எங்கள் வீட்டின் மற்றொரு நபர் போன்றவர்தான் சாந்தி .என் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கும் ,என்னுடன் காலை நேரம் தொலை பேசி இருப்பவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்
என் உடல் நிலை காரணமாகவும் ,போதிய பழக்கமின்மையினாலும் என் வீட்டுவேலைக்காக என் வீட்டிற்கு தினம் வருபவர் தான்.
காலைநேர பரபரப்பில் ஆயிரம் முறை சாந்தி என்ற பெயர் உச்சரிக்கப்படும் .
மிகவும் கடமை உணர்ச்சி உடையவர்.ஒரு வேலை சொல்லி விட்டு பின் மறந்து விடலாம் மிகவும் கச்சிதமாக அது முடிக்கப்பட்டு இருக்கும்.
யார் யாரோ வீட்டுவேலை செய்பவர்களைப் பற்றி எத்தனையோ கதைகள் கூறும் இந்த காலத்தில் ,தன்னுடையதில்லாத எந்த பொருளிலும் கொஞ்சம் கூட ஆசை வைக்காத ஜீவன் .
பல வருடங்கள் கூடவே இருப்பதால் taken for granted ஆகவே ஆகிவிட்டார் ..
ஒவ்வொரு புத்தாண்டும் என் தங்கை மகனின் பிறந்தநாளாகவும் இருப்பதால் காலையிலேயே தங்கையின் வீட்டுக்கு சென்று விடுவோம்
அதனால் அதிகாலையில் என் அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று வழக்கமாய் அவர்களுக்காக நான் வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து விட்டு வீட்டிற்கு வரும் போது தான் சாந்தி வந்தார் ..
நிறைந்த சிரிப்போடு அவருக்கு வாங்கி தந்த சேலையில் வந்து" நல்லா இருக்கா மேடம்ன்னு" வீட்டில் நுழைந்தார் ..
கையில் ஒரு பை.அதிலிருந்து ஒரு ரோஜா மலரை எடுத்து என் மகளுக்கு தந்து விட்டு, இருங்க மேடம் இதோ வரேன்னு போனவர் கையில் ஒரு தட்டு அதில் ஒரு சேலை ..
'இது உங்களுக்காக இந்த நியூஇயருக்கு" என்று கூறி கொடுத்தவுடன் நெகிழ்தே போனேன்
என் வாழ்கையிலேயே இது போன்ற ஓர் அன்பளிப்பு பெற்றுக்கொண்டதே இல்லை என்று தோன்றியது.
"என்னை நினைக்க யார் இருக்கிறார்கள்?" என்று சில சமயம் தோன்றும் கழிவிரக்கத்தை கோடாலிகொண்டு வெட்டி ஒரு positiveஆன ஆண்டை எனக்கு ஆரம்பித்து வைத்தது
அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ..
ஆனால் எனக்கு இது ஒரு வாழ்நாள் முழுவதும்
மறக்கவியலா அனுபவமாக அமைந்து விட்டதுதான் உண்மையிலும் உண்மை .
ரொம்ப தேங்க்ஸ் சாந்தி !