Thursday, March 25, 2010

மொழிபெயர்ப்பும், ஜமுனாராணியும்

இது என் ஐம்பதாவது இடுகை 


        இன்று மட்டும் பார்த்து மகிழ ஜமுனா  
26.03.2010 
நான் மிகவும் வியந்து படிக்கும் வலைப்பூவின் சொந்தக்காரர் ஆதிரன் அவர்கட்க்கு இன்று பிறந்த நாள் .
சிறிய பிறந்த நாள் பரிசாக அவருடைய வரிக்கவிதையை மொழிமாற்றம் செய்திருக்கிறேன் .
ஆங்கிலத்தில் கட்டுப்படாத வீச்சு அவர் சொற்களுக்கு .எதோ சிறிது முயன்றிருக்கிறேன் .
மொழிபெயர்ப்பு முதல் முயற்சி .கருத்தூட்டவும் .

அன்பு நண்ப இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  

இதோ அந்த மொழிபெயர்ப்பு

Oh you gifted me a pregnant night
On the advent of an interrupted day.
Its  weight  pulls  my legs
Deep down to the earth.
Take back those moments ,or lend me your shoulders to carry for ever 
Let me seek a  respite .
Look yonder ,the girl is begging for a sheet of paper
For  the running rivulets yearn for a paper boat .. 
offer me a minute
to shift the night, laden with dense memories, for a while
as  i feel around for a piece of paper .
And if I can load this night and propel it to time
On that boat of hers
I shall come running to you the next instant
To gift a dark, charming, silky, and breezy night to u.


இதோஅவருடைய அந்த வரிக்கவிதை

இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய்
அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன
ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும்
பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள்.
தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி.
ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.
*************

36 comments:

ஜெகநாதன் said...

oh my god..!
உங்கள் ​மொழி​பெயர்ப்பின் வசீகரம் அபாரம்..!
​கொழுத்த இர​வை (I'd say Beefy dark) pregnant night என்ற விவரிப்பு ​மெய்சிலிர்க்க ​வைக்கிறது.
​மொத்த வரிகளும் அற்புதம்!!

ஆதிரனுக்கு (அன்பு மகிக்கு) பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! எல்லா நலனும் ​பெற்று இனிதுற வாழ வாழ்த்துகி​றேன்..!

//அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள்//

காகிதம் ஓடமாகும் சாத்தியம் இங்கு காண்கி​றேன்!

ஜெகநாதன் said...

பத்மா,
//And if I can load this night and propel//
இன்னும் முயன்றிருக்கலாம்..!
//.எதோ சிறிது முயன்றிருக்கிறேன் .
மொழிபெயர்ப்பு முதல் முயற்சி //
நீங்கள் தாமதமாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று நம்புகி​றேன். இழப்பு எங்களுக்​கே!
:))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆமா ஜமுனாராணியை பற்றி ஒன்னும் சொல்லலியே..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆதிரனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அருமையான கவிதை, மொழிபெயர்ப்பு மிக அருமை. நல்லாருக்கு பத்மா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஐம்பதாவது இடுகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் பத்மா.

மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

நண்பர் ஆதிரனுக்கு 'எங்கள்' பிறந்தநாள் வாழ்த்தும்...

ஜெய்லானி said...

50 க்கு வாழ்த்துக்கள்!!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

:)

அப்பாவி தங்கமணி said...

பின்னிடீங்க பத்மா...அது சரி...தொடர் பதிவு என்ன ஆச்சு அம்மணி

வானம்பாடிகள் said...

நல்லாருக்குங்க.:)

சைவகொத்துப்பரோட்டா said...

50-க்கு வாழ்த்துக்கள்.
எனக்கு ஹிந்தி தெரியாதே...
(நல்லாவே இருக்கு)

தமிழ் உதயம் said...

பிற மொழி ஆக்கங்களை எப்படி மொழி பெயர்ப்பது என்பதை தெரிந்து கொண்டேன். சந்தோஷம்ங்க பத்மா.

Anonymous said...

வாழ்த்துக்கள் 50க்கும் ஜமுனா ஆதிரனுக்கும்....

ராகவன் said...

Dear Padma,

The translated version is too good, even comparing with the original one. The folded things in the vernacular is unfolded in your english version. I'm happy to see the vocabulary, you have got and the apt usage of the same. Very few people could do justice to the translation work, you are raising as the one.

Warm regards,
Ragavan

D.R.Ashok said...

ஜமுனா - எனக்கு பிடித்த அழகான

50 பதிவுக்கு வாழ்த்துகள்

மகியின் கவிதை அழகு.

மொழிபெயர்ப்பு... Ok...

Chitra said...

ஐம்பாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
ஆங்கில புலமை மிளிர்கிறது!

adhiran said...

one of the best gift I ever had padma. thanks.

jamuna is jamuna is jamuna!!!!!!!

நாடோடி said...

ஐம்ப‌துக்கு வாழ்த்துக்க‌ள்..

thalaivan said...

Hello

you can post your news

on www.thalaivan.com

also

Thanks

"உழவன்" "Uzhavan" said...

//இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் //
 
இந்த வார்த்தைகளுக்குள்ளேயே லயித்துக் கிடக்கிறேன் அடுத்த வரிக்குச் செல்லயியலாமல்..
 
அருமையான மொழிக்கட்டுமானம் கொண்ட கவிதை. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

ஜெரி ஈசானந்தன். said...

பதிவு சும்மா "ஜம்முனு இருக்கு"

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துகள்,உங்கள் ஐம்பதாவது...பதிவுக்கும்,அந்த மொழி பெயர்க்கப்பட்ட கவிதைக்கும்.

முகுந்த் அம்மா said...

50 க்கு வாழ்த்துக்கள் பத்மா. original கவிதைக்கு தங்களின் மொழிபெயர்ப்பு அருமை.

ஆமா! எதுக்கு ஜமுனா ராணி படம் போட்டீங்க.

padma said...

முதல்ல ஏன் ஜமுனா ராணிக்கு பதில்.
ஆதிரன் மனம் கவர்ந்த நாயகி ஜமுனா
அவர் இந்நாளைய இளைஞர் ஆயினும்.
என்னுடைய இந்த இடுகைக்கு பின்னூட்டம் எழுதி என் ஐம்பதாவது பதிவையும் ,ஆதிரனையும் வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி.

மாதவராஜ் said...

50 க்கு வாழ்த்துக்கள்.
இன்னும் எழுதணும். எழுதுவீர்கள்.

காமராஜ் said...

ஐம்பதாவது பதிவுக்கு
வாழ்த்துக்கள் பத்மா.
அதிரனுக்கும்.
ஒரு முறை
ஜமுனாவைப்பார்க்க கொடுத்தத
அழகிய நிலாப் படத்துக்கும் நன்றி.
அமுதைப் பொழியும் நிலா.

ஆடுமாடு said...

50க்கு வாழ்த்துகள்.

ரிஷபன் said...

50 வது இடுகைக்கு நல்வாழ்த்துகள்.. மேலும் பல பதிவுகளுக்கும்.. ஜமுனாவின் அழகு தனி.. பழைய படங்களைப் பார்க்கும்போது அந்த ஈர்ப்பை உணரலாம்.. போட்டோ பார்த்து மகிழ்ச்சி...
கவிதை மொழிபெயர்ப்பு அபாரம்..

NIZAMUDEEN said...

உங்களுக்கு வாழ்த்துக்கள் (50ஆவது பதிவு).
ஆதிரனுக்கு வாழ்த்துக்கள் (பிறந்த நாள்).

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

பிரியமுடன்...வசந்த் said...

ஜமுனாராணியோட அந்த ஒற்றை சுருள் முடியே பல கவிதை சொல்லுதுங்கோ...

:)))))))

padma said...

u too vasanth?

பிரியமுடன்...வசந்த் said...

பின்ன ஆதிரனும் நானும் ஒரே ஊர்க்காரவங்களாச்சே....

padma said...

enjoy vasanth ..a thing of beauty is joy for ever

Priya said...

wow...Good translation!