மார்ச் மாசம் இயர் எண்டிங் .வழக்கம் போல செம வேலை .பதினைந்தாம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கும்பலை பாதி ஏறக்கட்டிவிட்டு வழக்கம் போல இரண்டரை மணிக்கு சாப்பிட உட்காரும் போது வலது கையை தூக்க கூட இயலாத அளவுக்கு வலி .
லஞ்ச் ரூமில், கடைசி நிமிடம் வரை காத்து நம் உயிர் வாங்கும் ஆசாமிகளை திட்டிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தோம்.அப்போது அருந்த தண்ணி கொண்டுவந்து கொடுத்த லக்ஷ்மியிடம்
"லக்ஷ்மி இந்த கைவலிக்கு எதாவது மாத்திரை வாங்கிட்டு வாங்களேன்"னுசொன்னேன் .
அவங்க "ஏன் மேடம் என்கிட்டே ஒரு மருந்து இருக்கு என் மருமகன் வாங்கிதந்தாரு சாப்பிட்டு வாங்க கொஞ்சம் போட்டு விடறேன் .எனக்கு நல்லா வலி கேக்குதுன்னு" சொன்னங்க .
ரொம்ப நல்லதா போச்சுன்னு வேகவேகமா சாப்பிட்டு (முப்பது நிமிடம் தான் லஞ்ச் ப்ரேக்)வந்தபோது லக்ஷ்மி மருந்துடன் ரெடியாக இருந்தார்.
"என்ன லக்ஷ்மி வாசம் ஊர தூக்குது?"
"ஆமாம் மேடம் இது ஸ்பெஷல் மருந்துன்னு மருமகன் சொன்னார்ன்னு "
கொஞ்சம் தேய்த்து விட்டார் .
அதற்குள் வாசம் பிடித்து வந்த மற்ற சக ஊழியர்கள் என்ன மருந்து இதுன்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தனர்
லக்ஷ்மிக்கு பெருமை தாங்கவில்லை .
அதற்குள் சங்கீதா "அய்யய்யோ மேடம் இதுல நாட் பார் ஹுமன் யுஸ் ன்னு போட்ருக்கே" என எனக்கு பயம் பிடித்துக்கொண்டது .
"லக்ஷ்மி அந்த பாட்டில கொடுங்க பாக்கலாம்" ன்னு படிச்சா மூட்டு வலிக்கானது என்று ஆங்கிலத்தில் இருந்தது .
ஹேய் மூட்டு வலி தானே போட்டுருக்கு என ஆராய்ச்சியில் இறங்கினோம் .
அதற்குள் ஒரு தோழி "ஏன் லக்ஷ்மி உங்க மருமகன் எங்கேந்து இது வாங்கிட்டு வந்தாராம் ?ன்னு கேக்க
அவங்க
"அது கரெக்டா தெரில மேடம் ஆனா அவர் மாட்டு ஆஸ்பத்ரில வேலை பாக்குறாரு .இந்த மருந்து வலிக்கு நல்லா கேக்குதுன்னு சொன்னோன்ன நாலு பாட்டில் கொண்டு வந்து குடுத்தார் மேடம்" ன்னு சொல்ல .....
எனக்கு தலையும் சேர்த்து சுத்தியது.அது மாட்டின் மூட்டு வலி மருந்து !
சக தோழிகள் செய்த கிண்டலில் எனக்கு கைவலி போயே போச்சு ..நிச்சயமா அந்த மருந்தால இல்ல....... சொன்னா நம்புங்கப்பா !
50 comments:
"moooo"ட்டு வலி மருந்து?????
ஹா, ஹா,ஹா,ஹா.......
சூப்பர் ங்க. எப்படியோ வலி போச்சுல்ல அது தான் முக்கியம் :)).
அது மருந்தாலையோ இல்ல மத்த மக்கள் கிண்டல் பண்ணதாலையோ வலி குறைஞ்சா சரி.
ஐயோ சித்ரா காலைல எழுந்து "மாஆஅ ன்னு" கத்த போறீங்கன்னு தான் என் பொண்ணு ஒரே கிண்டல்
வயசானலே அப்படிதாங்க மூட்டுவலி சகஜந்தான். யோகா, தியானம் ஏதாவது try பண்ணலாமே....
:))
முகுந்தம்மா அடுத்தாப்ல என்ன வலி வருமோ தெரில நமக்கு தான் நாளுக்கு ஒரு வலியாச்சே
அசோக் அண்ணன் எனக்கு மூட்டு வலின்னு யார் சொன்னா ?கை வலின்னு தானே சொல்லிருக்கேன் .என்ன கிழவின்னு சொல்றதிலே இருங்க
வானம்பாடிக்கும் வசந்துக்கும் :)) நன்றி
இதுதான் அதிர்ச்சி வைத்தியமா எதுவானாலும் வலி போச்சி தானே அது போதுமே ...........
எந்த மருந்தும் எதிலிருந்து செய்யப்பட்டதுன்னு அறிந்தோம்னா சில மருந்தை எடுத்துக்கவே முடியாது.
kalakkala kavaithaiya thandi ippa comedy ellama?
kalakkaunga :)
unga kai vali comedy ya nu kekkathinga, neenga eludhinatha sonnen :)
மாட்டுக்கு மூட்டு வலி வருமா?
உங்களுக்கு தெரியாததா ரிஷபன்? :)
ஆமாமா அப்பிடி தான் போட்டு இருந்தது
thank u zeno .just tried a small one
ஆனா செம கற்பூர வாசனை தெரியுமா ? மாட்டுக்கு தெரியும் போல கற்பூர வாசனை .
வரவுக்கு நன்றி தமிழ் உதயம்
ஆமாம் சிகாமணி .ரெண்டு நாள் கிண்டல் தாங்கல
"மா"ட்டு வலி...
மாட்டோட மூட்டு வலி மருந்த, மனுஷங்க, நாம தடவினா,அப்ப மாட்டுக்கு டைகர் பாம் தடவலாமா?
பாவம் அந்த மருமகன்.ஒரு வருடத்திற்கு மாமியார் வீடு பக்கம் தலை வைத்து படுக்க விடாமல் செய்து விட்டீர்களே, இப்படி!!! நியாயமா இது?
பத்மா அப்புறம் ஒண்ணும் ஆகலையே...சிரிப்புக்கு இல்ல சீரியஸா கேக்குறேன்
AMAAAAAAAAA "PULITZER"
அக்கா இன்னைக்கு லீவ் போட்டு வீட்ல இருந்தேன் .எனக்கு ரொம்ப கைவலின்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே .
நெஜம்மா சரியாபோச்சு க்கா
மாட்டுக்கு டைகர் பாம் தடவலமான்னு "புலி"கேசி புலவரை கேக்கலாமா? ராமமூர்த்தி சார்?
நீங்க டிவியில விளம்பரம் எல்லாம் பார்கிறது இல்லையா?... அப்படி பார்கிறது இல்லைனா சித்ரா மேடம் கிட்ட கேளுங்க அவங்க சொல்வாங்க..மூட்டுவலிக்கு எது பெஸ்டுனு!
பத்மாக்கா, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துகள்!!
இந்த font size அ கொஞ்சம் சரி பண்ணிட்டா , படிக்கிறதுக்கு இன்னும் நல்லாயிருக்கும்.
மாடு பாவம் , அந்த மருந்துதான் உங்க கிட்ட வந்துடிச்சே..(ஒருவேளை மாடு ஐயோன்னு கத்துமா )
//எனக்கு தலையும் சேர்த்து சுத்தியது.அது மாட்டின் மூட்டு வலி மருந்து !//......ஹாஹாஹா!
ஹஹஹஹா திட்டமிட்டு பழி வாங்கிட்டாங்களா லஷ்மியம்மா....
இப்ப அந்த மருமகன் எப்டியிருக்கார்.... ???
அன்பு பத்மா,
நல்ல நடை உங்களுடையது, உங்கள் கவிதைகளின் அடர்த்தியும் அலாதியானது. உங்கள் ரசனைத் தெரிவும் கூட.
அன்புடன்
ராகவன்
ஹா ஹா ஹா...சிரிச்சு முடியல.அழகான narration . சூப்பர்
இதை படித்து விட்டு எதாவது மருந்து கம்பனிக்காரன் மனுஷாளுக்கு இப்படி ஒரு மருந்தை தயார் பன்னினாலும் பண்ணுவான். எதுக்கும் இதை பேட்டன் பண்ணி வைத்தால் நல்லது...
interesting! romba nalla irukku!
ROFTL post madam........:) அக்கவுண்ட்ஸ்ல இருப்பவர்கள் மாடு மாதிரி உழைப்பதால் அந்த மருந்து உங்களுக்கு நல்லா வேலை சேஞ்சுதோ என்னமோ??...:)
ஜெனோவா fontsize கம்மி பண்ணிட்டேன் .இப்போ ஒ கே யா?
நெஜம்மா மாடு பாவம் தான் ஜெய்லானி நம்ம போட்டிய அது தாங்குமா? .
நன்றி பிரியா
ஆமாம் தமிழ் எத்தனை நாளா காத்துட்டு இருந்தாங்களோ
ராகவன் முதல் முதலா கருத்து சொல்ல வந்துருக்கீங்க .ரொம்ப தேங்க்ஸ்
தேங்க்ஸ் தங்கம் .
ரொம்ப கிண்டல் ரவி
thanks matangi for ur first visit and comment.:)
இப்போவாவது நா மாடு மாறி உழைக்கிறேன்னு சொன்னா நம்புவாங்களா?
thanks thakudu
சில வலிகளுக்கு இந்த மாதிரி அதிர்ச்சி வைத்தியம்தான் மருந்தாகி விடுகிறது. அ(எ)ருமையான சம்பவம்.
மாட்டுக்கு மூட்டு வலி வந்தால் எப்படி சொல்லும்?
எப்படியோ வலி போய்டுச்சே..அதைச் சொல்லுங்க...!!
தானை தலைவன் டவுசர் நாயகனுக்கு தெரிஞ்சா கோப பட போறாரு...... :))
மாட்டுக்குப் படிக்கத்
தெரியாதுங்கிறதாலேதானே
எல்லாரும் இந்த
அடி அடிக்கிறாங்க.
மூட்டு வலி இல்ல... இனிமே எந்த வலிக்கும் மருந்து கேக்க முடியாத படி பண்ணிட்டாங்க...
//அது கரெக்டா தெரில மேடம் ஆனா அவர் மாட்டு ஆஸ்பத்ரில வேலை பாக்குறாரு .இந்த மருந்து வலிக்கு நல்லா கேக்குதுன்னு சொன்னோன்ன நாலு பாட்டில் கொண்டு வந்து குடுத்தார் மேடம்"//
தேச்சது பரவாயில்ல... உள்ளுக்கு குடிக்கற மாதிரி ஏதாவது இருந்து, கார்த்தால எழுந்து பார்க்கும் போது, நீளமா ஒரு கொம்பு இல்லாம இருந்ததே, அது வரைக்கும் சந்தோஷம்...
“ஙே”
'தலைவலி போய் திருகு வலி வந்திடுச்சா?'
அடடா.. இப்படி கவுத்திட்டாங்களே :-)
//மாட்டுக்கு மூட்டு வலி வருமா?//
அதானே.
மருந்தால அலர்ஜி ன்னு சைட் எஃப்கட் இருந்துச்சா...
ஆமாம் அது பசு மாட்டுக்கா இல்லை எருமை மாட்டுக்கா?:)))))))))))கூல்...கூல்
Post a Comment