Tuesday, March 30, 2010

நீயாகும் நான்

நான் விரைவில் நானற்று போவேன்
போகும் முன்னேயாவது நம் சந்திப்பை எனக்கு பரிசளிப்பாயா ?

உன் கண்ணிலிருந்து புறப்படும் ஒளிக்கீற்று என் கழுத்தை சுவாசித்து   அக்கணத்தை நிறுத்த செய்யட்டும் ,

நான் நானற்று போகும் நேரம் உன் ஒற்றை விரல் தீண்டலின் ஸ்பரிசம்  மட்டும் என் கண்ணுக்குள் அடைந்து சிறை படட்டும்

நீ எனக்கு தர நினைக்கும் சின்ன  முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்

சிறு நகக்கீறலில்  எழும் குருதி காலை நனைத்து வழித்தடமாய் ஆகட்டும்

என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும் 

உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்

46 comments:

vasu balaji said...

நல்லாருக்குங்க. அரளி-வாசனை?

ஜெய்லானி said...

//உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான் //

இந்த ஒரு வரியே போதும். பாஸ் மார்க் போட

பழமைபேசி said...

சிந்தனை!

Thenammai Lakshmanan said...

நீ எனக்கு தர நினைக்கும் சின்ன முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்//

இது ரொம்ப அருமை பத்மா

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் கண்ணிலிருந்து புறப்படும் ஒளிக்கீற்று என் கழுத்தை சுவாசித்து அக்கணத்தை நிறுத்த செய்யட்டும் ,//

இதுமட்டும்தான் வெளங்குச்சுங்க...

Chitra said...

உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்


........ super!

அரளி-வாசனை???

சைவகொத்துப்பரோட்டா said...

அசத்துறீங்க!!

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று ப‌த்மா ஆனா நீ , நான், உன், என் இதை த‌விர்ந்து எழுத‌ பாருங்க‌. இது என‌க்கு கிடைக்கும் அறிவுரை இல‌வ‌ச‌மாக‌ உங்க‌ளுக்கும் :)

பத்மா said...

அரளி
is an exotic flower with an exotic smell.thought would be apt to use here

பத்மா said...

நன்றி ஜெய்லானி பாஸ் ஆக்கியதற்கு

பத்மா said...

வணக்கம் அண்ட் நன்றி வானம்பாடி சார்

பத்மா said...

தேங்க்ஸ் க்கா

பத்மா said...

நன்றி கலக்கல் சித்ரா ..அரளி பலருக்கு பிடிக்காது சிலருக்கு பிடிக்கும்

பத்மா said...

வசந்த்........... கொஞ்சம் ஈசியாதானே இருக்கு

பத்மா said...

நன்றி உயிரோடை .கருத்தில் கொள்வேன்

இராஜ ப்ரியன் said...

\\என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும்// .........அருமை

தமிழ் உதயம் said...

நன்றாக இருந்தது பத்மா.

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றாக வந்திருக்கிறது.
(முன்னரே ஒரு கமெண்ட் போட்டேன்,
வரவில்லை என நினைக்கிறேன்)

Priya said...

//என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும்
உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்//....அழகான வரிகள் பத்மா!

க.பாலாசி said...

எந்த வரியையோ படிக்கும்போது ஒரு நீலக்கலர் பூ இடையில வந்துட்டு போனது... கவிதையும்....

முகுந்த்; Amma said...

//நான் நானற்று போகும் நேரம் உன் ஒற்றை விரல் தீண்டலின் ஸ்பரிசம் மட்டும் என் கண்ணுக்குள் அடைந்து சிறை படட்டும் //

எப்படீங்க இவ்வளவு அழகா எழுதுறீங்க. ரொம்ப touching ஆ இருக்கு. சூப்பர் பத்மா

ஸ்ரீராம். said...

சிறு நகக் கீறலுக்கு அவ்வளவு குருதி வருமா?
அரளி வாசனைக்கு பதில் சொல்லி விட்டீர்கள்.

ரிஷபன் said...

கவிதைகளின் எளிமை மனசை சுலபமாய் தொட்டு விடுகிறது..

அம்பிகா said...

//என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும்
உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்//...
அழகான வரிகள்.

Thenammai Lakshmanan said...

பத்மா சில சமயங்களில் எர்ரர் கோட் என்று சொல்லி ப்ளாகர் தின்று விடுகிறதும்மா

ராகவன் said...

அன்பு பத்மா,

நல்ல கவிதை, மிக எளிமையாய் அதுவும், சந்திப்பு எத்தனை ரம்மியமாய் இருந்திருக்க வேண்டும், அதை தரச்சொல்லி கேட்காமல், பரிசாய் கேட்பது அதன் உன்னதத்தை காட்டுகிறது.

உறைந்த கணங்கள், சின்ன முத்தம் சிவப்பு அரளி, உவமைகளும், உவமானங்களும் கவிதையை இறகு நிலைக்கு உயர்த்துகிறது. நானற்று போவது, நான் நீயாக போவது மேலும் உன்னை என்னிலே கொண்டு நானாக திரிவேன் நான்... கொஞ்சம் குழப்புது பத்மா...

அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன்
என்ன வரிகள் பத்மா...
அருமை... அருமை... அருமையோ அருமை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்//

எப்படிங்க பத்மா இப்படி எல்லாம். ரெம்ப அழகா இருக்கு கவிதை

மங்குனி அமைச்சர் said...

//என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும்
உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்//

நீங்க பெரிய ரவுடியா இருப்பிங்க போல , இந்த மிரட்டு மிரட்ட்ரிங்க

பத்மா said...

ராஜப்ரியன் தேங்க்ஸ்

பத்மா said...

தமிழ் உதயம் நன்றி
சைவ கொத்து பரோட்டா ரெண்டு முறை கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி நன்றி

பத்மா said...

பாலாசி பின்னூட்டமே கவிதையாய் .
நன்றி நண்பா

பத்மா said...

merci beaucoup priya

பத்மா said...

டாக்டர் மேடம்
am touched by your comment

பத்மா said...

ஸ்ரீ ராம் காமெடி பண்றீங்கபா .
பிழைக்கு தக்கவாறு பரிசை குறைச்சுகொங்க :))

பத்மா said...

உண்மை தான் ரிஷபன் .எவ்ளோ கஷ்டப்பட்டாலும் கஷ்டமான வார்த்தைலாம் வந்து விழ மாட்டேங்குது .இதையும் நீங்கலாம் படிச்சு என்னை உற்சாகபடுத்துறீங்க பாருங்க அதுக்கு நா எதனை நன்றி சொன்னாலும் பத்தாது ரிஷபன் .
நிஜம்மா ரொம்ப தேங்க்ஸ் ரிஷபன்

பத்மா said...

நன்றி அம்பிகா

பத்மா said...

இப்படி எல்லா வரியும் படித்து விமர்சிப்பது மகிழ்ச்சியா இருக்கு ராகவன் .ஆனா எனக்கு விளக்கம் சொல்ல தெரில .
ஒருவர் அன்பில ஒருத்தர் கரைதல் போலன்னு வச்சுக்கலாம் .
மிக்க நன்றி ராகவன்

பத்மா said...

வாங்க மங்குனி அமைச்சர் அவர்களே .உங்கள் முதல் வருகைக்கு நன்றி .ரவுடியா??
சொல்லமுடியாது இருக்கலாம் :))

பத்மா said...

குமார் நன்றி நன்றி நன்றி

பஹ்ரைன் பாபா said...

உணர்வுகளை உரசும் வரிகள் அத்தனைக்கும் உயிருண்டு..
உயிரோட்டமில்லாத வரிகளுக்கு
உயிர் குடுத்திருக்கிறீர்கள்..

இன்னும் எதிர்பார்க்கிறேன் ....

பஹ்ரைன் பாபா said...

"" நீயாகும் நான்..""

தலைப்பின் ஈர்ப்பு.. முழுதும் படித்து முடியும் வரை.. ஏன் படித்து முடிந்த பின்னும் இருக்கிறது..

uma said...

Nee aagya naan what a nice heading and kavithi marveless romba nalla words keep it up

ரிஷபன் said...

உண்மை தான் ரிஷபன் .எவ்ளோ கஷ்டப்பட்டாலும் கஷ்டமான வார்த்தைலாம் வந்து விழ மாட்டேங்குது .

எனக்கு எளிமைதான் பத்மா பிடிக்கிறது.. கவிதைகளில். முரட்டு பிரயோகங்கள் புத்தியின் சாதுர்யம். புரிகிற வார்த்தைகள் தோளில் கை போட்டு ப்ரியம் சொல்கிற சுவாதீனம்..
புரியாத கவிதைகள் படித்துவிட்டு ‘அடப் போய்யா’ என்றுதான் விலகிப் போகத் தோன்றுகிறது.

பத்மா said...

நன்றி நன்றி ரிஷபன் .the words act as catalyst .am honoured

R.Gopi said...

//நான் நானற்று போகும் நேரம் உன் ஒற்றை விரல் தீண்டலின் ஸ்பரிசம் மட்டும் என் கண்ணுக்குள் அடைந்து சிறை படட்டும் //

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

//நீ எனக்கு தர நினைக்கும் சின்ன முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும் //

செவ்வரளி வாசம் அந்த சின்ன முத்தத்தின் வீகம்... பலே பத்மா..

//சிறு நகக்கீறலில் எழும் குருதி காலை நனைத்து வழித்தடமாய் ஆகட்டும் //

பலே சிந்தனை கவிதாயிணி அவர்களே

//உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்//

நான் என்பது நீயல்லவோ தேவ தேவி..

நல்லா எழுதி இருக்கீங்க பத்மா...