ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்
நம்மிடையே ஆன மௌனம்
நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒரு
சிறகுபந்தைப் போல்மாறி மாறி பறக்கின்றன
நீ சிலசமயம் உன் இமைகளால் அவற்றைச்
சிறைபடுத்தி என்னை தோல்வியுறச் செய்கிறாய்
என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்
ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன
அவற்றை கவனமாய் உள்ளங்கையில் சேகரித்து
நீ உன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாய்
நம் மௌனம் பற்றி எரிகிறது
56 comments:
முதல் வாழ்த்து...
எல்லாம் காதல் செய்யும் மாயம்தானா இப்படியெல்லாம் . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் !
நன்றி மணிஜி
நல்லாருக்கா?
தேங்க்ஸ் சங்கர்
அருமை!
எப்படிதான் யோசிக்கிறீங்களோ!!!
"எரியும் மௌனம்
இதமான சூடு "
அழகாய் இருக்கு,
மீண்டும் ரசிக்கிறேன்....
பரோட்டா தேங்க்ஸ் தேங்க்ஸ்
வானம்பாடிகள் நன்றி
மகிழ்ச்சி பாலாசி
ரொம்ப நல்லாருக்கு பத்மா!
:-)
நன்றி பா ரா சார்
அர்விந்த் எதாவது சொல்லிட்டு சிரி
அட அட... மௌனம் அழகாய்
சூப்பராயிருக்குங்க...... வாழ்த்துக்கள்...
நல்லா இருக்குங்க.
இப்படி யோசிக்க எல்லாம் ஒரு தனி மூளை வேனும், மங்கு உனக்கும் மூளை ரொம்ப தூரம்
என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்
ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன
........ ;-) நடத்துங்க, நடத்துங்க..... nice!
சிம்ப்ள இருந்தாலும் நல்லா இருக்கு
காதல் வயப்பட்ட போது ஏற்படும் உணர்வுகள் அருமையாக வார்த்தைகளில் வடிச்சு இருக்கீங்க.
Well done padma.
நல்லா இருக்கு மௌன அலறல்...
மௌனம் சுடும் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால் எரியும் என்று அறிகிறேன், இப்போது!!
ஆஹா.. என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்
ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன
என்ன ஒரு பிரயோகம்..
என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்//
அருமை பத்மா ..:))
Nalla irruku padma yeppadi pa ippada unnku iippadi yethunun thonugirathu GR888 da
நல்ல கவிதை
எரியும் மெளனம் சுடவில்லை சுவையாய் இருக்கிறது....
நல்ல பதிவு தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆஹா...
இந்த காதல் செய்யும் மாயமே மாயம்..
//என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்
ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன //
படு சூப்பர்.... வரிகளில் காதல் வழிகிறது...
வாழ்த்துக்கள் பத்மா.....
\\ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்
நம்மிடையே ஆன மௌனம் \\
மென்மையான வரிகள்.
அன்பு பத்மா,
என்ன இது கொல்றீங்க!! அருமையான கவிதை பத்மா... சிறகு பந்தா அல்லது இறகு பந்தா... வார்த்தைகளின் முதுகில் முளைத்த சிறகுகள் அல்லது தொப்பியில் சொருகிய இறகுகளாய் பறக்கவும், மிதக்கவும் செய்கிறது இந்த கவிதை... கண்ணில் ஒற்றி கொள்ளும்போது பற்றி எரிவது வித்யாசமாய் இருக்கிறது...
இதைத்தான் சொல்கிறேன் பத்மா... உங்கள் ஆழ்ந்த வாசிப்பு உங்களுக்கு இது போன்ற நல்ல கவிதைகளை வாய்க்க பண்ணுகிறது... பாக்கியவான்கள் நாங்கள்... மௌனம் ஒரு அலாவுதீன் விளக்காய் தேய்க்க பூதம் வருகிறது... சொல்லுங்க எஜமானி என்று கைகட்டி நிற்கிறது உங்கள் ஏவலுக்கு...
மனசு நிரம்பி வழிகிறது போன்குமாகடல் போல விழுகிற இடங்களில் அருவியென பிரவகிக்கும் நேர்த்தியுடன் தட் தட்டென மூளைக்குள் விழுந்து நிரப்புகிறது...
வாழ்த்துக்கள் மற்றும் அன்பு
ராகவன்
இப்படிப்பட்ட அருமையான கவிதைக்கு கமெண்ட் போடாமல் மெளணமாக இருந்துவிடமுடியுமா :-)
சூப்பர்ங்க
நன்றி அசோக்
அஹமத் இர்ஷாத் ,தமிழ் உதயம் பாராட்டுக்கு நன்றி
அமைச்சரே அப்படிலாம் ஒண்ணும் இல்ல
thanks chitra
பாலா நீங்க படிக்க வந்ததே மகிழ்ச்சி
thanks a lot mukund amma
ஸ்ரீ ராம்,
ரிஷபன் ,
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
அனைவருக்கும் மிக்க நன்றி
நன்றி தேனம்மை
uma thanks di
உயிரோடை .
தமிழோசை ,
சசிகுமார்
மிக்க நன்றி
அம்பிகா உழவன் கோபி மூவருக்கும் நன்றிகள் பல
ராகவன் இப்படிலாம் பின்னூட்டம் போட்டு திணறச்செய்யாதீர்கள் .
இங்கு வலைத்தளத்தில் உள்ள பல எழுத்துக்களை
பார்க்கும் போது ஏன் உங்கள் எழுத்துக்களையே காணும் போது இது ஒரு கத்துக்குட்டியின் கத்தல்.
எனினும் தங்கள் வரிகள் என்னை இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யத்தூண்டும் .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வரிகளில் வார்த்தை ஜாலம்
கவிதை அருமை...
கவிதை...கவிதை. அருமை.
உங்கள் கவிதையை இன்றுதான் முதலாக வாசிக்கின்றேன் அருமையாக உள்ளது.
கவிதையாய் அழகு சேர்க்கும் வார்த்தைகள்
ஆஹா காதல் என்னென்னலாம் செய்யுது... மிகவும் ரசித்தேன்!
மௌனம் பற்றி எரிகிறது....
கவிதை அருமை பத்மா!!! தொடரட்டும்....... வாழ்த்துக்கள்!
நல்லாயிருக்கு கவிதை..வாழ்த்துகள்!
புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..
அருமை..
மேலும் மேலும் உருகி உருகி எழுதிய கவிதை என்பது தெரிகிறது..
தொடருங்கள்..
நன்றி..
நல்லாருக்கு. வாழ்த்துகள்.
athe mounam
nanaikkavum seiium samayangalil..
Post a Comment