Tuesday, January 31, 2012

பாடகன்

மாபெரும் திரையடைத்து
புரியாத மொழியில்
எதோ பாடிக் கொண்டிருந்தாய்
காமிரா உன் கண்ணை ,உதட்டை
மீசையை
மிக அருகில் தொலை பரப்பிக் கொண்டிருந்தது .
இசை புக மறுத்து ,
உன் கழுத்து மருவை
நாவால் வருடி
யாரவது முத்தமிட்டு இருப்பார்களா? 
என்ற கேள்வியே
மேலோங்கி நின்றது ..
அதனை இடக்கையால் ஒதுக்கி
ஒலி உட் புக விட்டபோது
நீ கூறிக் கொண்டிருந்தாய்
இது வரை நீ பாடியது 
தாபத்தையாம்!!
  
 

7 comments:

ரிஷபன் said...

புரியாத மொழியைப் புரிய வைத்த கவிதை.

Admin said...

வணக்கம்.எனது முதல் வருகை.கவிதைதனில் நல்லதொரு மொழிநடை..தங்கள் தளத்தை தொடர்கிறேன்..

Anonymous said...

கள்ளி..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புரியாத மொழி புரிந்த மொழியை வாசித்த பின்தான் புரிய வந்ததோ?

காமராஜ் said...

அழகு மொழியிலும் அபாரமான உள்ளடக்கத்திலுமாக கவிதை சொக்கவைக்கிறது.

பத்மா said...

வாசித்த அனைவருக்கும் நன்றி ..திட்டாதீங்க தமிழ்,...:))

rishvan said...

arumai.... thanks to share... www.rishvan.com