நானே அடைந்த சிறையில் இனி ........
இடைவிடாது தின்ற இரையை
இப்போது தான் உடல் செரிக்கலாம்
தூங்காது நெளிந்த பொழுதெலாம் சேர்த்து
விழிக்காமலே கண் உறங்கலாம்
தூரத்து நிறுத்திய சுற்றெலாம்
வரும் கனவிலே கண்டு சபிக்கலாம்
வேண்டாது வளர்ந்த தோலினை
வண்ணம் மாறவே உதிர்க்கலாம்
சிந்தாத கண்ணீரெலாம் சிந்தி
சிறிது மனதினை வெளுக்கலாம்
பிறர் வெறுப்பிலே விளை வேதனை மறந்து
களிப்பிலே கொஞ்சம் ஆழலாம்
பிறப்பிலே ஒரு காரணம் வைத்த
கடவுளைக்காண செல்லலாம்
அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்
உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்
பின் விலங்குகள் உடையலாம்
உடலுமே நீளலாம், பல வண்ணமும் சேரலாம்
நாளை சூரியன் வான் நடக்கும் நேரம்
சிறிது காற்றையும் சுவைக்கலாம்
என் பெயரும் மாறி போகலாம்
47 comments:
படித்த ஒடனே எழுந்து ஓடலாம்
ஆஹா சூப்பர் என்று அளந்துவிடலாம்
lol
நல்லாயிருக்குண்ணே :)
thanks nna
unga kavithai super
நல்லா இருக்குங்க கவிதை
தேங்க்ஸ் தங்கமணி
அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்
உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்
....... very nice!
அந்த பட்டாம்பூச்சி பிறப்பின் இம்சையில் இன்னும் வலிகள் இருக்கின்றன
வரிகள் அருமை. வாழ்த்துக்கள்
அருமையான சிந்தனைக் கவிதை பத்மா மேடம்..
ரொம்ப நல்லா வந்திருக்கு.
சூப்பர் ஆ இருக்குங்க கவிதை.
இது கனவை பற்றியா இல்லை மரனத்தை பற்றியா குழப்பிட்டீங்கலே பத்மா :-))
நல்லா வந்திருக்கு..
ரெண்டவாது தடவை படித்த பின்னர் புரிந்து கொண்டேன்.
(எனக்கு பொது அறிவு கொஞ்சம்............ :)) )
நல்லா வந்திருக்கு.
சித்ரா தேங்க்ஸ் .i loved ur recent post on பிடித்த ஆண்கள்
ஆம் ரவி கொஞ்சம் தான் சொல்லிருக்கேன் . நிறைய சொன்னா ஓடியே போய்டுவாங்கோ
saravanan :) thanks
நன்றி வானம்பாடிகள்
ஸ்டார்ஜன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
thankyou mukundammaa
ஜெய்லானி இப்பிடிலாம் கேட்கக்கூடாது .அது என்னன்னு நானும் பாத்துட்டுதான் அதாவது யோசனை பண்ணிட்டு தான் இருக்கேன்
நன்றி ரிஷபன் சார்
அய்யா பரோட்டா நீர் கொடுத்து வைத்தவர் இரண்டாவது முறை புரிஞ்சுட்டு .எனக்கு இன்னும் புரில:(
கண்டிப்பாய் மாறும்....
மொத்தத்தில் கவிதை ஆழ்ந்து ரசிக்கலாம் அருமை அருமை..
கவிதையின் மூலம் சில கேள்விகள் மட்டும் தோணுது..
உங்கள் எண்ணங்கள் பறந்திருக்கின்றனவா? மிதந்திருக்கின்றனவா?
வரிகள் அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!!
நன்றி தமிழ்
யாரிடம் நாடோடி ?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மலிக்கா வாங்க .உங்க கருத்துக்கு நன்றி
இப்போதைக்கு உறைந்திருக்கிறது ஸ்ரீராம்
தேங்க்ஸ் ப்ரியா
அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்
உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்//
சித்ராவுக்குப் பிடித்த இந்த வரிகள் எனக்கும் மிகப் பிடித்து இருந்தன பத்மா அப்படியே நானே மறு பிறவி எடுத்த மாதிரி இருந்தது
தேங்க்ஸ் தேனக்கா
கற்பனை கண்ணுமண்ணு தெரியாம வருதே... என்னத்த சொல்ல?
நல்லாருக்கு.வாழ்த்துகள்
அன்பு பத்மா,
என் பெயரும் மாறிப்போகலாம்... கடைசி வரியில் கவிதை ஆரம்பிக்கிறது பத்மா!
அன்புடன்
ராகவன்
//என்னைச் சுற்றிய கூட்டில்
நானே அடைந்த சிறையில் இனி ........//
அதன் திறவு கோல் உங்களிடம்தானே
//என் பெயரும் மாறி போகலாம் //
ஆமாவா?
:)
கிண்டலுக்கு நன்றி ஆடுமாடு :))
ராகவன் நன்றி
வசந்த்
ஆமாவா? க்கு பதில் ஆமாம் தான்
ஆகா.. எவ்வளவு மாற்றங்கள்.. நல்லாருக்கு
ரொம்ப நல்லாருக்கு பத்மா!!
//அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்
உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்
பின் விலங்குகள் உடையலாம்
உடலுமே நீளலாம், பல வண்ணமும் சேரலாம்
நாளை சூரியன் வான் நடக்கும் நேரம்
சிறிது காற்றையும் சுவைக்கலாம்
என் பெயரும் மாறி போகலாம்//
********
மிக மிக அருமை...
இது போன்ற கவிதை வரிகளை
படிப்பதில் நானும் இனி கவிஞனாகலாம்...
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ........
நல்லா இருக்கும் நல்ல கவிதை.வாங்க இந்த பக்கம்.
/பிறப்பிலே ஒரு காரணம் வைத்த
கடவுளைக்காண செல்லலாம் /
pogumpothu ennaiyum koopidunga, naanum niraya kelvi kekkanum avanidam..!
ஒரு ஒய்வு நாளின் சாத்தியங்கள்.இல்லையா.ஒரு பெண்ணாய் இருப்பது இந்தியாவில் இருபத்தி நான்குமணி நேர வேலை.கிடைக்கும் அரிதான இடைவேளைகளில் இது போல் கவிதைகளை மேலும் செய்யுங்கள்.
Post a Comment