Tuesday, May 24, 2011

மாடிப்படி பூனை

ஆம்
இது மதிலில்லைதான் 
இடமா?வலமா? 
என மயங்கி நிற்க .
ஆயின் 
மொட்டை மாடி ஆசையில்
திடுதிடுவென படியேறும் சத்தம்
திடுக்கென 
எழுப்புகையில் 
மேலா கீழா வெனக்கூட  
தேர்விருப்பதில்லை .
என்ன முயன்றும் 
வால் மிதிபடுவதும் 
(ஆ)மாறுவதில்லை .
அரைக்கண் கனவுறக்கத்திலும்
"ஹோ"வென்ற கூச்சல்
குலை நடுக்கையில்...
இடமா வலமா
என முடிவெடுக்கவாயினும் 
ஓர்  உடைந்த
குட்டிச்சுவர் இருந்து தொலைத்திருக்கலாம்
இந்த மாடிப்படி பூனைக்கு !


27 comments:

r.v.saravanan said...

நல்லாருக்கு தோழி

இடமா வலமா
என முடிவெடுக்கவாயினும்
ஓர் உடைந்த
குட்டிச்சுவர் இருந்து தொலைத்திருக்கலாம்
இந்த மாடிப்படி பூனைக்கு !

அதானே

Chitra said...

Welcome back! How are you?

வெட்டிப்பேச்சு said...

//மொட்டை மாடி ஆசையில்
திடுதிடுவென படியேறும் சத்தம்
திடுக்கென
எழுப்புகையில்
மேலா கீழா வெனக்கூட
தேர்விருப்பதில்லை. //


அற்புதம்.

பூனையின் பதட்டம் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.

இராஜ ப்ரியன் said...

வருக வருக .......

bogan said...

അവസാനത്ത് ലൈന്‍ സൂപ്പര്‍ പത്മാ

Anonymous said...

poonai nelai manitharukum pala neram..eppadi padma ippadi ithaiyum rasichi ezhuthi irukenga...nice one da..

Matangi Mawley said...

:) so beautiful! ...

Madumitha said...

பூனைக்கும் அருள்வாய்
நெஞ்சே.

இராஜராஜேஸ்வரி said...

என்ன முயன்றும்
வால் மிதிபடுவதும்
(ஆ)மாறுவதில்லை .//
பாவம் மாடிப்படி பூனை"

பத்மா said...

@ சரவணன்
மிக்க நன்றி

hi chitra thanks doing good ...hope u too are !

நன்றி வெட்டி பேச்சு

@ராஜப்ரியன்
நன்றிங்க

ബോഗന്‍ വളര നന്ദി .തിരിച്ച് വന്നോ?സ്വാഗതം

thanks thanks
thamizh, matangi,madhumitha ,and raja rajeswari ..

A.R.ராஜகோபாலன் said...

உங்களின் படைப்புகள் கவிதைகளின்
புதிய பரிணாமத்தை சொல்லி
செல்வது அழகு

ரிஷபன் said...

பார்த்த காட்சிதானே?
அல்லது புகைப்படக் கவிதையா?
எதுவாயினும்
பூனையின் மனசைப் படம் பிடித்த மாதிரி

ஹேமா said...

பத்மா சுகம்தானே.நிறைய நாளாக் காணோம்.பூனைக்குட்டியோட வந்திருக்கீங்க.நல்லதே நடக்கும் !

ஹ ர ணி said...

அருமை பத்மா. எங்கள் வீட்டில் உள்ள லவ் பேர்ட்ஸ் கூண்டிற்கு அருகில் தினமும் இரவில் ஒரு பூனை அவற்றைப் பிடித்துத் தின்பதற்குத் தவம் இருக்கிறது. அதனைக் கண்காணிப்பதிலேயே இரவு கழிகிறது. இதைப்பற்றிக்கூட ஒரு கவிதை எழுத நினைத்திருக்கிறேன். இப்போது உங்கள் கவிதை பூனைக்காக. பூனையின் பிரதிநிதித்துவம் போல. அருமையான காட்சிப்பதிவு பத்மா. நீண்ட நாட்கள் காணவில்லையே என நினைத்திருந்தேன். வந்தாலும் காட்சியும் சுவையுமான கவிதை.

குணசேகரன்... said...

அழகோ அழகு.
http://zenguna.blogspot.com

சிவகுமாரன் said...

அந்தப் பூனையின் மிரட்சிப் பார்வை அப்படியே உங்கள் கவிதையில் . அருமை

சி.பி.செந்தில்குமார் said...

மதில்மேல் பூனை

kalapria said...

சூப்பர்கவிதை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Super kavithai? athu office cataa? allathu aaththu puunaiyaa?

கே. பி. ஜனா... said...

படி மேல் பூனையைப் படிக்கிற அழகான கவிதை!

Raju Ramalingam said...

nice

Ayyanar Viswanath said...

பத்மா, என்னுடைய மின்னஞ்சல் ayyanar.v@gmail.com

vidivelli said...

சகோ நீண்ட நாட்களிற்குப்பின் நலம் தானே...
அழகிய கவிதை
வாழ்த்துக்கள்....



!!எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு!!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல கவிதை.

கவிதை கீழிருந்து மேலாகவும் அர்த்தத்துடன் ஏறுகிறது

ஒரு பூனையைப் போலவே...

வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பூனைய வெச்சு ஒரு புனைவா... சூப்பர்... ஆனா எனக்கும் பூனயருக்கும் எப்பவும் ஆகாது...:))

மா.குருபரன் said...

நன்றாக இருக்கிறது தோழி. வாழ்த்துகள்.

மா.குருபரன் said...

நன்றாக இருக்கிறது தோழி. வாழ்த்துகள்.