தான் என் கனவு
ஓடும் போது கூட வரும் ஓர் இலையின் அணுவாய் மாறிப்போனேன்
இங்கே அங்கே என்று மாறும் நேரம் அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன
இலையே நான்
நானே இலை
முகம் மட்டும் வேறாய் !
இலை உதிர்க்கும் பச்சை என் முகத்தில் தீற்றி
ஒரு பச்சை ஜந்துவாய் ஆகிப்போனேன்
மாறிய நேரம் நீண்ட கைகள் காணாமல் போயிருந்தன !
எனினும் அந்த காணாமல் போன கைகளின் அணைப்பில்
நானாய் போன இலையும்
இலையாய் போன நானும் /////////


இது பெரிய ,பெரிய ஆளுங்களுக்குத்தான் விளங்குமோ ! நம்ம மாறி சின்ன , சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் புரியாது போல .

ரிஷபன் said...

பார்க்கும் பொருளோடு நீக்கமற கலந்துவிட்ட உணர்வு..

பா.ராஜாராம் said...

வாவ்!

பத்மா, கிரேட்!

பா.ராஜாராம் said...

D.R.Ashok said...
//அப்ப நீங்க ’இரட்டை இலையா’? ;)//

:-))

உதை,படவா.

"உழவன்" "Uzhavan" said...

எப்படிங்க இப்படியெல்லாம் :-)
 

DREAMER said...

உங்கள் கவிதையை ஒரு கிராஃபிக்ஸ் காட்சியாக மனதில் யூகித்துப் பார்க்க மிகவும் நன்றாய் இருந்தது.

-
DREAMER

ரசிகன்! said...

அணுவாய் மாறிப்போனேன்

இங்கே அங்கே என்று மாறும் நேரம் அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன///

அட்டகாசமான சொற்பிரயோகம்!!!

அழகான களம்!!!

கவிதை... அழகு!!!

padma said...

தமிழ் என்ன பொருள் சொல்லறது?
மனதுக்கு என்ன தோணுதோ அப்படி எடுத்துகோங்க .
மிக்க நன்றி தமிழ்

padma said...

ஸ்ரீ ராம் நன்றி .ஆதிரன் திருத்தி எழுதியது
அபாரம்.ஆம் நானும் வழிமொழிகிறேன்

padma said...

நன்றி தமிழ் உதயம்

padma said...

சங்கர் சும்மா கதை விடக்கூடாது :))

padma said...

நன்றி ரிஷபன்

padma said...

பா ரா சார் முதல் முதலாக என் படைப்புக்கு வாவ் சொல்லிருகீங்க .ரொம்ப சந்தோஷமா இருக்கு .தேங்க்ஸ்

padma said...

உழவன்:))

padma said...

நன்றி ட்ரீமர் .இதற்குத்தான் ஆசைப்பட்டேன்

padma said...

நன்றி ரசிகன்

uma said...

superb after reading felt that oh if i would have been a leaf