Monday, March 8, 2010
நன்றி !
கருவிலே உருவாக காரணமாயிருந்து
பெண்ணாய் வந்ததால் பேருவுகை கொண்டு
பிஞ்சு காலில் முகம் பதித்து வரவேற்று
பாராட்டி வரும் தந்தைக்கு முதல் நன்றி
நினைவிலே முதல் பிரியமாய்
நாளது வரை கூட வரும்
தூணென துணை நிற்கும்
தமையனுக்கு பின் நன்றி
வாழ்விலே காதலை கன்னியெனை
உணரசெய்து
ஆணெனும் அற்புதத்தை அடையச்செய்த
நண்பனாம் கணவருக்கு ஆயிரம் நன்றி
தாயென பெருமை கொள்ள
தரணியிலே வந்துதித்த என்
கண்ணின் மணியான கற்பக மகனுக்கு
காலமெலாம் என் நன்றி
வாழ்க்கை விளையாட்டில் மகிழ்ந்து, துவண்டு ,
வென்று, நின்று ,தோற்று ,மலர்ந்த நேரமெல்லாம்
தந்தையாய் தமையனாய் ஆசானாய் மகனாய் நண்பனாய்
உள்ளம் உவக்க வைத்து
மங்கையென பிறந்ததின் பெருமை அறியச் செய்த
பெண்களல்லா நட்புகெல்லாம்
நன்றி சொல்லி நன்றி சொல்லி என்று ஓய்வேன் நான் ?
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Happy Women's Day :)
நானும் நன்றி சொல்லிக் கொள்கிரேன். இதை படித்ததனால்...
thanks zeno
வாழ்த்துக்கள் மேடம், மகளிர் தினத்திற்கு அருமையாக ஆண்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்கள். வித்தியாசமா இருக்குங்க... :-)
மகளிர் தினத்திற்கு வித்யாசமான சிறந்த பதிவு. நன்றி பத்மா
அழகா எழுதி இருக்கிங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
Happy Women's Day Padma!
மிக அருமை பத்மா
மகளிர் தின ஸ்பெஷல் பதிவு மிகவும் அருமை...
-
DREAMER
நானும் உங்களுடன் உவகையை பகிர்கிறேன். :-)
சற்று தாமதம் தான் .... வாழ்த்துக்கள்..... மகளிர் தினம் மற்றும் இந்த அற்புதமான கவிதைக்கும் .
தாயென பெருமை கொள்ள
தரணியிலே வந்துதித்த என்
கண்ணின் மணியான கற்பக மகனுக்கு
காலமெலாம் என் நன்றி ..........azhagana varigal vaalthukkal
ரொம்ப வித்தியாசமான கவிதை. ரொம்ப யதார்தமாக இருக்கிறது.
பெண்களல்லா நட்புகெல்லாம்
வித்தியாசமாய் ஒரு நன்றி.. நல்லா இருக்கு
Post a Comment