கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மனப் பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினைக் கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென மீண்டும் ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!
13 comments:
எப்படியிருக்கீங்க பத்மா மேடம் ....
நல்லா இருக்கேன் .ராமசாமி சார் .நீங்க நலமா?
மீண்டாச்சா:))
பத்மா மேடம் நலமா
கனவுகள் நனவாகும் :-)
வந்திட்டீங்களா?
மீண்டதைக் குறியீடாக்குகிறதோ "இன்று (மீள் பதிவு)"?
//நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்//
நல்லது. வாழ்த்துகள்!
புதுக் கவிதையை ஓரடி ஈரடி மூவடிகளாக எல்லாம் பத்தி பிரித்து எழுதுகிற வழக்கம் தமிழுக்கு ராஜசுந்தரராஜன் காலத்திலேயே வந்துவிட்டது. பொருள்புரிந்துவிடக் கூடாது என்றா இப்படி எங்கள் அக்கா போல் எழுதுகிறீர்கள்? (எங்கள் அக்காவின் கடிதங்கள் எல்லாம் முதல் வார்த்தையில் இருந்து கடைசி வார்த்தை வரை ஒரே பத்திதான்.)
//நடைமுறை முரண்கள்
கனவினைக் கொல்லும்!//
உண்மைதாங்க..
மீண்டு (ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்.
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
அதன் வழியே உங்கள் மீள் பதிவு..
ஹப்பாடா..
பத்மா அக்கா... மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி! கனவுகள் மெய்படும்
அய்ய இவ்வளவுதானா கனவுல... எங்க ஒரு கனவுல சுமார் நாலஞ்சு ஹாலிவுட் படங்கள் எடுக்கலாம் பல டிவுஸ்டுகளோட.. :))
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!
கனவு மெயப்படவேண்டும்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை பத்மா. கவிதையும் நீங்களும் மறுபடியும் வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாசிக்கத் தாருங்கள்.
Post a Comment