Monday, April 5, 2010

வசந்தம்

தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு

மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ

பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம்

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி 

வந்தது வசந்தம்

43 comments:

தமிழ் உதயம் said...

வசந்தம் வருவதற்கு முன் இத்தனை நிகழ்வு உள்ளதா.

kavithaigal said...

அருமையான வரிகள்
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/

Ashok D said...

கலக்கிட்டீங்கணா... எப்டிங்கணா... ரொம்ப.... என கவிதைய படிக்காதீங்கணா... அப்புறம் இது மாதிரி சூப்பரா எழுத ஆரம்பிச்சுடுவீங்கணா :))

sigamani said...

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று .......arumai

ப்ரியமுடன் வசந்த் said...

//பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம் //

அருமைங்க..

வசந்தத்தில் இவ்ளோ இருக்கா? என்கிட்ட இது எதுவுமே இல்லியே...

:(



//D.R.Ashok said...
கலக்கிட்டீங்கணா... எப்டிங்கணா... ரொம்ப.... என கவிதைய படிக்காதீங்கணா... அப்புறம் இது மாதிரி சூப்பரா எழுத ஆரம்பிச்சுடுவீங்கணா :))//

அஷோக் அண்ணா கிர்ர்ர்ர்ர்ர்

இன்னா மேட்டர் நடக்குது?

முகுந்த்; Amma said...

//உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி//

ஒரு செடி விதையில இருந்து வர்றதை எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க.

அருமை பத்மா

Chitra said...

அருமையான கவிதை. வசந்தத்தை வரவேற்கும் வரிகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

வசந்தம் வரும் பின்னே, கவிதை
வரும் முன்னே.......:))

ராகவன் said...

Dear Padma,

This is it... Padma...

Great Work... I can post my comments in detail, late night today.

Keep going... congrats...

Ragavan

Anonymous said...

வசந்தத்தை உணரச் செய்தது கவிதை பத்மா...

மங்குனி அமைச்சர் said...

சூபர் சார்

'பரிவை' சே.குமார் said...

அருமை..!

வசந்தத்தை வரவேற்கும் வரிகள்.

உயிரோடை said...

வ‌ச‌ந்த‌த்தை ப‌ற்றி கோடையில் க‌த்திரி வ‌ரும் போது எழுதி... அடுத்த‌ வ‌ச‌ந்த‌த்தை ப‌ற்றி நினைக்க‌ வைச்சிட்டீங்க‌

"உழவன்" "Uzhavan" said...

படித்துப் பார்க்கப் பார்க்க ரொம்ப நல்லாருக்கு வரிகள்

ரிஷபன் said...

உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது.. கவிதையில்.. உற்சாக கை தட்டலுடன் வரவேற்பு..

பனித்துளி சங்கர் said...

அசத்தல் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !

adhiran said...

good one.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்கள் இடுகையைப் படித்ததும்,
வசந்தம் எனும் மெலிய தென்றல் என் கண்களை வருடிச் செல்ல....மனத்துள் ஒரு மத்தாப்பு பூ பூத்தது!!!

காமராஜ் said...

//வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு //

கவிதையே வசந்தமாகிக்கொண்டிருக்கிறது பத்மா.

ஸ்ரீராம். said...

அழுத்தமான வரிகளில் அழகிய கவிதை...

R.Gopi said...

//தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு //

படிக்க ஆரம்பித்ததும் எனக்கும் வந்ததே இந்த பதிவின் மீது ஈர்ப்பு...

//மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று //

அட... வார்த்தை பிரயோகம் பலே ரகமா இருக்கே...!!

//உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி

வந்தது வசந்தம்//

வாவ்.... முடிவை பாராட்ட வார்த்தையே இல்லை...

சூப்பர்.........

பத்மா said...

தமிழ் உதயம் said...
வசந்தம் வருவதற்கு முன் இத்தனை நிகழ்வு உள்ளதா.


அப்பிடியா தமிழ் உதயம்? இன்னும் நிறைய இருக்கும்ன்னு நெனைக்கிறேன்

பத்மா said...

அருமையான வரிகள்
தேவராஜ் விட்டலன்


நன்றி தேவராஜ்

பத்மா said...

D.R.Ashok said...

கலக்கிட்டீங்கணா... எப்டிங்கணா... ரொம்ப.... என கவிதைய படிக்காதீங்கணா... அப்புறம் இது மாதிரி சூப்பரா எழுத ஆரம்பிச்சுடுவீங்கணா :))


தேங்க்ஸ் அண்ணன்

பத்மா said...

sigamani said...

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று .......arumai


நன்றி சிகாமணி

பத்மா said...

ப்ரியமுடன்...வசந்த் said...

//பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம் //

அருமைங்க..

வசந்தத்தில் இவ்ளோ இருக்கா? என்கிட்ட இது எதுவுமே இல்லியே...

:(



நன்றி வசந்த்

நீங்களே வசந்த் உங்களுக்கு உங்க அருமை தெரில

பத்மா said...

ஒரு செடி விதையில இருந்து வர்றதை எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க.

அருமை பத்மா

மிக்க நன்றி முகுந்த் அம்மா

பத்மா said...

Chitra said...

அருமையான கவிதை. வசந்தத்தை வரவேற்கும் வரிகள்.


நன்றி சித்ரா

பத்மா said...

சைவகொத்துப்பரோட்டா said...

வசந்தம் வரும் பின்னே, கவிதை
வரும் முன்னே.......:))



இதுல ஏதும் உள்குத்து இல்லையே பரோட்டா

பத்மா said...

thank u ragavan ,
it means a lot
thanks

பத்மா said...

தமிழரசி said...

வசந்தத்தை உணரச் செய்தது கவிதை பத்மா...


உணர்ந்ததுக்கு நன்றி தமிழ்

பத்மா said...

மங்குனி அமைச்சர் said...

சூபர் சார்


சாரா? நா பத்மாங்க
நன்றி அமைச்சரே

பத்மா said...

சே.குமார் said...

அருமை..!

வசந்தத்தை வரவேற்கும் வரிகள்.

நன்றி குமார்

பத்மா said...

உயிரோடை said...

வ‌ச‌ந்த‌த்தை ப‌ற்றி கோடையில் க‌த்திரி வ‌ரும் போது எழுதி... அடுத்த‌ வ‌ச‌ந்த‌த்தை ப‌ற்றி நினைக்க‌ வைச்சிட்டீங்க


தமிழ்நாட்டில் வசந்தமே சித்திரை வைகாசியில் தானே உயிரோடை ?

பத்மா said...

"உழவன்" "Uzhavan" said...

படித்துப் பார்க்கப் பார்க்க ரொம்ப நல்லாருக்கு வரிகள்


கேட்க கேட்க மகிழ்ச்சியாய் இருக்கு உழவன்

பத்மா said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !

நன்றி இவ்விடமும் சங்கர்

பத்மா said...

ரிஷபன் said...

உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது.. கவிதையில்.. உற்சாக கை தட்டலுடன் வரவேற்பு..


வரவேற்புக்கு நன்றி ரிஷபன் .மாற்றம் இல்லா வாழ்க்கையில் ஏது உற்சாகம் .கவிதை மூலம் என்னை புதுப்பிக்க முயல்கிறேன்

பத்மா said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உங்கள் இடுகையைப் படித்ததும்,
வசந்தம் எனும் மெலிய தென்றல் என் கண்களை வருடிச் செல்ல....மனத்துள் ஒரு மத்தாப்பு பூ பூத்தது!!!


உங்கள் பின்னூட்டமே கவிதையாய் மலர்ந்திருக்கிறது .நன்றி திரு ராமமூர்த்தி அவர்களே

பத்மா said...

adhiran said...

good one.


thank you adhiran

பத்மா said...

காமராஜ் said...

//வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு //

கவிதையே வசந்தமாகிக்கொண்டிருக்கிறது பத்மா.

உங்கள் வருகை அதை மணக்கச்செய்கிறது

நன்றி காமராஜ் சார்

பத்மா said...

ஸ்ரீராம். said...

அழுத்தமான வரிகளில் அழகிய கவிதை..

நன்றி ஸ்ரீராம்

பத்மா said...

கோபி

ரசித்து படித்து பாராட்டியதிற்கு நன்றி

கவிதன் said...

உங்கள் கவிதை வசந்தமாய் மனதில் படர்கிறது ..... அசத்தல்!!!