Sunday, March 28, 2010

நட்சத்திரதினுடனான பேச்சு மற்றும் விருது பகிர்தல்

அந்த ஒற்றை நட்சத்திரம் ரொம்ப நாளாக ஏதோ ஒன்றை  சொல்ல வேண்டும் என மினுக்கிக்கொண்டே இருந்தது
நானும் அதை பார்த்து பார்த்து பேச எத்தனித்துக்கொண்டே  இருந்தேன்
இன்று உறுதியாய் சொல்லிவிடும் என்று மரத்துடன் உரச  வந்த காற்று காதில் சொல்லிவிட்டு போனது
சொல்லிவிடு  சொல்லிவிடு என நான் கதறியது மேகம்வழி அது கேட்டிருக்கக்கூடும்
விர்ரென புறப்பட்டு என்னை நோக்கி வரும்வழி எங்கோ வீழ்ந்துவிட்டது
இப்போது அது கடலலையில் சிதறும் நிலவொளியாக மீண்டும் எதோ சொல்ல நினைக்கிறது
அந்த ஒற்றை நட்சத்திரம் மட்டும் எங்கு தேடியும் காணவில்லை
       
.......பத்மா
***********************************************************************************






  எனக்கு ஜெய்லானி அளித்த விருதை பின் வரும்    வலைப்பக்கங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்

  • அடர்கருப்பு
  • அன்புடன் அருணா
  • ஆதிரன்
  • உழவனின் உளறல்கள்
  • என்மனதில் இருந்து பிரியா
  • கிறுக்கல்கள்
  • முகுந்தம்மா
  • ராகவன்
  • ரிஷபன்
  • அன்புடன் நான்
  • அப்பாவி தங்கமணி
  • தமிழ் உதயம்
  • தனிமையின் சுகம்
  • ஒருமை
  • கடுகு தாளிப்பு
  • மதுரை சரவணன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

55 comments:

ஆடுமாடு said...

//மரத்துடன் உரச வந்த காற்று காதில் சொல்லிவிட்டு போனது//

mm நல்லாருக்கு மேடம்.

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா ஒரு வால்நட்சத்திரம் பற்றி சொல்லிட்டீங்க...

//என்னை நோக்கி வரும்வழி எங்கோ வீழ்ந்துவிட்டது //

அதனுடைய பிரகாசிக்கும் ஒளியின் வீரியத்தை காட்டிலும் பெண்களின் பார்வை வீரியம் அதிகம் என்பதாலோ.?

பத்மா said...

நன்றி ஆடு மாடு சார்

பத்மா said...

வசந்த் அது பத்தி உங்களுக்கெல்லாம் தான் அதிகம் தெரிந்திருக்கும்:)

Paleo God said...

ஜொலிக்கிதுங்க..:-)

Ashok D said...

:)

ராகவன் said...

அன்பு பத்மா,

அழகாய் ஆரம்பிக்கிறது கவிதை... மெல்ல மெல்ல ஒரு ஒளிக்கீற்றாய் ஆரம்பித்து, வால் நட்சத்திரம் போலவே தேய்ந்து விடுகிறது பத்மா...

கவிதையின் மத்தியும், கடைசி வரிகளும் கவிதையின் அடர்த்தியை குறைக்கிறது என்று தோன்றுகிறது... இன்னும் கொஞ்சம் படிமங்களை சேர்த்து அடர்த்தியை சேர்த்திருக்கலாம்... நட்சத்திரத்துடனான சம்பாஷனை கவிதைத் தலைப்பு...

அன்புடன்
ராகவன்

பத்மா said...

ராகவன் ,
நீங்கள் பின்னூட்டமே கவிதை போல் எழுதுகிறீர்கள் .நீங்கள் சொல்பவற்றை மனதில் இருத்தி அடுத்த முறை முயல்கிறேன். வழிகாட்டலுக்கு மிக்க நன்றி.கருத்துக்கும்

பத்மா said...

அசோக் ஷங்கர் மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

புதுசா..நல்லாருக்கு பத்மா!

பத்மா said...

நன்றி பா ரா சார்

ரிஷபன் said...

அந்த ஒற்றை நட்சத்திரம் வேறெங்கும் போகவில்லை.. உங்கள் கவிதைக்குள் விழுந்து விட்டது!

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு..

dheva said...

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு இருக்கிறது.....nice and keep it up.....! வாழ்த்துக்கள்

Unknown said...

நல்லாருக்கு.

/எதோ/ ஏதோ
/எத்தனிதுக்/ எத்தனித்துக்

vasu balaji said...

நல்லாருக்கே:)

காமராஜ் said...

கவிதை ஈர்ப்பானதகவும் அழகானதகவும் இருக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா தேடி பாருங்க.... :))

Roy Cherian Cherukarayil said...

Padma,
Really nice...good creativity and choice of words. Keep the momentum.

Best

Roy

முகுந்த்; Amma said...

வால்நட்சத்திரம் கவிதை நல்லாருக்கு பத்மா.
விருதுக்கு நன்றி.

ரிஷபன் said...

நன்றி பத்மா..

Santhini said...

எண்ணங்களை வெளிப்படுத்துவதில்
இருக்கும் தாமதம் பல சமயங்களில்,
எண்ணங்களை உதிரவும் செய்துவிடும்.
படைக்காத மலர் போல.
இயற்கை உங்களுடன் உறவாடுகிறது கவிதை நயங்களில்.
என் நன்றியும்

அன்புடன் அருணா said...

மழை...நட்சத்திரம் இவையெல்லாம்...எப்போ...எப்பிடி எழுதினாலும் என்னைக் கவர்ந்துவிடும்!இங்கேயும்!
விருதுக்கும் நன்றி!

ஜெய்லானி said...

உங்கள் ஆசை வீண் போகாது , நட்சத்திரம் எப்படியும் திரும்ப வரும்.

Anonymous said...

காணக்கிடைக்கும் ஒரு நாள் கவிதையே.....

DREAMER said...

அந்த நட்சத்திரட் எங்கும் போகவில்லை... பூமிக்குள் வந்து விழுந்தி(பிறந்தி)ருக்கும்.

அது என்றாவது ஒருநாள் தோழனாகவோ, பிள்ளையாகவோ, பொம்மையாகவோ, புத்தகமாகவோ, மலராகவோ எப்படியும் வந்து சேரும்..!

-
DREAMER

தமிழ் உதயம் said...

அன்பு பத்மா,


விருதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Chitra said...

உங்களுக்கு பாராட்டுக்கள். விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

adhiran said...

thanks padma.

"உழவன்" "Uzhavan" said...

தங்களின் அன்புக்கு மிக்க நன்றி :-)
விருதை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன். விருது பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!
 
அன்புடன்
உழவன்

uma said...

you will find the srar soon padma very nice keep going good

Priya said...

க‌விதை ந‌ல்லா இருக்கு...வாழ்த்துக்கள் பத்மா.

விருதுக்கு நன்றிகள் பல‌!!!

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்.

Ahamed irshad said...

கவிதை நலம். மேலும் பல விருது பெற வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

விருதுக்கு வாழ்த்துக்கள்...
அந்த ஒற்றை நட்சத்திரம் பலப்பல நட்சத்திரங்களாய் உங்கள் பக்கங்களில் விழுந்து கொண்டே இருக்கிறதே...!

ஜெய்லானி said...

உங்களுக்கு பாராட்டுக்கள். விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தோழி said...

விருதிற்கு நன்றி பத்மா. ஆனால் எப்போதும் போல ஒரே குழப்பம்தான். என்ன செய்வது விருதை??? எத்துனை பேருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? இதெல்லாம் எனக்கு புதிதாக இருப்பதால் வரும் தடுமாற்றம். :(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப ரெம்ப நன்றி பத்மா...(ஆஹா நமக்கு கூட இது எல்லாம் கெடைக்குதே)

நேசமித்ரன் said...

முகிழ்த்து முரசின் மைய கருமையை வைத்திருக்கும் நட்சத்திரம் பூவாகிறது
கவிதையாகவும்

நல்ல வெளிப்பாடுங்க !

கே. பி. ஜனா... said...

ஏதோ சொல்ல விழையும் தாரகையின் மினுக்கல், கேட்க என் ஆவல், சேதி வருமென காதோடு காற்றின் உரசல், பொங்கி எழும் என் கதறல், வேக வருகையில் எதிர்பாராத வீழல், பின்னும் அலைகளில் நிலவொளியாக அதன் சூழல் என அது காணாமல் போதல்.. அழகிய கற்பனை!உங்கள் கவிதை கலக்கல்!

'பரிவை' சே.குமார் said...

viruthai petrukkondom makizhchchi thozhi.

Jerry Eshananda said...

"பத்மாவின் விருது பத்ம பூஷனுக்கு சமம்" நன்றிமா...

குட்டிப்பையா|Kutipaiya said...

nala narration padma..

viruthu vangiyirukkum en nanbargalukaga mikka magizhchchi..

vaaazhutkkal!!!

பத்மா said...

ஆமாம் ரிஷபன் அருகிலேயே உள்ளது

பத்மா said...

நன்றி நாடோடி

பத்மா said...

thanks dheva

பத்மா said...

மாற்றி விட்டேன் செல்வராஜ் ஜெகதீசன் .நன்றி

பத்மா said...

வானம்படிகளுகும் காமராஜ் அவர்களுக்கும் நன்றி

பத்மா said...

thanks cherry

பத்மா said...

நல்லா தேடிகிட்டே இருக்கேன் சைவ கொத்து பரோட்டா

பத்மா said...

ரிஷபனுக்கும் அருணாவிற்கும் மிக்க நன்றி

பத்மா said...

வருகைக்கு நன்றி நானும் என் கடவுளும் .

பத்மா said...

அன்பு
ஜெய்லானி
தமிழரசி
ட்ரீமர்
தமிழ் உதயம்
சித்ரா
உமா
உழவன்
சாம்ராஜ்ய பிரியன்
அஹ்மத் இர்ஷாத்
ஸ்ரீராம்
அப்பாவி தங்கமணி அனைவர்க்கும் நன்றி நன்றி

பத்மா said...

பூவாக்க நினைக்கும் சிறு முயற்சிக்கு கைதட்டல் கொடுத்தமைக்கு நன்றி நேசமித்திரன் .மனது பூவாகிறது

பத்மா said...

ஜனார்த்தனன் பின்னூட்டத்தை கவிதையாக்கிய கவி .பின்னூட்ட கவிதை என் கவிதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.நன்றி நண்பா

ராஜ நடராஜன் said...

உங்கள் எழுத்தின் திசையில் முதல் முறையாக வருகிறேன்.

அழித்து விட்டு பின் உறுதிப்படுத்திக்கொண்ட பின் உங்களிடம் ஒரு கேள்வி.

எனது இறுதி இடுகையின் விடை உங்களுக்கு தெரிந்திருக்கும் சாத்தியமிருக்கிறதா?