பாதி தேய்ந்த நிலவொளி கண்ணில் மிச்சமாய் இருந்தது....
தனியே நம் வீட்டு துணி காயும் கம்பியில் ஊஞ்சலாடும் மரங்கொத்தியின்
வண்ணத்தை இரவு உடை ஆக்கி அணிந்திருந்தேன் .
நம்மை மீண்டும் மீண்டும் காண வந்த கடலலை
வண்ணத்தை எல்லாம் கரைக்க பார்த்தது ,
நீயும் அதை நண்பனாகிக் கொண்டாய் !
கண்ணில் இருந்த வெளிச்சம் கைகொடுத்து
வண்ணத்திற்கு மாற்றானது
கசிந்து வரும் நிலவொளியை பருகி பருகி
பேய்த் தாகம் கொண்டு குடித்த நீரினால்
கடலும் வற்றி மண்ணில் புதைந்து போனோம் நாம் .
நாளை நிலவு வரும் வரை போதும் இது!
33 comments:
கவித.......கவித.......
fine padma...
அடுத்த கவிதை வரும் வரை எங்களுக்கும் இது போதுங்க...
வண்ணங்களை உருவகங்களை வைத்து அழகாய் நகர்த்துகிறீர்கள்.
getting rich padma. very good one.
நல்லாயிருக்குங்க...
-
DREAMER
அப்படின்னா என்ன ராஜப்ரியன்
அப்போ இதுவே போதுமா அசோக்
நன்றி ட்ரீமர்
நன்றி அதிரன் .என்னை பிரமிக்க வைக்கும் ஒருவரிடமிருந்து பாராட்டு .இனியநாளானது இன்று
thanks thenamaikka
anubhavithu ealuthiya kavathi ....
ரசனை மிக்க வண்ணங்கள். வாழ்த்துகள்
கசிந்து வரும் நிலவொளியை பருகி பருகி
பேய்த் தாகம் கொண்டு குடித்த நீரினால்
கடலும் வற்றி மண்ணில் புதைந்து போனோம் நாம்
அழகான வரிகள் ...(font size கொஞ்சம் சின்னதாக்கியிருக்கலாமோ என்று தோன்றியது )
மரங்கொத்தியின் வண்ணம்” நன்றாக உள்ளது..
கண்டிப்பா நாளை நிலவு வரும் ............வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
படித்தவுடன் ஞாபகத்திற்கு வந்த பாடல் இதோ :
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...
இன்று எந்தன் தலைவன் இல்லை, சென்று வா நிலா..
வாழ்த்துக்கள் பத்மா...
:)
அழகு..
appidi thonutha prabhu?
வாழ்த்துக்களுக்கு நன்றி கருணாகரசு
வாங்க பூங்குழலி மேடம் .இப்போ எழுத்து அளவ குறைச்சுட்டேன் .முதல் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி .அடிக்கடி வாங்க
நன்றி தேவன் மாயன்
ஹ்ம்ம் எனக்கும் தோணிச்சு .கோபி .நன்றி
வரட்டும் .எப்பிடியும் ஒருநாள் மட்டும் தன அம்மாவாசை சிகாமணி
சிவாஜி உங்கள் கவிதைகளின் ரசிகை நான்.உங்கள் வருகைக்கும் புன்சிரிபிற்கும் மிக்க நன்றி
நன்றி அன்பு
மரங்கொத்தி அல்ல மனங்கொத்தி..
நல்ல கவிதை பத்மா
நன்றி ரிஷபன் மனம் கொத்தியதா ?
நன்றி உயிரோடை
All the kavidhi" is nice but 2morrow moon will come was very nice heart touching one keep on writting
graphical and sensual .great.
Post a Comment