Saturday, March 6, 2010

ஒரு முன் மாலைப்பொழுதில்

எது சரியில்லையோ அதுவே சரியாய் போகிறது
அது ஆளரவமற்ற முன் மாலையில்
வராத சிறு தூக்கத்திலிருந்தும்
பெருமூச்சாய் புறப்பட்டு
வேப்பமரத்து உச்சி வெயில் காக்கையின் குரலாய்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது  .
நீளும் நிழலின் உள்சூட்டின் வெப்பம்
வாசல் தெளித்த நீரில் மண்வாசனையாய் எழுகிறது .
சரியில்லாதது சரியாய் தான் போகும் ..
என் கிணற்று நீர் படிந்த ,
உனக்காகவே ரோஜாநிறத்தில்  வண்ணம் பூசிய ,
என் கால் விரல்களை நீ வருடி
உள்ளங்காலில் முத்தமிடும் போது.

34 comments:

இராஜ ப்ரியன் said...

//சரியில்லாதது சரியாய் தான் போகும் ..
என் கிணற்று நீர் படிந்த ,
உனக்காகவே ரோஜாநிறத்தில் வண்ணம் பூசிய ,
என் கால் விரல்களை நீ வருடி
உள்ளங்காலில் முத்தமிடும் போது.//
class............

Ashok D said...

ஒரு தேர்ந்த அகிளா கிரேன் ஷாட்டுபோல வார்த்தை காமிராவில் அழகாய் நகர்த்தி செல்கிறீர்கள்… நின்று நிதானித்து நகரும் உங்கள் கவிதையும்..... மொழியும்... அழகு.

ஜெய்லானி said...

//உள்ளங்காலில் முத்தமிடும் போது//

அட.... அட...

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

'நீளும் நிழலில்'

இப்படியிருக்கணுமோ?

ரிஷபன் said...

நைஸ்

vasu balaji said...

நல்லாருக்கு

thiyaa said...

ஓ இப்படியெல்லாம் இருக்குமா?
அருமையான கவிதை

பத்மா said...

தியா :)

நினைவுகளுடன் -நிகே- said...

அருமையான கவிதை

உயிரோடை said...

//நீளும் நிழலின் உள்சூட்டின் வெப்பம்
வாசல் தெளித்த நீரில் மண்வாசனையாய் எழுகிறது .//

என்ன ஒரு சிந்தனையிது அருமையா எழுதி இருக்கீங்க பத்மா. வாழ்த்துகள்

அன்பேசிவம் said...

அருமையான நேரேஷன், மேடம். காட்சிக்குள் உட்புகுத்திகொள்ள முடிகிறது

குட்டிப்பையா|Kutipaiya said...

arumaiya iruku

அம்பிகா said...

//நீளும் நிழலின் உள்சூட்டின் வெப்பம்
வாசல் தெளித்த நீரில் மண்வாசனையாய் எழுகிறது .//
:-))

காமராஜ் said...

நிழலின் குளுமைக்குள் புதைந்துகிடக்கிறது வெப்பம்.
அசத்தல்.
பெருமூச்சை காக்கை பாடுகிறது.
க்ளாஸ்.

காமராஜ் said...

நிழலின் குளுமைக்குள் புதைந்துகிடக்கிறது வெப்பம்.

அசத்தல்.

பெருமூச்சை பாடுகிறது காகம்.

க்ளாஸ்.

தினேஷ் ராம் said...

// நீளும் நிழலின் உள்சூட்டின் வெப்பம்
வாசல் தெளித்த நீரில் மண்வாசனையாய் எழுகிறது .//


அருமை :D

வெப்பம் வாசனையாய் மாறுகிறது. நிறைய அர்த்தங்களை உள்ளடக்கிய வரிகள் போல. இரண்டு நாட்கள் ஆனது.. பிடிபட.

பத்மா said...

ராஜப்ரியன் முதல் கருத்துக்கு நன்றி

பத்மா said...

அசோக் என்னவோ சொல்றீங்க .எதோ எழுதறேன் .நல்லா இருந்தா சரி

பத்மா said...

ஜெய்லானி நன்றி:)

பத்மா said...

ஆடுமாடு நன்றி

பத்மா said...

ரிஷபன் தேங்க்ஸ்

பத்மா said...

வானம்பாடிகள் ஐயா நன்றி

பத்மா said...

அண்ணாமலையான், நினைவுகளுடன் நிகே இருவருக்கும் மிக்க நன்றி

பத்மா said...

உயிரோடை உங்கள் ரசிகை நான் .கருத்துக்கு நன்றி

பத்மா said...

தேங்க்ஸ் முரளி .இதைதான் எதிர்பார்த்தேன்

பத்மா said...

அம்பிகா :) :)

பத்மா said...

thanks kuttipaiya

பத்மா said...

காமராஜ் சார் வாங்க .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பத்மா said...

thanks diya

பத்மா said...

அர்விந்த் எழுதுவது ஒரு எண்ணத்தில் .படிப்போர் மனதில் தோன்றுவது வேறு எண்ணமாக இருக்கும் .அது தான் கவிதையின் அழகே .

பனித்துளி சங்கர் said...

மென்மையான உணர்வுகள் அழகாய் வார்த்தைகள் தொடுத்து கவிதையாய் . அருமை வாழ்த்துக்கள் !

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு பத்மா!

Priya said...

//என் கால் விரல்களை நீ வருடி
உள்ளங்காலில் முத்தமிடும் போது//...அழகு!

bogan said...

நன்று.நடுவில் கொஞ்சம் திணறி அற்புதமாய் முடிகிறது.