Monday, February 6, 2012

நிண்ட ஸ்வப்னத்தின் கிதாரில் எத்ர கம்பி?

யாருமற்ற பெருவெளியில்
ஒற்றைக்கோடாய்  படிகிறது
நிழலின் நிழலாய்
சுயம்
மன வீணையில்      
மீட்டப்பட்ட ராகங்கள்
பெரும் வாதையோடு
அலைந்து கொண்டிருந்தன
யாருக்காகவோ தன்னை
முடிபோட்டுக் கொண்டிருந்த
ஒரு தூக்குக் கயிற்றின் நிழலை
குனிந்து முத்தமிட்டது சுயம் .
வீணா கானம் தெறித்துச் சிதற
ஸ்வரங்கள் தூக்கிலாடின
எங்கோ ஒலித்தது ஒரு கேள்வி
ஜூலி!நிண்டே ஸ்வப்னத்தின் கிதாரில் எத்ர கம்பி ?
ஜூலி எண்ணிக்கொண்டே இருக்கிறாள் .  

(இந்த  வார  கல்கியில் பிரசுரமான கவிதை )  

11 comments:

Anonymous said...

//யாருக்காகவோ தன்னை
முடிபோட்டுக் கொண்டிருந்த
ஒரு தூக்குக் கயிற்றின் நிழலை// இன்னிலையில் கூட யோசிக்க முடியுமா? ஆச்சிரியம் தான்..வாழ்த்துக்கள் பத்மா.

ரிஷபன் said...

மன வீணையின் ராகங்கள் எப்போதுமே சுகமான புதுமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை!
அருமையிலும் அருமை!!

க ரா said...

அற்புதம் பத்மா.

சாந்தி மாரியப்பன் said...

அருமையிலும் அருமை..

கல்கி வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

adhiran said...

this is your best padma.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள் பத்மா'க்கா

Madumitha said...

நிழலின் நிழலாய் சுயம்..
மிக ரசித்தேன்.

rvelkannan said...

முதல் வரி ஒருவித சோர்வை கொடுத்தாலும் அடுத்தடுத்த வரிகளில் ஒரு பிரம்மிப்பும் வேறு நிறமும் கொள்கிறது கவிதை.
கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள்.

இது தமிழ் said...

அருமை. :-)

- சாம்ராஜ்ய ப்ரியன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.

"ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி